https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 17 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 501 *அரசியல் ஐந்து *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 501

பதிவு : 501 / 687 / தேதி 17 டிசம்பர்  2019

*அரசியல் ஐந்து  


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 15



பொது அரசியலில் முடிவுகள் பலரும் இணைந்து உருவாக்குவது . அப்படி உருவான ஒன்றை சண்முகம்  முன்வைக்கும் முறையே பிறர் அவரை மறுக்க முடியாமைக்கு காரணம் .வறட்டு பிடிவாதத்தால் தன்னை மறுத்தவர்களை அவர் பிறிதெப்போதும் ஏற்பதில்லை என்பதே அவரின் அசையாத இருப்பு .அது உண்மையும் கூட. அதுவே எவருக்கும் அவரிடம் அச்சத்தை உருவாக்குவது .பிறர் அவரின் முடிவிற்கே  வந்து சேர்வதற்கு  முக்கிய காரணமும்  அதுவே . அன்று காங்கிரஸ் மட்டுமே புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயுட்காலம் வரை ஆண்ட கட்சி  .  அவர் அந்த கட்சியின்  மாற்றமில்லாத நீண்ட காலத்தலைவர் . அவரை பகைப்பது அரசியலில் அத்தனைப் பாதைகளை அடைப்பதற்கு நிகர் என நிலைத்திருக்கலாம் .

புதுவை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெருவது வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு என்றாலும்  . புதுவை தேர்தல் களத்தைப் பொறுத்தவரை கட்சியும் அதன் சின்னமும் எளிதான வெற்றியை கொடுப்பவை மட்டுமே  .அரசியலில் நுழையும் எவருக்கும் அமைச்சராவது கனவு என்பதால் அனைவரும் ஆட்சியில் அமரும் கட்சியை நோக்கி பயணப்படுவர்களே  . புதுவையில் காங்கிரஸ் பலமுறை ஆட்சி அமைத்ததினால் அதுவே மையப்புள்ளி . அதை ஒட்டியே பிற கட்சிகளும் அதன்    வேட்பாளர்களும்  தங்கள் நிலைபாட்டை வகுத்துக் கொள்கின்றனர் .

திமுக  , அதிமுக  இங்கு பிரதான எதிர்கட்சிகள். என்றாலும் தமிழக கூட்டணியே புதுவைக்கும் பொருந்துவது. பலமுறை அவை காங்கிரசுடன் கூட்டணி கண்டவை .எப்போதும் காங்கிரஸுடன் இணக்கமான போக்கையே கொண்டிருப்பவை . அதுவே தொகுதி உடன்பாட்டை இயல்பாக வைத்திருப்பது  , அதில் சில சமயம் வேடிக்கை நிகழ்வதுண்டுகுருவிந்த்தம் தொகுதி காங்கிரசிற்கு ஒரு முறை ஒதுக்கப்பட அன்றைய சூழலில் தியாகராஜன் அதிமுக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்தார்  .அவருக்கு மாற்று காங்கிரஸில் இல்லை என்பதால் குருவிந்த்தம் தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல்.

புதுவை கூட்டணி உடன்பாடு எப்போதும் கங்கிரஸ் 20 பிற 10 கூட்டணி கட்சிக்கு என்றிருப்பது . பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குருவிந்த்தம் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது .அதை அதிமுக விற்கு கொடுத்தால் அதுவரை வடிவமைத்து முன்னகர்ந்த அரசியல் கணக்கும் ஏற்பட்ட  பிற தொகுதிகளுக்கான உடன்பாடும்   குளறுபடியாகும் .  சண்முகம் தியாகராஜனை அழைத்து காங்கிரசில் நிற்க சீட்டு கொடுத்ததும் , புதுவை அதிமுக தலைமை திகைத்து நின்றது

