https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 23 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 504 * நுட்பங்களால் எழுபவர் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 504

பதிவு : 504 / 690 / தேதி 23 டிசம்பர்  2019

* நுட்பங்களால் எழுபவர்


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 17


சென்னைக்கு செல்லும் போது வாய்பிருப்பின் அப்போதைய தமிழக முதல்வர் MG.ராமசந்திரனை சந்திப்பது வழமை. அவரிடம் பிறர் அஞ்சும் விஷயங்களை தயங்காமல் பேசும் முறையை அவர் வளர்த்துக் கொண்டார் . அவரது முடிவால் புதுவை அதிமுக அரசுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அதன் பின்னணியில் எழுந்தவைகள் பற்றிய அவரது நுண்ணிய கணிப்புகள் மற்றும் புதுவை தமிழக இணைப்பில் ஜனதா அரசு எடுத்த போது அதை ஆதரித்தது  எப்படித் தவறானது . அதன் விளைவாக புதுவையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட பெற இயலாது தோல்வியுற்றது அவரது ஆளுமைக்கு உகந்ததல்ல . காங்கிரஸை கைவிட்டு ஜனதா விற்கு நெருக்கமானதும் அங்கெழுந்த  முரண்களைப் பற்றி, அவருடன் எப்போதும் இந்திராகாந்தி கொண்டுள்ள மன நெருக்கும் . திமுக வுடன் கூட்டணி பற்றிய உரையாடலில் அதிமுக நிலையும் பரிசீலிக்கப்பட்டதை . தான் எப்படி திமுக கூட்டணி வெற்றி பெரும் என கணித்தது போன்றவற்றை பேசும் இடத்தில் இருந்தார்

பின்னாளில் ஜெயலில்லிதாவுடனும் அவருடைய அனுகுமுறை அப்படியே இருந்ததை பார்த்திருக்கிறேன் . ஒரு எளிய கிராமத்து மனிதனின் தோற்றம் பிறரை மிக எளிதில் அனுமதிக்கும் என நினைக்கிறேன் . ஒரு சிறிய மாநில அமைப்பின் தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய  அங்கீகாரம் அது என்றாலும் அதற்கு பின்னால் இருந்த அவரது அரசியல் செயற்பாடுகளினால்  அவற்றை இயற்ற முடிந்தது . தன் நிலையை எப்போதும் வெளிப்படையாக பிரகடனம் செய்து கொள்வது அவரது அடிப்படை வழமையாக இருந்தது .

குபேருக்கு எதிராக தன்னை அப்படித்தான் பிரகடபடுத்திக் கொண்டார் . ஒன்று : தன்னை குபேரின் எதிர்நிலையாக சமரசமற்று நிறுவிக்கொண்டார் .இரண்டு : காமராஜரிடம் கொண்ட மிக நெருங்கிய தொடர்பினால் தில்லியின் மனநிலைக்கு உட்பட்டு காரியமாற்றும் ஆற்றலை பெருக்கிக் கொண்டார் . மூன்று : ரெட்டியாருக்கும் காமராஜருக்கும் பாலமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் .

இது நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் தனக்கு எதிராக சண்முகம் அணித் திரட்டுவதை  குபேர் அறிந்திருந்தார். தன்னையும் தனது அரசியல் சூழ்தலையும் அதனால் விளையும் எதிர்மறை பலன்கள் நீண்டநாட்கள் தன்னை விட்டுவைக்காது என புரிந்திருந்தார் , அதற்கு மாற்று நடவடிக்கைகளை துவக்கி இருந்தார்

காலமும் அதை ஒட்டி ஏற்படும் புரிதலும் மிக விந்தையானது . அது நமக்கு சொல்ல வருவதாக புரிந்து கொள்வதும் கூட ஒருவித அபத்தம்தான் போலும். குபேருக்கு நிகழ்ந்தது அதுதான் . ஒரு அரசியல் மாணவனாக என்னை மிக தீவிரமாக சிந்திக்க வைத்தது செயல்பாடுகளை வகுக்க வேண்டிய தருணமும் , விலகி இருக்க வேண்டிய காலமும் பற்றி .ஆனால் புரிதல் என்பது உண்டென்றால் அது நிகழ்ந்த பிறகு அதை நோக்கிய நகர்வு எப்படி தவறாக முடியும் . செயலற்று இருக்க மனிதர்களால் இயல்வதில்லை .பின் செயல்களினால் விளைந்ததை நமது ஊழ் என தத்துவத்தில் கொண்டு முடிக்க இயன்றவர்கள் நல்லூழ்  கொண்டவர்கள் , பிறர் தங்களது இறுதி காலம் வரை மனம் குழைந்து , கசப்புற்று இருக்க வேண்டியதுதான் போலும் . குபேருக்கு அப்போது நிகழ்ந்தது சண்முகத்திற்கு சில பத்தாண்டுகள் கழித்து நிகழ்ந்தது . யாரும் அதிலிருந்து வெளியேர இயலாது போலும்.

 காலத்தை புரிந்து கொண்டாதாக நினைப்பது போன்ற அறிவின்மை பிறிதில்லை .தான்  வலிந்து எடுத்த முடிவுகளினால் , மிகச் சரியாக விளையாடுவதாக எண்ணி அதன் ஆபத்தான கண்ணிகளை தொட்டு தனது முடிவை தேடிக் கொண்டார் குபேர் என்பது அரசியல் நகைமுரண்.

காமராஜர் எதிர் முகாமில் இருக்கும் வரை தனக்கு சிக்கல் என புரிந்திருந்த குபேர்  காமராஜரை தன சார்பாக வளைக்க ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார் . அதிகாரத்தில் இருக்கும் தன்னை விட ரெட்டியார் சண்முகம் போன்றவர்களை ஆதரித்து தன்னை எதிர்ப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை காமராஜருக்கு புரியவைக்க நினைத்தார் . நேருவிடம் அவருக்கிருந்த செல்வாக்கு அப்படி நினைக்க வைத்திருக்கலாம் 

அதற்கான சூழல் வாய்த்தது . ஒரு அரசாங்க விழாவிற்கு காமராஜரை அழைப்பது என முடிவாகி குபேர் சார்பாக அவரது தீவிர ஆதரவாளர் கருணாநிதி மற்றும் ஒரு சிறு குழுவுடன் சென்னை கிளப்பி சென்றார் . குபேர் காமராஜரை அழைக்க விருக்கும் செய்தி மிக ரகசியமாக வைக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு சண்முகத்திற்கு வேண்டிய பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை சந்தித்து குபேரின் செய்தி சென்னை சென்றதை சண்முகத்திடம் சொன்னார் . சண்முகத்துக்கு இடி விழுந்ததை போல உணர்ந்தார்  . 

குபேரின் அரசியல் சூழ்தலை பற்றிய தெளிவான புரிதல் சண்முகத்துக்கு இருந்தாலும் இது முற்றும் எதிர்பாராதது . குபேர் இந்த கோணத்தில் காய் நகர்த்துவார் என சண்முகம் கணிக்கவில்லை . அன்று அவர் அடைந்த பதட்டத்தை பற்றி பின்னாளில் எங்களிடம் ஒரு ஓரங்க நடிகரைப் போல மிக விரிவாக சொல்லி இருந்தார் . பலரை போல் குரலில் பேசுவதும் பலரின் முகபாவத்தை அப்படியே தன்னில் கொண்டு வந்து காட்டுவதுமாக அவரை ஒரு சிறந்த நடிகராக பார்த்திருக்கிறேன்  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்