ஶ்ரீ:
அடையாளமாதல் - 496
பதிவு : 496 / 682 / தேதி 07 டிசம்பர் 2019
* காலக் கணக்கு *
“ ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 10
வேட்பாளர் தேர்வில் இரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்கும் முயற்சி முழு வெற்றியடையவில்லை . குபேருக்கு அதனால் பாதிப்பதில்லை. ஒருவகையில் அவர் எதிர்பார்த்தது அதைத்தான் . ரெட்டியார்தான் பாதிக்கப்பட்டார் . இந்த சிக்கல் களத்தில் கடுமையாக எதிரொலித்தது . தேர்தல் சமயத்தில் காழ்ப்பு யாரையும் எங்கும் இட்டுச் செல்லாது என ரெட்டியார் குழு நினைத்தது.
களச்சிக்களை உருவாக்கிய குபேருக்கு இழப்பதற்கு ஒன்றில்லை . ஆனால் ரெட்டியார் அப்படி விட முடியாது. தமிழக தலைவர்களின் உதவி கோரப்பட்டதும், காமராஜர் தன்னால் இயன்றதை செய்தார் . நேருவின் நிலை அவரின் முன்முடிவுகளுக்கும் , சர்வதேச சிக்கல்களுமே முன்னிலை வகித்தது . நேரு காமராஜரிடம் “புதுவை கட்சி விஷயத்தில் நீங்கள் தன்முனைப்பாக ஏதும் செய்ய வேண்டாம்,அதை அந்த மாநில அமைப்பிற்கு விட்டுவிடுங்கள்” என கறாராக சொல்லியபின் காமராஜரால் நேரடியாக புதுவை கட்சி விஷயத்தில் தலையிட முடியவில்லை . அது குபேருக்கு சாதகமாக விழுந்த முதல் தாயம் .
காங்கிரஸ் அமைப்பிற்கு எதிராக குபேர் உருவக்கிய தேர்தல் சூழல் அவருக்கு நேரடி பலனையும் , பொதுவில் மறைமுகமாக பிறிதொரு விளைவையும் உருவாக்கி இருந்தது.களத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் , குபேர் நிறுத்திய சுயேட்சை வேட்பாளர்களும் கடுமையாக மோதி கம்யூனிஸ்ட் அமைப்பை மூன்றாவது இடத்திற்கு தள்ளினர் . அதனால் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது . பின்னர் அதிலிருந்து அந்த அமைப்பு ஒருபோதும் எழுந்து வரவில்லை. சுப்பையா முதலியார்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்றார் அவருடன் மேலும் மூவர் வெற்றி பெற்றனர் . அதில் முக்கியமானவர் சுப்பையாவின் மனைவி சரஸ்வதி சுப்பையா .

குபேரன் திட்டப்படி ஏகமனதாக முதல்வர் தேர்வு நடத்முடியாத சூழல் எழுந்ததும் , மேலிடப் பார்வையாளரகள் அனைவரையும் அனைத்து செல்லும் வாய்பபு உள்ளவருக்கு முதல்வர் பதவி என் சொல்லிவிட்டது . ரெடியாரால் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் இருந்து தனக்கு தேவையான பெரும்பான்மையை எட்ட முடியவில்லை . அவர்கள் காத்திருக்க முடிவு செய்தார்கள் . குபேர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
1964 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்றது சுயேட்சை 5 கம்யூனிஸ்ட் 4 இடத்தில் வென்றார்கள் . இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை காலம் . திமுக விற்கு அடித்தளம் இடப்பட்டது இந்த சூழலில் . குபேர் தெரிவு செய்திருந்த 11 சுயேட்ச்சைகள் பலர் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதில் 5 பேர் வென்றாலும் 6 பேர் இரண்டம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது .அவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் அஷ்ரப் , பெருமாள் ராஜா, சுப்பிரமணிய படையாச்சி , இஸ்மாயில் மரைகார் போன்றவர்கள் .அவர்களில்அனைவரும் பின்னாளில் திமுக வில் இணைந்தனர் .
குபேர் உருவாக்கிய இந்த அமைப்பே பிற்கால திமுக .ஒரு கட்டத்தில் குபேர் காங்கிரஸில் இருந்து வெளியேறி திமுக வில் இணைந்தார் .அதன் பிறகு அவரது அரசியல் ஒரு முடிவிற்கு வந்தது . பல விதங்களில் மனம் கசந்த குபேர் அரசியலில் இருந்து ஒதுங்கினார் . அவர் உருவாக்கிய சுயேட்சைகளில் பலர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றனர் .அவர்களில் சிலர் வென்றிருந்தால் இன்றைய புதுவை அரசியல் வேறு விதமாக இருந்திருக்கலாம் . காலத்தின் மறைவான பக்கங்களில் ஒரு செய்கையின் வளர்சிதை மாற்றம் சில சமயங்களில் அதை உருவாக்குபவருக்கு எதிராகஇருந்து விடலாம் என்பதை வியக்கத்தகு விந்தை .
தேர்தலில் காங்கிரஸ் அமைப்பு வென்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவானதும் , முதல்வர் தேர்வு மிக சிக்கலானதாக மாறியிருந்தது .பல கட்ட பேச்சு வார்தைகளின் பின்னர் குபேரன் அரசியல் சூழ்தல் வென்றது . கட்சியையும் அதை கடந்து சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று குபேர் புதுவையின் முதல் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்றார் .அந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் அமைப்பு கணிசமான வெற்றியை பெற்றிருக்க வேண்டும் .ஆனால் நான்கு பேர் வென்று எதிர்கட்சியாக அமர்ந்தனர் .பின் ஒருபோதும் அந்த இலக்கை அடையவில்லை .
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று நகர பகுதிகளில் குபேருக்கு இருந்த செல்வாக்கு கிராமப்பகுதிகளில் இல்லை .பிறிதொன்று அவருடைய சொல்லை ஏற்று தேர்தலில் நின்றவர்கள் பெரும் பொருளியல் பலம் கொண்டவர்கள் .அவர்கள் மத்தியில் குபேருக்கு இருந்த செல்வாக்கு அபரிதமானது . கிராம புறங்களில் ரெட்டியார் போன்றவர்களின் செலவாக்கு ஓங்கியிருந்தது . அதனால் அமைப்பு ரீதியில் முக்கிய இடத்தை பெற்றிருக்க வேண்டிய கம்யூனிச இயக்கங்கள் இரண்டு பகுதிகளிலும் வெல்ல முடியாது போனது .
ஒரு வகையில் கம்யூனிச இயக்கங்களே அப்போது பிரதான எதிரமைப்பாக இருந்திருக்க வேண்டும் . அவர்களின் அரசியல் கொள்ளகை முடிவுகளில் இருந்த உறுதி அவர்களைத் தோற்கடித்திருக்க வேண்டும் . அல்லது ரஷிய புரட்சி மீதான அச்சம் , நிலவுடைமை சமூகத்திற்கு கம்யூனிச அமைப்பு வளரக்கூடாத இயக்கமாக பாரக்கப்பட்டிருக்க வேண்டும். கம்யூனிச அமைப்புகளின் தோல்வி புதுவை அரசியலில் குபேரின் அடைப்படை இடத்தையும் , அவரது ஆதார ஆரசியல் இருப்பின் தேவையும் தகர்த்து விட்டது என்பது நகைமுரண் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக