https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 494 * பிம்பம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 494

பதிவு : 494 / 681 / தேதி 01 டிசம்பர்  2019

பிம்பம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 08

பிரன்ச் ஆதரவு வேட்பாளர்களுக்கு போட்டியாக சண்முகம் நிறுத்திய அவரது நண்பர்களில்  சிலர் காவல் துறை அச்சுறுத்தலால் விலகிக்கொள்ள , காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் நிற்பதற்கு வேட்புமனு தாக்கல் செய்த சண்முகம் போட்டியிடுவதிலிருந்து விலக விரும்பவில்லை .அவரது நண்பர் தட்சிணாமூர்த்தி  முதலியார் உள்பட சிலர் அவரை ஆதரித்தனர்  . தட்சிணாமூர்த்தி முதலியாருடன் சண்முகத்தின் நட்பு இருவரின் இறுதிக்காலம் வரை நீடித்த அற்புதமான ஒன்று . இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணியமாக நடத்தியது சிறந்த நட்பின் அடையாளமா பார்த்தேன் . சண்முகம் அனைவருடன் மிக இயல்பான நட்புடன் பழகினாலும் , இது அவைகளில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது 

அவர்கள் இருவரின்  நீண்ட பயணங்களில் நானும் உடன் இருந்துள்ளேன் .பின்னாளில் எனக்கு அரசியல் ரீதியாக உபயோகப்பட்ட பல அரிய தகவல்களை பயணத்தினூடாக அவர்கள் இருவருடைய உரையாடல்களின் வழியாகவே அடைந்தேன் . சண்முகம் சொல்லும் பல தகவல்  துணுக்குகளின் முழு அர்த்ததையும் அதன் விரிவான பிண்ணனிகளையும் தட்சிணாமூர்த்தி முதலியாரிடம் பின்னர் கேட்டு தெரிந்து கொள்வேன் .ஒரு மாணவனுக்கு சொல்லும் ஆர்வத்தில் எதையும் மறைக்காது அவர் சொன்னது இந்த வலைப்பூத்தளப்  பதிவுகள் முழுவதும் எழுத உதவியது .ஒருவர் சொன்னதை பிதொருவர் மாற்றிச் சொன்னதில்லை எந்த சந்தர்ப்பத்திலும் . அது அவர்கள் சொன்னது உண்மை என  சான்றாகின .

சண்முகம் காவல் துறை அடக்குமுறையை சமாளிக்க அவர்களிடமே பாதுகாப்பு கேட்கும் முடிவிற்கு வந்திருந்தார் . தன்னுடன் பிற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த அவரது நண்பர்களிடம் சொன்னபோது  ,  அவர்கள் சண்முகத்தின் முடிவால் அதிர்ந்தனர்அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . காவல் துறை  உள்ளூர் பிரமுகர்களின் அனைத்துவிதமான   முறைகேடுகளில்  துணைநின்றதை விட ,  தனிப்பட்டு அவர்கள்  செய்த பல காரியங்கள் காலத்தால் மறக்க இயலாத வடுக்கள் .

உள்ளூர் நிர்வாக முறைகேடுகளை கண்கானிக்கும்அரசு தொரைதூரத்தில் இருப்பதும் , உள்ளூர் பிரமுகர்களின் முறைமீரல்களுக்கு உள்ளூர் அரசாங்கம் துணைநிற்பதும் . தடுக்க வேண்டிய காவல்துறை அவற்றுடன் கைகோர்த்துக் கொள்ளும் போது நடப்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது . ஆனால் அவர்கள் அனைவருக்கும் சண்முகம் சொன்ன பதில் காலம் மாறிக் கொண்டிருப்பதை உணருங்கள்” என்பதாக இருந்தது .அந்த உள்ளுணர்வே அவரை அவரது வாழ்நாளெல்லாம் வழி நடத்தியது .

