https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 505 *ஆழுள்ளம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 505

பதிவு : 505 / 691 / தேதி 25 டிசம்பர்  2019

*ஆழுள்ளம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 19




புதுவை காங்கிரஸ்  அரசியல் காமராஜரை சார்ந்திருப்பதாக எண்ணியது சண்முகம் அவரை தாண்டி பிறிதெவருக்கும் எந்த காமராஜரை வைத்து எந்தக் கணக்கும் இல்லை. குபேர் அழைத்து காமராஜர் வந்தாரென்றால் அவர் அனைவருக்கும்  பொதுவில் இருக்கிறார் என அர்தமாகிவிடும். ஒருவேளை காமராஜரே கூட அப்படி நினைக்க வேண்டி வரலாம்  . குபேர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சொல்ல விழைவதும் இதைத்தான். அவர் எதிர்நோக்குவது ஒரு சரி செய்ய இயலாத பிளவு . அது மட்டுமே அவரை அரசியலில் பிழைத்திருக்க வைக்கும் . ஆனால்  புதுவை அரசியலில் எக்காலத்துக்குமாக புதிய அமைப்பை உருவாக்கி விடுவதுடன் , ஜனநாயகத்தை அர்த்தமிழக்கவும் செய்யக்கூடும் . மேலும் தனக்கான  வாய்ப்பும்  தூர்ந்தும் போகலாம் என சண்முகம் அஞ்சினார் . புதுவை அரசியலில்  காமராஜரின் முக்கியத்துவம் உணரப்படாத சூழலில் அதை தடுத்து நிறுத்த வேண்டிய இடத்தில் சண்முகம் மட்டுமே இருந்தார் . ஒரு வித மனவெறுப்பை கொடுக்கக்கூடிய சூழல் அது .

சென்னைக்கு அப்போதெல்லாம் பேரூந்து வசதி புதுவைக்கு தமிழக எல்லைப் பகுதி கோட்டக்குப்பதில் .  அங்கிருந்து  அதிகாலை பேருந்துகள் கிளம்பும் . பேருந்தை பற்றிய வர்ணனனையை பலமுறை சொன்னதுண்டு . பேரூந்துகளுக்கு இப்போதுள்ள மாதிரியான “சுயக்கிளம்புதல் மற்றும்  சூடூட்டும் செயல்முறைகள்எல்லாம் அந்த காலத்தில் இல்லை . இரவெல்லாம் வெளியில் நின்று குளிர்ந்து போன இன்ஜினை சூபடுத்த அதன் அடியில்  கரிக்கொட்டி எரிப்பது வழமை. அதை அடுத்து முன்புறம் லிவரை சுற்றி பேன் பெல்ட்டை சுற்றவைத்து வண்டியை கிளப்புவது அசகாய வேலை

தகவல் கிடைத்த அரைமணி நேரத்தில் சண்முகம் கோட்டக்குப்பதில் இருந்தார் .புதுவை  சென்னை ஆறுமணி நேரப்  பயணம் . வழி முழுவதும் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்கிற சிந்தனையோடு பயணப்பட்டார் . காமராஜர் மிக நுண்ணிய புரிதலுடன் உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதில் சமர்த்தர். தவறான ஒரு சொல்லாடல் முழு ஆதரவையும் இழக்க வைத்துவிடும் . காமராஜரின் அனுகுமுறையும் குணத்தையும் ஒத்த அனுகுமுறையே சண்முகமும் கொண்டிருந்தார் என நினைக்கிறேன் . அரசியலை மிக நுட்பமாக புரிந்து கொள்ளும் , புரிந்து கொண்டதை மிக நளினமாக வெளிபடுத்தி விளையாடும் லாவகம் அப்போதைய இந்திய தலைவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் . அவை விடுதலைக்கு பின்னர் எங்கும் பரவி இருந்து எழுந்த ஊக்கமாக இருக்கலாம்.

