https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 3 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 495. * செயலின்மை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 495

பதிவு : 495 / 681 / தேதி 03 டிசம்பர்  2019

* செயலின்மை


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 09
சண்முகத்தை அதீத கூச்ச சுபாவியாக மிக தயக்கம் கொண்ட ஒருவராக அறிந்த போது சற்று குழம்பிப் போனேன் அவரை பற்றிய எனது மதிப்பீடுகள் என்னை திகைக்க வைத்தன . அவரது வெற்றிகள்  சாதாரணமானவைகள் அல்ல என்பதால் , அவர் தனது சுபாவத்தையும் , தாக்கத்தையும் எங்கு உதறி தனது செயல்பாடுகளை துவங்குகிறார்  என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்  .

அவர் தனது முதல் தடையாக  உணர்வது தன்னுடைய இயலாமை , போதாமை மற்றும்  குறைகள் பற்றிய மதிப்பீடுகள் .தன்னை முழுத்தறிந்த ஒருவர் தனது குறைகளை தயக்கமில்லாது அறிந்திருப்பார் . அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி அமைப்பில் செயல்பட வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதை மறுத்தார் . அது அவர் தனது போதாமையை நன்கு புரிந்திருந்தது காரணம் . தன்னை புதுவக்குள் சுருக்கிக் கொண்டாலும் காங்ரஸ் மற்றும் தமிழக  மாநில கூட்டணிகளுக்கு தில்லிக்கு சிறந்த ஆலோசகரை இருந்தார் . பல முறை கூட்டணி ஏற்பட அல்லது மாற அடிப்படை காரணமாக இருந்தார் . தன்னை அறிதலே அவருக்கு அது அவரின்  செயல்பாட்டின் போது எவற்றையும் மும்மடங்கு எண்ணி துணிய வைக்கிறது . ஒவ்வொரு செயலை செய்ய முற்படும் முன்புதன்னை திரட்டிக் கொள்கிறார்கள் .தனது  அடிப்படை இயல்புகளை கடந்தே வெளிவருகிறார் .தனது செயல்பாடுகளுக்கு பின்னர் தயக்கமில்லாது தன்  இயல்புகளுக்கு திரும்புகிறார் .

அது அரசியல் தற்செயல்களை வேறுவிதமாக பார்க்க வைக்கிறது என்பது மட்டுமின்றி . எத்தகைய சக்தி மிகுந்த பதவிகளில் அமரும் போதும் அதிலிருந்து விலகும் போதும் அவர்களது இயல்புகளுக்கு பாதிப்பில்லாமல் மீளவும் அதில் சென்று அமர இயலுகிறது   . சண்முகம் ஆளுமையாக பொலிந்தது இங்குதான் என நினைக்கிறேன் நான் சண்முகத்தின் அந்த சுபாவம்  குறித்துத்தான் அவதானிக்க முயன்றிருக்கிறேன் .

அரசியலில் பதவிகள் அதன் பயணப்பாதையின்  ஓய்விடம்   மட்டுமே , அதிலேயே இருந்து கொண்டிருப்பதோ அதை தக்கவைத்துக்கொள்ள ஆடுவதோ வீழ்ச்சியின் துவக்கமாக பார்க்கப்படுவது . புரிந்தவர்களுக்கு அது எப்போதும் அவர்களின் பின்னால் வந்து கொண்டிருப்பது .சண்முகம் தனது அனுமானங்களை கடந்து  தனது முதல் தேர்தல் அனுபவத்தை அடைந்த போது ஏற்பட்டிருந்த புரிதலே அரசியலில் அவரை முழுமையாக பிறித்து மீள் கட்டமைப்பு செய்திருக்க வேண்டும். எண்ணத் துணியாத அல்லது வழமையான பாதையில் இருந்து விலக நினைக்காதவர்கள் மத்தியில் அவர் ஒரு புரட்சியாளராக தெரிந்தார் என்பது வேடிக்கைஎந்நிலையிலும் அவர் புரட்சியாளர் அல்ல .  அரசியல்  எதார்த்தவாதி . அவரது இறுதி பத்தாண்டுகளில் அந்த யதார்த்தம்  அவரிடம் காணாமலான போது அவர் வீழ்ந்து கொண்டிருந்தார் .

