https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 11 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 498 * தலைமையும் சமூகமும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 498

பதிவு : 498 / 684 / தேதி 11 டிசம்பர்  2019

* தலைமையும் சமூகமும்


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 12




காமராஜரை மிக சரியாக கணித்தது சண்முகத்தின் முதல் அரசியல்  வெற்றியென நினைக்கிறேன்  தனக்கும் அவருக்குமான இசைவு புள்ளியை அவர் கண்டடைந்திருக்க வேண்டும். அது உதவி கேட்பது , பெறுவது என்கிற இருமையை கடந்து ஒன்றிணைவது . ஒற்றை இலக்கு நோக்கிய பயணத்தை கொடுப்பது .அதற்கு அடிப்படை அன்றைய சுதந்திர போராட்டத்தில் இருந்தவர்களுக்கு நாடு” என்கிற சொல்லில்  தனி இனிப்பு இருந்திருக்க வேண்டும் . தொண்டாற்றுவதை கடமை என நினைத்தவர்கள் .காலத்தால் மக்கள் மனதில் ஏற்படும் மாறுதலால் அதை இழக்கும் போது அவர்கள் திகைப்படைகிறார்கள்

காமராஜரின் அரசியல் தோல்விகளுக்கு பல பின்புலம் இருந்தாலும் மக்களை கணிக்கத் தவறியது அதில் முதல் இடத்தை வகிக்கிறது என நினைக்கிறேன் . காரணம் அவர்கள் எளிய மக்கள் . போராட்டங்களும் கொள்கைகளை முடிவுகளும் அவர்களுக்கு அயலானவை .போரட்டமும் விடுதலை உணர்வும் கொண்டவர்கள் தன்னியல்பால் எழுந்தவர்கள். அவர்கள் குடிமை சமூகத்தின் சிறு சதவீதம் . மக்களை பிரதி செய்வதில்லை .மக்கள் தங்களின் அன்றாடங்கள் பொறுத்து கருத்து மாற்றம் அடைந்தபடி இருப்பவர்கள். தங்களைச் சுற்றி நிகழ்வதிலிருந்து திரள்வதை அல்லது திரள வைக்கும் கருத்தை முன்வைப்பவர்கள் நோக்கி சென்றுவிடுபவர்கள்.

வளர்ச்சி என்பது மிக நிதானமாக ஏற்படும் ஒன்று . கடந்ததை திரும்பிப் பார்ப்பது . அது நுண்ணுர்வுள்ள சிலர் செய்வது. அதில் பரபரப்பிற்கு ஏதுமில்லை . குடிமை சமூகமோ எப்போதும் பரபரப்பில் இருப்பது . அதற்கான செய்திகளை பின்னத் தெரிந்தவர்களை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் .

தனது ஆரம்ப காலத்தில் இருந்து அரசியலில் சண்முகம் , காமராஜரைவிட சரியான இடத்தில் தன்னை வைத்துக்கொண்டார் என்பதை அவரது அரசியலில் பிழைந்த்திருத்தல் நிரூபிக்கிறது .காமராஜர் தோற்ற இடத்தில் சண்முகம் வென்றிருக்கிறார் . காரணம் அவர் மக்கள் தலைவரில்லை . மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் அவரிடமில்லை . மாறாக அரசியலில் மல்வேறு அலகுகளில் முரண்பட்டு முயங்கும் அரசியலர்களுக்கு அவர் ஒரு ஒரு சமரசப்புள்ளி . யாருக்கும் போட்டியாக தன்னை முன்னிறுத்தி கொள்ளவில்லை . அதனால் அனைவரும் தன்னை நாடி வரும் பாதையை எப்போதும் திறந்து வைத்திருந்தார் . மாநில தலைமை என்பது சரசமும் விட்டுக்கொடுத்தலும் அடிப்படையாக கொண்டது . அனைத்தும் மாறிப் போனது அவர் புதுவை முதல்வர் பதவிக்கு மறைந்த ராஜீவ் காந்தியால் முன்மொழியப்பப்பட்ட பிறகு .