சென்னையில் காமராஜர் குடியிருந்த பகுதி ஆரவாரமற்று அமைதியாய் இருந்தது . ஓரிரு கட்சிக்காரர்கள் வெளியில் அமர்ந்திருக்க , சண்முகம் காமராஜரின் உதவியாளர் வைரவனை அழைத்து தான் வந்திருப்பதை சொல்லச் சொன்னார் . வைரவன் காமராஜரின் அனுக்க உதவியாளர் . அவரது இறுதிக் காலம் வரை அவருடன் இருந்தார் . மிக நுட்பமானவரும் கூட . புதுவையில் இருந்து காமராஜருக்கு வந்த அழைப்பை பற்றி சொன்னார் . அவரிடம் காமராஜர் என்ன சொல்லி அனுப்பினார் என கேட்டபோது சிரித்படிஆவட்டும் பாக்கலாம்எனக் கூறினார் என்றார் . காமராஜரின் வழமையான சொல்லாடல் .அதற்கு என்ன அர்த்தம் என சண்முகம் அறிவார் .

புதுவை காங்கிரஸில் நிலவும் அசாதாரன நிலை புதிதல்ல அவை பிரன்ச் இந்திய காலத்திலிருந்து தொடர்ந்திருந்தது வருவதுதான் என்றாலும் பிரன்ச் காலத்தில் இருந்த நிலை இன்னும் மாறவில்லை என்பது போன்ற தோற்றம் புதுவை காங்கிரஸ் அரசியலை அழித்து விடும் , தமிழகம் ஒரு விதத்தில் அதற்கான உதாரணம் என நினைத்தார் . தமிழக அரசியலில் காமராஜர் ஏறக்குறைய தோற்றுக் கொண்டிருந்தார் . அவர் தன்னை மீட்டெடுக்க பிறிதொரு அனுகுமுறை தேவையாய் இருந்த சூழலில் , புதுவை அதற்கான கதவுகளை திறப்பவை , ஒருகால் புதுவை அரசயிலில் இருப்பது அவரை மீளவும் அரசியல் மையத்தில் கொண்டு வைக்கலாம்..... ஏதேதோ எண்ணம் அலைக்கழிக்க அவர் காமராஜரை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்

காலை உணவு முடித்த கையை மேல் துண்டால் துடைத்தபடி வெளி கார் நிறுத்தும் முற்றத்தில் போட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்த்த பிறகு சண்முகத்தை பார்த்தார் சண்முகம் எழுந்து கும்பிட்டார் . “சம்முகம் இப்பதா வந்ததாஎன்றார் சண்முகம் அமென்றார் . வெளியில் அமர்ந்திருந்த ஒன்றிடரண்டு பேர்  தினம் வருபவர்களாக இருக்க வேண்டும் , காமராஜர் எழுந்து தனது அறைக்கு சென்றதும் சண்முகம் பின் தொடர்ந்தார் . உள்ளே அமர்ந்ததும் என்ன விஷயம் என்றதும் . உங்களை குபேர் புதுவைக்கு அழைத்த செய்தி கிடைத்தது அது பற்றி பேசிப்போக வந்ததாக சொன்னார் . தான் நினைத்ததை ஒரு வரி விடாமல் சண்முகம் சொன்னார்.

காமராஜர் புதுவைக்கு வருவது கட்சி அமைப்பை முற்றாக சிதைத்து விடும் என்பதை சொன்னார் . சற்று நேரம் அமைதியாக இருந்த காமராஜர் . அவரிடம்   “சம்முகம் ஒனக்கு நா அரசியல் சொல்லி தரவேண்டியதில்லை . இப்போ உள்ள சூழல்ல   முக்கிய வேலையா வெளியில கெளம்புறேன். நீ ஆற அமர யோசித்து சாயங்காலம் வந்து சொல்லு , நா வரனுமா , வேனாமான்னு ” . என்றார் பின் காமராஜர்  தனது MDT 2727   பெரிய கருப்பு வண்ண பழைய காரில் கிளம்பிச் சென்னார் . சில நிமிடம் சண்முகம் திகைத்து நின்றார் . காமராஜர் தன்னை ஒருநாளும் காக்கவைத்ததில்லை . இந்த காத்திருப்பிற்கு அர்த்தம் வேறாக இருக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்