அதிமுக முன்னாள் தலைவரான D.ராமசந்திரன் அதிலிருந்து திமுக வில் ஐக்கியமாகி பின்னர் , அதிலிருந்தும்  விலகி 1985 தேர்தல் நேரத்தில் மரைக்கார் மூலமாக காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார் .1980 ல் காங்கிரஸ் திமுக வுடன் கூட்டணி அரசு அமைத்த போது முதல் முறையாக முதல்வர் பதவியை திமுக விற்கு விட்டுக் கொடுத்து D.ராமசந்திரன் முதல்வராக மூன்று ஆண்டுகள் பதவி வகித்தார் . தில்லியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்து மீளவும் இந்திராகாந்தி முழுபலத்துடன் திரும்பி வந்திருந்தார் .இந்திரகாந்தியிடம் சண்முகத்தின் செலவாக்கு உச்சத்தை அடைந்திருந்த நேரம் . அந்த சூழலில் சண்முகம் தமிழக அரசியல் களத்தில் மறுக்க முடியாத ஆளுமையாக உருவெடுத்திருந்தார். ஏறக்குறைய அவரை பற்றிய அரசியல் ரீதியான மதிப்பீடுகள் முழுமை அடைந்தது அந்த காலகட்டத்தில் என நினைக்கிறேன்.அதை ஒட்டி உருவான பிம்பம் அவருக்கு கடைசிவரை நீடித்தது .

1980 ல் முதல்வராக ராமசந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து சண்முகத்திற்கு வேண்டாதவரானார் .ராமசந்திரன் குறித்து சண்முகத்திறகு நல் அபிராயமில்லை .அதற்கு அடிபடையான காரணம் அவர் முதல்வராக வந்த முறை . திமுக வின் பழம் தலைவர் MA.சண்முகம் முதல்வராக வந்திருக்க வேண்டியவர் .அவர்கள் அனைவரும் சென்னையில் முகாமிட்டிருக்க , திமுக தலைமையை சந்திப்பதில் இழுபறி நிலவியது .தமிழகத்தில் பெரும் வெற்றி பெரும் என எண்ணியிருந்த நேரத்தில் அது அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்ததுD.ராமசந்திரன் MA.சணமுகத்திடம்  அறிவாலத்தில் இருந்து மறுநாள் அழைப்பு வரும் என தவறான தகவலை சொன்னார் .மது அருந்தும் பழக்கமுள்ள MA.சணமுகம் அதை நம்பி மாலை மது அருந்தி நிதனமிழந்த பிறகு ராமசந்தின் MA.சண்முகத்திடம் அறிவாலய அழைப்பு வந்திருப்பதாக சொல்லி அழைத்து சென்றனர் . MA.சணமுகத்தின் நிலையைப் பார்த்த திமுக தலைமை அதிருப்தியுற்று ராமசந்திரனுக்கு முதல்வர் பதவியை தந்தது என ஒரு முறை தலைவர் சண்முகம் சொன்னார் .

D.ராமசந்திரன் மந்திரி சபையில் பல விஷயங்களில் சண்முகத்தின் அரசியல் இருப்பை கேள்ளிக்குறியாகிய போது அவரது செயல்பாட்டால்  கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சண்முகம் , கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை விலகிக் கொள்ள ஆட்சி கவிழ்ந்தது .இப்போது அவரை கட்சியில் சேர்க்க மரைகார் முயற்சிப்பது முக்கிய கூட்டணியான அதிமுக வை பாதிக்கும் .வழமை போல மரைபாரிடம் சண்முகம் மறுப்பு சொல்லாமல் சென்னைக்கு சென்று காத்திருக்க சொன்னார் .முதலில் குழம்பினாலும் தில்லி அழைத்துச்செல்ல விழைந்திருக்கலாம் என சென்னையில் காத்திருந்தனர் .சண்முகம் அவர்களை நேரே தமிழக முதல்வர் MG.ராமசந்திரனை சந்தித்து D.ராமசந்திரனையும் அவருடன் வந்த அனைரையும் அதிமுக வில் சேர்த்து விட்டார் .ராமசந்திரனும் மரைகாரும் திகைத்து போயினர் . அப்போதைய தமிழக முதல்வர் MG.ரமசந்திரனிடம் சண்முகத்திற்குள்ள செல்வாக்கு அப்படிப்பட்டது .அதிமுக விற்கும் சேர்த்து  புதுவைக்கு சண்முகமே தலைவர் எனும் பகடி” புதுவை பிரசித்தமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்