https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 500 * வடியும் காலம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 500

பதிவு : 500 / 686 / தேதி 15 டிசம்பர்  2019

* வடியும் காலம்  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 14




சிறந்த மனிதர்கள் ஆதர்சங்களை தங்கள் வாழ்கையில் பிரதிபலிக்க முயற்சித்தபடி இருந்தாலும்,  தாங்கள் தனிப்பட்ட வாழ்வில் எடுத்த முடிவுகளை ,சூழலை ஒட்டி சில சமயம் சமரசம் செய்து கொண்டு தங்களின் பெரிய விழைவுகளுக்காக முன்னகர்ந்திருக்கிறார்கள் போலும் . அந்த  சமரசம்  கொடுக்கும் ஊகத்துடன் மானுடத் திரளை மட்டுமே கணக்கில் கொள்ளும் பெரும் கனவுகளுக்கு தங்கள் எண்ணங்களையும்  மறுத்து தங்களை ஒப்புக் கொடுத்தனர் .

காந்தி பசும்பாலை மாமிச உணவாக மருத்துவ துறையின் பரிந்துரையை ஏற்று பால் அருந்துவதை நிறுத்திய பின்னர் படுக்கையில் இருந்து எழுக்கூட முடியாமல் உடல் பலமிழிந்து போனார் .அவரின் மருத்துவர்கள் ஒரு எளிய சமரசத்தை முன் வைத்தனர் . பால் வேண்டாம் என காந்தி முடிவெடுத்த போது அவர் நினைவில் இருந்தது பசு மற்றும் எருமை , ஆட்டை கணக்கில் கொள்ளாததால் ஆட்டுப்பால் அருந்தலாம் என முடிவெடுக்க , காந்தியும் ஏற்றார் என்கிறது அவரது உணவு பரிந்துரை என்கிற வலைப் பதிவு (நன்றி :ஈரோடு கிருஷ்ணன்). காமராஜர் தனது இளமைக்கால புகைபிடிக்கும் பழக்கத்தை பிறர் பார்க்க செய்வதில்லை . தனது சட்டை மேல் பாக்கட்டில் பிறர் பார்பதை பொருட்படுத்தாது வைத்திருந்தார். ஆனால் அதற்கு மேலாக அவரது மேல்துண்டு எப்போதும் கிடந்தது.

அரசியலில் மிக முக்கியமானதாக நினைப்பது ஒரு தலைமையின் அனுகுமுறையையும் , தன்மையையும் பிறர் கணிக்க தக்க இடத்தில் அவர்கள் தங்களை வைத்துக்கொள்வது ஆகச் சிறந்த ஒன்று என  .அதில்  ஆரம்ப காலம் முதல் சண்முகம் தெளிவாக இருந்தார் என நினைக்கிறேன் .தன்னை எப்போதும் வெளிப்படையாக பிரகடனம் செய்து கொள்வதை அறிந்திருக்கிறேன் .பொது வாழ்வில் எதை ஏற்பார் எதை மறுப்பார் என எல்லோரும் அறிந்திருந்தனர்

ஆனால் அவரது அரசியல் கொள்கை முடிவுகளை பிற எவராலும் கணிக்க முடியாது வைத்திருந்தார் .காரணம் அவை நீண்ட உரையாடல்களின் பின் எழுவது .பிறிதொறு கருத்தை ஏற்று தன்முடிவை பரிசீலிப்பது என அறிந்திருந்தார்தனது முடிவுகள் எப்போதும் சந்தர்ப்ப பூர்வமான சமரசங்களை உள்ளடக்கியது என புரிந்திருந்தார் என நினைக்கிறேன். சமரசங்கள் யாராலும்  எளிதில் கணிக்க இயலாதவைகள் . காரணம் அது திட்டமல்ல ,பலர் கூடி பல கோணங்களில் உரையாடி அடையும் ஒரு சமரசப்புள்ளி , அதை தான் ஏற்பதும் பிறரை ஏற்கவைப்பதும் அவரின் அரசியல் வழிமுறையாக இருந்தது .அதுவே அவரை இறுதிவரை அரசியல் மையத்தில் வைத்திருந்தது என நினைக்கிறேன் .

அரசியலில் அவர் ஏற்கும் சமரசபுள்ளியை ஏன் பிறரும்  ஏற்கவேண்டும் . இந்த கேள்விக்கு விடை திகைப்பைத் தருவதுஅவரது நிலைப்பாட்டையும் அனுகுமுறையையும் குறித்து அவரது  ஆழுள்ளப்   புரிதல்  வழிகாட்டியிருக்க வேண்டும்அதுதான் மாநிலத்தின் பிற அரசியல் தலைவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்திக் காட்டியதும் . மேலும் அவருக்கான அரசியல் இருப்பை கொடுத்தது தான்  நினைத்ததை தயக்கமின்றி செயல்படுத்த முடிந்ததும் காரணம் என நினைக்கிறேன். பல்வேறு முணைகளில் இருந்து எல்லாவிதமான முன்தயாரிப்புடன் அரசியலின் களம் துவங்குவதாக இருந்தாலும் , அது சட்டமன்றம் என்கிற ஒற்றைப் புள்ளியையே வந்தடைகின்றன.

சட்டமன்றம் குறித்த முடிவுகள் கால வரம்பிற்கு உட்பட்டவை. ஆகவே முடிவுகள் எப்போதும் அது சொல்லும் காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டியவை  . அரசு அமைப்பது என்பது பலவித கட்சிகளுடைய கருத்து, விழைவு, பிடிவாதம், விட்டுக் கொடுத்தல் போன்ற பல அலகுகளாக ஊடுபாய்வது .அவை அத்தனையும் இணைத்து பின்னப்பட்ட பலருடை எண்ணங்களை உள்ளடக்கியது . ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்படுவது . அடித்தளம் எப்படி அமையுமோ அதை ஒட்டி அத்திட்டம் உயிர் பெரும்

பிரம்சரிய வாழ்வு , உறவினர்களில் மிக சொற்பமானவர்களை தன்னை சார்ந்திருக்கும் படி அமைத்துக்கொண்டது போன்றவை அவரை பிற அரசியலாளர்களைப் போல பிற வேலைகளுக்கு மத்தியில் அரசியல் என வைத்துக் கொள்ளாமல் அதன் முழுநேரத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்திருந்தார் என்பதால் அவருக்கு  அரசியல் கணக்குகளை குறித்து தவிர பிற விஷயங்களை முக்கியமில்லாமல் செய்திருந்ததுஒரு முறை அடுக்கப்பட்ட அமைப்பை கலைத்து மறுபடி அடுக்குவது மூலையை சொடுக்கி செயலிழக்கச் செய்வது . அதை சலியாமல் கால மாறுபடாடுகளை ஒட்டி பல முறை அவற்றை பிறித்து அடுக்கும் சாமர்த்தியம் உள்ளவராக அவரை பார்த்திருக்கிறேன் .

முடிவுகள் பலரும் இணைந்து உருவாக்குவது . அப்படி உருவான ஒன்றை அவர் முன்வைக்கும் முறையே பிறர் அவரை மறுக்க முடியாமைக்கு காரணம் , தன்னை மறுத்தவர்களை அவர் பிறிதெப்போதும் ஏற்பதில்லை என்கிற அவரின் அசையாத இருப்பு .அது உண்மையும் கூட. அதுவே எவருக்கும் அவரிடம் அச்சத்தை உருவாக்குவது  .பிறர் அவரின் முடிவிற்கு  வந்து சேர்வதற்கு  முக்கிய காரணம், காங்கிரஸ் மட்டுமே புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஆயுட்காலம் வரை ஆண்டுள்ளது . அவர் அந்த கட்சியின்  மாற்றமில்லாத நீண்ட காலத்தலைவர் . அவரை பகைப்பது அரசியலில் பாதைகளை அடைப்பதற்கு நிகர் என நிலைத்திருக்கலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...