முதல் பிரன்ச் புதுவை தேர்தல் டிசம்பர்  15, 1946 ல் நிகழ்ந்தது அதில்  குபேர் குழு வென்றதாக அறிவிக்கப்பட்டது  .சண்முகம் சுயேட்சையாக தேரந்தெடுக்கபட்டது ஒரு தவிர்க்க இயலாத சூழலில் .அன்று யாருடைய இருப்பில் கட்சி இருந்தது , என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதை விரிவாக முன்பே பதிவிடப்பட்டிருக்கிறது . அன்றைய சுயேட்சைகள் காங்கிரஸ் அமைப்பில் நிலவிய முரண்களுக்கு  எதிராக கிளம்பியவர்கள் .

அவர்களில் சிலரை கம்யூனிஸ்ட்கள் என முத்திரை இட்டு ஒதுக்கி வைத்திருந்தனர் . அந்த சூழலில் சண்முகம் காங்கிரஸ் அமைப்பிற்கு ஆதரவாக நின்ற போது ,கட்சி மாறி வந்தார் என்கிற குற்றச்சாட்டு அவருக்கு இருந்ததை அனைவரும் அறிந்ததே .சண்முகத்தின் காங்கிரஸ் ஆதரவு நிலை அவருக்கு ரெட்டியாரின் தொடர்பை ஏற்படுத்தியது. வழமையான பாணியிலிருந்து சண்முகம் மாறுபட்டிருப்பதை ரெட்டியார் உணர்ந்திருக்க வேண்டும் என்றாலும் சண்முகத்தின் கருத்து முதன்மை பெறவில்லை.

குபேரை விலக்கி முதன்மை ஆணையராக வந்த ரெட்டியார் 1959 முதல் 1963 பொதுத்தேர்தல் நிகழும் வரை பதவியில் இருந்தார் . குபேருக்கு எதிராக ரெட்டியார் தலைமையில் செயல் பட்ட குழு வெற்றி பெற்றிருந்தது . குழுவில் சண்முகம் ஒரு அங்கமாக இருந்தாலும் , தனது அனுபவத்தால் அவர் புதுவை அரசியலாளர்களை எப்போதும் நம்பியதில்லை . அதற்கு பிறிதொரு காரணம் இந்திய எதிர்பாளர்கள் சந்தர்ப்ப வசத்தால் அதிகாரத்திற்கு வந்ததுடன் , கட்சியையும் கைப்பற்றி இருந்தார்கள்  . அவர்கள் கட்சிக்குள் இருந்த   ஆரம்ப காலம் மிகுந்த குழப்பம் மிகுந்தது .புதுவை காங்கிரஸ் அமைப்பிலிருந்த  முக்கிய நிர்வாகிகளில் பலர் இந்திய இணைப்பு எதிர்ப்பு  மனச்சாய்வு கொண்டவர்கள் . அவர்களை  அமைப்பில் இருந்து விலக்காது புதுவை கட்சி அரசியலை அடுத்த கட்டத்திற்கு  நகர்த் முடியாது என்பதுதான் அன்றைய எதார்ததம் . அது அனைவருக்கும் புரிந்ததே.ஆனால் வழமை போல கட்சயில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ள எல்லாவிதாமன சமரசத்திற்கு உடன்படுபவராக அவர்கள் இருந்தனர் .

1949 ல் துவக்கப்பட்ட திமுக அமைப்பு மெல்ல வளர்ந்து  கொண்டிருந்தது . அவர்களது உணர்வுகளை தூண்டும் பரப்பியல் பேச்சு தமிழ் பேசும் மக்களை ஈர்கத்துவங்கி இருந்தது.தமிழகத்தில் காங்கிரசை  எதிர்த்து  திமுக வளர்ந்து கொண்டிருந்த நேரம் .அதன் சாயல் புதுவை காங்கிரசையும் பாதித்துக் கொண்டிருந்தது .

சண்முகம் தமிழக மற்றும் அகில இந்திய தலைவர்களுடனான அறிமுகத்தை அடைந்தது இந்த காலகட்டத்தில் தான் காமராஜரின் நெருக்கமான தொடர்பு விரிவடைந்தது .அந்த சூழலில்  கட்சி குபேரிடம் முழுவதுமாக அடக்கமாகி விட்டது  .1963 முதல் பொதுத் தேர்தல் நெருங்க  குபேரின் திரைமறைவு அரசியல் சூழ்தல் முழு வேகமெடுத்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக