https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

* செங்குத்து தோட்டம் *

ஶ்ரீ:




பதிவு : 689 / தேதி 22 டிசம்பர்  2019

செங்குத்து தோட்டம் * 

செங்குத்து தோட்டம் எதுவும் தெரிந்திருக்கவில்லை .சில மாதங்களுக்கு முன்பாக யாராவது சொல்லியிருந்தாலும் அது புரிந்திருக்காது என நினைக்கிறேன் .வீட்டில பல இடங்களில் செடி வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பல வருடங்களாக மனதில் இருந்து கொண்டிருக்கும் ஒரு விழைவு அல்லது ஒரு கனவைப்போல .ஆனால் அது வழமையான பாணியில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் மட்டும் தெளிவாக இருந்தேன்





ஒரு விஷயத்தை மிக எளிதில் செய்வதும் , பார்க்க மிக உயர்ந்த தரத்தில் இருப்பதாக உணரசெய்வது எனது பாணி . அதிக அவிலை கொடுத்து ஒரு உயர்ந்த பொருளை உருவாக்குவதில் என்ன இருக்கிறது . அதற்கு செலவிடும் பொருளியலே அதை செய்ய போகிறது .அதில் நாம் தனித்து செய்ய என்ன இருக்கிறது என நினைப்பதுண்டு . எனவே மிக குறைந்த செலவு , சற்று பிரமிக்க வைக்கும் ஒன்றை உருவாக்குவதை எப்போதும் விரும்புவேன் .



செங்குத்து தோட்டம் எப்படி திட்டமிட்டாலும் மிகவும் செலவெறியதாக இருந்ததால் அந்த எண்ணம் அவ்வப்போது எழுவதும் பின்னர் கைவிடப்படுவதுமாக இருந்தது . சில சமயம் சில எளிய பொருட்கள் பிரமாண்டங்களை உருவாக்கி விடுகின்றன . மிகச்சிறிய பிளாஸ்டிக் டேகும் , துணி உலரவைக்கும் கம்பி , கொஞ்சம் வெல்டெட்  மெஷ் என் கனவிற்கு வண்ணம் கொடுக்க அனைத்தையும் மாறியது.




அமேசானில் அதற்கு வேண்டிய சிறிய தொட்டிகள் கிடைத்த போதுதான் போதுதான் செங்குத்து தோட்டம் பற்றிய முழு தகவலை அறிந்து கொண்டேன் சிறிது சிறிதாக அறிந்து கொண்டேன்  . அதன் பின்னர் அதை பற்றிய கற்பனைக்கு எட்டாத செய்திகளும் புகைபடத் தொகுப்புகளும் என் அன்றாட வாழ்வில் நுழைந்தது .




பின்னர் மாடி தோட்ட வேலை எனது முழு கவனத்தையும் எடுத்துக் கொண்ட்து . மிக விரிவாக அதை அமைக்க முயற்சித்தாலும் பல நடைமுறை சிக்கல் எழுந்து அவற்றை எண்ணியபடி அமைக்க தடைகளாயின  



.ஒன்று மாறும் பருவ காலம் பிறிதொன்று அணில்களில் இடமிருந்து . இங்கு என்னவோ நிகழ்ந்து அவை தனது அடைப்படை குணத்தை மாற்றிக்கொண்டன என நினைக்கிறேன் . வீட்டிற்கு வெளியே மட்டும் காணப்படுபவை மிக அரிதாக வீட்டிற்குள் வரும் மிக அழகனான ஒரு பிராணி அணில்  ஆனால் இன்று எலி என்னென்ன அட்டகாசம் செய்யுமோ அதை அனைத்தையும் அணில்கள் செய்யத்துவங்கி திகைப்பை கொடுக்கின்றன 



செடிகளை நாசம் பண்ணதுவாகிய போது ஆச்சரியமளித்தது ஆனால் அவை மெல்ல வீட்டிற்குள் வந்து செய்யும்  காரியங்களால் கோபம் எழுவதை தவிர்க்க இயலவில்லை . நினைத்த செடிகளை வளர்க்க முடியாது செய்து விட்டது . பின்னர் அது அதிகம் ஆர்வம் காட்டாத செடிகளை வளர்க்கத்துவங்கி அது கள்ளி செடிகள் பக்கம் கவனத்தை கொண்டு சென்றது சில சமையம் அதையும் அணில் விட்டுவைத்தில்லை . இது முதலில் எனக்கு மட்டுமே நேர்வதாக நினைத்தேன் ஆனால் அதன் பின்னர் பல வீடுகளுக்கு இதுவே நிலை என தெரிந்து கொண்டேன் . 



கால மாற்றுதல் போல என புரிந்தது . சிட்டுக்குருவி கூட அளவில் சற்று பெரிதாக தோன்றுகிறது , அத்துடன் வேறு சில வகையான குருவிகளை இப்போது பார்க்க முடிகிறது ஏறக்குறைய தேன் சீட்டின் போல இருக்கிறது .ஒரு வகையில் சிட்டுக் குருவி உறவு போல அத்துடன் இணைந்தே வருகிறதுஇந்த மாற்றம் எப்போது நிகழ்ந்து என ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்தது.



சில நாட்களுக்கு முன்பாக சிறிய ரக  கள்ளி செடிகளின் ஒன்றின் முனையில் சிறிய கட்டமாக ஏதோ  ஒன்று தனித்து தெரிந்தபோது அது என்ன என புரியவில்லை , ஆனால் சில நாட்களுக்கு பின்னர் அது வெண்மை நிறம் கூடியபடி இருந்தனபோதுதான் அது பூ என அறிந்துகொள்ள முடிந்தது இன்று காலை முழுமையா பூத்த அதன் வடிவமைப்பும் வண்ணமும் மனதை ஈர்ப்பதாக இருந்தது .







கள்ளிச்செடி” அது எத்தனை காயப்பட்டிருந்தால் இத்தனை முள்ளை உருவாக்கி இருக்கும் . 























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்