காவல் துறையிடம் சண்முகம் கொடுத்த புகார் அவர்களையும் திகைக்கத்தான் செய்தது .முதலில் குழம்பினார்கள் , பின்னர் அவரவர்களுக்கு தோன்றியதை சொல்லிக் கொண்டார்கள்  . அது நிஜத்தைக் கடந்து  விஸ்வரூபம் எடுத்ததும் பின்  அதற்கு அவர்களே அஞ்சினார்கள்முடிவாக ஒன்றை எட்டினார்கள் . இந்திய ஒன்றிய அரசாங்கம் வேண்டுமென்றே ஆழம்பார்கிறது. புதுவை இணைப்பு தள்ளிப்கோகலாம் ஆனால் தவிர்க இயலாது . காவல் துறை  அரசியல் களத்திலிருந்து விலகி நிற்பது என்பதாக இருந்தது.

 காரைக்காலை சூழந்திருந்த  தமிழகப் பகுதிகளில் இருந்து கொண்டு காமராஜர் செய்த முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு பல உள் கணக்குகளை சொல்லி இருந்தது. ஆட்சி மாறுவதை எப்போதும் காவல்துறையே முதலில் கணிக்கிறது .சண்முகம் கேட்ட பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது   அது சண்முகத்தின் அரசியலில் வரலாற்றுத் திருப்புமுனை .

சண்முகம் காவலர் துணையுடன் வாக்கு சேகரிப்பதற்கு வரும் காட்சி காரைக்கால் முழுவதும் அலரானதுபிரன்ச் அரசாங்கத்தின் தேர்தல் நடத்து முறைகளையும் , உள்ளூர் பிரமுகர்களின் உச்சக்கட்ட முறைமீரல்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு இது முற்றும் புதிய காட்சி .ஒரு சாமான்யனின் எழுச்சியாக , பிரமுகர்களின் காலம் வீழ்ந்து போனதாக  கட்டியம் சொல்லியது .காரைகால் முழுவதுமாக அவரவர் உள்ளுணர்விற்கு என்ன தோன்றியதோ அதை செய்தியாக பரப்பினர் . அது சண்முகத்திற்கு பின்னால் இந்திய அரசாங்கம் நிற்கும்  பிம்பமாக  எழுந்தது .

அரசியலில் இது ஒரு வேடிக்கை. ஒரு ஆளுமையின் பின்னால் இப்படிபட்ட செய்திகளே அவர்களை  பிம்பமாக உருமாற்றி இவை அதில் ஏற்றப்படுகின்றன . பலருக்கு ஏற்றப்படுபவை அவர்களின் இறுதிவரை கழற்றப்படாது நீடித்து விடுகிறது . நல்லதும் கெட்டதுமாக .ஒருசிலரே அவற்றை தங்களுக்குள் கொண்டு செல்லாதவர்கள்

அரசியல் முக்கிய நிகழ்வுகள் பெரும்பாலும் திட்டமிட்ட ஒன்றல்ல . நிகழ்ந்தவற்றின் ஒரு சிறு கூறோ, அல்லது முற்றாகவோ, யாரும் எதிர்நோக்காததாகவே  முதலில் நிகழ்கிறது . பின்னர் அவை பார்ப்பவர் எண்ணங்களினூடாக அவரவர் மனபிம்பங்களில் பிரதிபலித்து ஒன்று நூறாக பெருக்குகிறது . சாமர்த்தியமுள்ள ஒரு அரசியலாளர் அவற்றை தன்பொருட்டு செறிவூட்டுகிறாரோ அந்த நிகழ்வு அவரை நிகர் செய்கிறது  .அவருக்கு சொந்தமாகிறது . பின் அது அவரின் ஒரு கூறும் கூட .

களத்தில் அவருக்கு எதிராக தன்னை முன்னிறுத்தும்  அரசியலாளர்  அனுபவமுள்ள ஒருவராக  இருந்தால் ,தான் விரும்பாது போனாலும்  அந்த பிம்பத்தோடே அவருக்கு எதிரான தங்களை முன்வைத்து விளையாடுகிறார்கள்  . வெல்கிறார்கள் .  ஆனால்  அனுபவமில்லாதவர்களோ அந்த அரசியலாளரையும் நிகழ்வையும் பிறித்ததறிந்து அதை தற்செயலாக்க முயன்று அதற்கான எதிர் முயற்சியில் தோற்றுப் போகிறார்கள். ஆழ்மனத்தால் நிகழ்பவைகள் என்னவாக வெளிப்படக்கூடும் என உய்த்துணரும் ஒருவரே சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...