https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 21 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 503 *தலைமைகளுக்கிடையே பயணம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 503

பதிவு : 503 / 688 / தேதி 21 டிசம்பர்  2019

*தலைமைகளுக்கிடையே பயணம்


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 17





தமிழக அரசியல் களத்தில் 1980 முக்கிய நேரமாக இருந்தது . அவர்கள் ஆளும் அதிமுக வுடன் கூட்டணி வைக்க நினைத்தார்கள் . திமுக மற்றும் அதிமுக குறித்த இந்திரகாந்தி  முடிவுகளுக்கு வேறுபட்ட கருத்தை மூப்பனார் போன்றவர்கள் கொண்டிருந்த போதும் தமிழக அரசியலில் சண்முகம் இந்திராகாந்தியின் எண்ணத்திற்கு  ஒத்த கருத்தை கொண்டிருந்தார். அது அரசியலில் பிழைத்திருக்கும் வழி என சிலர் நினைத்ததுண்டு . ஆனால்  எந்த ஜன வசீகரமும் பெரும் அரசியல் திட்டமும் இல்லாதவரான ஒருவர் , தனது நுண் அரசியல் கருத்தாலும், நிலைப்பாட்டாலும்  நம்பகத்தன்மையை உருவாக்கிக் கொள்வதிலும் இருக்கும் போது தனது நிலையை காலத்தை ஒட்டி மாற்றிக் கொண்டே இருக்க இயலாது . அவர்களுக்கு எப்போதும் தங்களை பரபரப்பு அரசியலில் இருந்து விலக்கி வைத்துக்கொள்வதே இயல்வது .

இந்திராகாந்தி சண்முகத்தை புதுவை அரசியலை தாண்டி தமிழக  ஆசியலில் அவரை பயன்படுத்திக் கொண்டபோது  அவர் தமிழக அரசியலில் வலுவாக நிலை கொள்ள காரணமாயிற்று.  எல்லாவற்றிற்கும் அடிப்படை காமராஜரிடமிருந்து துவங்குகிறது . அவரே சண்முகத்திற்கு தமிழக காங்கிரஸ் அரசியலாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் , அங்கிருந்து பின்னர் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார் . தமிழக அரசியல் நுட்பங்களையும் , காங்கிரஸ் தலைவர்கள் செய்த பிழைகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார் . அதுவே இந்திராகாந்தியிடம் அவருக்கான இடத்தை உருவாக்கி கொடுத்திருக்க வேண்டும்.

இந்திராகாந்திக்கு சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் அவரை விட்டு விலகிய தலைவர்கள்  ஒன்று அரசியலில் இருந்து காணாமலாயினர் அல்லது காங்கிரஸிற்கே திரும்பி வந்தனர் .சண்முகம் தனது ஆழ்மனத்தால் இந்திராகாந்தியின் தோல்விகள் நிரந்தரமல்ல என கணித்திருக்க வேண்டும் அல்லது ஒருவரை தலைவரான வரித்த பிறகு அதை மாற்றிக்கொள்ளும்  எண்ணமில்லாதவராக இருந்திருக்க வேண்டும் .

நிஜலிங்கப்பா, காமராஜர் போன்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை பிளந்த  போதும் , ஜனதா அரசாங்கத்தால் இந்திராகாந்தி  கைது செய்து திகாரில் அடைக்கப்பட்ட போது அவர் பின்னால் உறுதியாக  நின்றார் . திகாரில் தங்கி இருந்து தினசரி அவரை சந்திப்பது அவரது வழமையாக இருந்தது . அன்றைய சூழலில் ஜனதாவின் எழுச்சி காங்கிரஸ் காலம் முடிவுற்றதாக சொல்லிற்று. புதுவை காங்கிரஸ் பிளவுபட்டு பலம்மிக்க இரண்டாம் நிலை தலைவர்கள் வெளியேறி புதுவை காங்கிரஸ் காலியான போதும் . தனது நிலையை சண்முகம் மாற்றிக்கொள்ளாது எடுத்த அரசியலில் உறுதியாக இருந்தார் .

1980 பாராளுமன்ற தேர்தல் இந்திராகாந்தியின் தலை எழுத்தை நிர்ணயிப்பது என்பதால் அவருக்கு பெரும் நம்பிக்கை அளிக்கும் தென் இந்திய மாநிலங்களின்  ஆதரவை முழுமையாக திரட்டப்பட்ட முடிவு செய்தார் . வெற்றிக்கு அன்றைய சூழலில் தமிழகத்தில் திமுக வுடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழி இல்லை . மூப்பனார் போன்றவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர் . மதுரை விமான நிலைய வரவேற்ப்பின் போது திமுக அவரை தக்க துணித்ததை அவர்கள் சுட்டிக்காட்டினார் . இந்திராகாந்தி எரிச்சலுற்றார் .

தனிப்பட்ட கோபங்கள் கட்சியின் வெற்றியை பாதிக்கூடாது  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாதிட்டு பார்த்தபோது, திமுக வுடன் அமைக்கும்  கூட்டணி தோற்கும் என இந்திராகாந்தியை குழப்பினர் . அவர் சண்முகத்தை அழைத்து உண்மை நிலவரம் கேட்டார் . தமிழக அரசியல் பற்றிய தனது நுண்ணறைவால் கூட்டணி பெரும் வெற்றியை அடையும் என தான் கணிப்பதை முன்வைத்தார்

இந்திராகாந்தி தன்னுடைய பிரதிநிதியாக கருணாநிதியை சந்தித்து பேச முடியுமா என வினவியபோது தயக்கமில்லாமல் ஏற்று திமுக தலைமை ரகசியமாக சந்தித்து கூட்டணி பற்றி பேசிய போது கருணாநிதி திகைத்துப் போனார் . அது சாத்தியமா என அவர் கேட்ட போது  அதை முடித்து கொடுப்பதாக வாக்கு கொடுத்தார் .திமுக வைத்த நிபந்தனை அதிமுக அரசு கலைக்க வேண்டும் என்பதாக இருந்தது . சண்முகம் முதலில்  திகைத்தலும் அதையும் செய்து கொடுப்பதாக சொல்லி தில்லி புறப்பட்டு சென்றார்  .

இரு தலைமைகளின் கௌரவம் பாதிக்காது திமுக தலைமை முன்வைத்த நிபந்தனை சொல்லி அந்த கூட்டணியை முடித்து வைத்தார் . காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தனது கோரிக்கையை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையை பெற்றார் .சண்முகமும் தனது  நம்பகத்தன்மையை பணயம் வைத்து ஆடி வென்றார் . அதுவே அவரது அரசியல் பாதையை முழுமை செய்து கொடுத்தது . தமிழக இரு திராவிட கட்சி தலைவர்களும் சண்முகத்தின் அரசியல் இருப்பை அறிந்து கொண்டார்கள் 

1980 ல் தமிழக அதிமுக ஆட்சியை கவிழ்தபோதும் பின்னர் 1983 புதுவை திமுக ஆட்சியை கலைத்தபோதும் அவற்றைக் கடந்து இரண்டு தலைவர்களிடம் சண்முகத்தின் நட்பு சீராக இருந்தது என்பது அவரது அரசியல் அணுகுமுறைக்கு . அரசியல் முடிவுகளும் தானும் விலகி நிற்பவராக அவரால் நிலைகொள்ள முடிந்தது என்பது வியப்பான செய்தி .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்