குடிமை சமூகத்தின் தேவையை உணர்ந்து அதை கொடுத்துக் கொண்டிருக்கும் வரை எல்லாமே மிக சரியாக இயங்கிக் கொண்டிருப்பது , அவர்களை காப்பது தங்கள்  வேலை என நினைப்பதும் ஜனநாயக அடிப்படை . ஆனால் அதற்குறிய சூழல் காலவதியானதும் அதிலிருந்து கசந்து விலகுவதும் கூட ஜனநாயகத்தின் ஒரு பகுதியே . மக்களுக்கு அவர்களுக்கு தேவையானது என்ன என புரியவைக்க முயல்வதோ. அந்த  எதிர்காலத்திற்கு அவர்களை தயாரிக்க முயலவதோ இயற்கைக்கு எதிரானது ஆகையால்  காலத்திற்கு ஒவ்வாதது ,சர்வாதிகாரத்தில் முடிவது . ரஷ்ய புரட்சி பின் அதன் தலைவர்கள் செய்ய முயன்றது அதைத்தான். எதிர்கால உலகிற்கு மக்களை தயாரிப்பது போன்ற அரசியல் அறியாமை பிறிதில்லை.

அரசியலின்  பால பாடம் எனக்கு மிக சிறந்த ஆளுமையிடமிருந்து கிடைத்தது எனது நல்லூழ் என இன்றளவும் நினைக்கிறேன் . இந்தப் பதிவுகளில் சொல்ல விழைவது , எனக்கு முன்னால் வாழ்ந்து மன்மறைந்த பெரும் தலைவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொள்ள முயல்வது  ,அவை   தலைமையும் அவர்களுக்கு மக்கள் தொடர்பினால் விளைந்தவைகள்அந்த இரு கூறும் இணையும் மற்றும் விலகும் புள்ளிகளுக்கு” இடையே நிகழ்ந்தவைகள் கற்பதற்கு உரியவை” என நினைக்கிறேன் . அந்த இணைவையும் பிரிவையும் கசப்படையாது கடந்து செல்வதற்கு நல்ல கற்றல் வாய்க்க வேண்டும் என நினைக்கிறேன் . நான் எனது மெய்மை தேடலை ஒருவகையில் துவக்கி வைத்ததும் அங்கு கற்றவைகளே என நினைக்கிறேன் . 

காமரஜரின் ஆழ்மனதை சண்முகம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இருவருக்கும் பொதுவானதை  இயற்றுவதன் வழியாக அவருடன் தனது அரசியல் பயணத்தை இணைத்துக் கொண்டார் .அவரின் பாதை திறந்து கொண்டது இந்த சந்தர்பத்தில். அதன் பிறகு காமராஜர் மண்மறையும்வரை அவரின் தொடர்பை சண்முகம் இழக்கவேயில்லை . காரணம் ஒரு தேவையை மட்டும் பற்றி உருவானதில்லை அவர்களுக்கான உறவு .

சென்னை செல்லும் போதெல்லாம் காமராஜரை சந்திப்பது ஒரு வழமையாக கொண்டிருந்தார் . காமராஜர் 1963 முதல்வர் பதவியில் இருந்து விலகிய சூழலிலும், அவர் கைவிடப்பட்ட சூழலில் கூட அவர்கள் நட்பு தொடர்ந்தது . அவர்களுக்கு இடையேயான உறவை நட்பு என்றே சொல்ல விழைகிறேன் , காரணம் நட்பு ஒரு தற்த்தேவையை ஒட்டி உருவானதில்லை என்பதால் .நடிகர் சிவாஜி கணேசன் , ஈவே.ராமசாமி , ஈவேகி சம்பத் , கண்ணதாசன் , ஜெயகாந்தன், கி.வீரமணி , எம்.ஜி ராமசந்திரன்  பொள்ளாச்சி மகாலிங்கம் , செட்டிநாட்டரசர், திமுக தலைவர் கருணாநிதி , கம்யூனிசஸ்ட் தலைவர் ஜீவா , பா.ராமசந்திரன், வெங்கட்ராமன் , கக்கன் .டிடி.கிருஷணமாச்சாரி , பகத்தவச்சலம் , ஜோதி வெங்கடாசலம் , பூவராகன் ஓமந்தூரார், பனங்கல் ராஜா போன்ற பன்முக தமிழக ஆளுமைகளை சண்முகம் அறிமுகப் படுத்திக் கொண்டது அங்குதான் .அவர்கள் அனைவரும் சண்முகத்தின் மாநில அரசியலில் முக்கிய நகர்வு புள்ளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை சண்முகம் விரிவாக சொல்லி இருந்தார் . அவற்றை இயலுமானால் இந்த வலைத்தளத்தில் பதிய முயல்கிறேன்

பூவராகனுடன் அவருடைய தொடர்பு இருவரின் இறுதிக்காலம் வரை நீடித்தது . பூவராகனை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது சண்முகம் .பின்னாளில் அவருடன்   இணைந்து தில்லியில் சில அரசியல் பணிகளை செய்ய வேண்டிய சூழல் எழுந்து அவருடன் பணியாற்றியதை மிக சிறந்த நாட்களாக எண்ணுகிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...