https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 5 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 496 * இரட்டைத் தலைமை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 496

பதிவு : 496 / 682 / தேதி 05 டிசம்பர்  2019

*இணைத் தலைமை 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 10

1959 ல் ரெட்டியாரிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்த குபேர் , மாநில காங்கிரஸ் உள் அரசியலையும் அதற்கு தமிழக ஆளுமைகளின் உதவிகள் வழியாக தில்லித் தலைமையை அரசியல் கருத்துக்களால் வெற்றி கொண்டதை புரிந்து கொண்டார்  . தில்லியை கருத்தால் வெற்றி கொள்ள இயலுமே தவிர தனிப்பட்ட உறவுகளும் தலைமை கவர்ச்சியும் நீண்ட நாட்கள் எடுபடாது என புரிந்திருந்தார் .

தன் இயல்பிற்கு உகந்த தனது களத்திற்கு திரும்பினார் .தனது களத்தில் வெற்றிபெறுவது எப்படி என்பதை பற்றிய பழகிய தெளிவு அவருக்கிருந்தது  . தன்னை வெளிபடுத்துவதனூடாக தனது இலக்கை அடைவது ஜனநாயாகத்திற்கான வழி . அதில் நுழைந்தால் அதன் விதிப்படி விளையாடுவதே அரசியல் .அது அவருக்கு எப்போதும் உகக்காத ஒன்று .அது மேலிடத்தை நோக்கிய மன்றாடுதல் என பிழையாக புரிந்திருந்தார் .

குபேரின் பலம்  அவருக்கு தன்னை மறைத்து விளையாடும் மிக நுணுக்கமான அரசியல் சூழதல்கள்  . அவரது நாற்களம் புதுவை மன்னில் விரிந்திருக்கிறது , அதில் மானிடர்கள்  பலமும் ,பலவீனமும், வாய்ப்பும் அச்சுறுத்தலுமென  ஊடுபாய்ந்து  கட்டங்களாக அமர்ந்திருக்கிறார்கள் . அதில் உள்ளவர்கள்  அதன் நகர்வுகளுக்கு  உட்பட்ட  மனிதர்கள் . ஆகவே அது அவரது எல்லைக்கு உட்பட்டதுஅதில் விளையாட விரும்பும் எவரும் பிறிதெங்கோ அமர்ந்து கொண்டு விளையாட முடியாது . அதற்கான விதியென நினைத்ததை அடைய ஏதும் இயற்றலாம் என்கிற தற்போதைய அரசியல் கோட்பாட்டை வந்தடைந்தார் .தனது இலக்கான 1963 தேர்தலுக்கு காத்திருந்தார்.

யார் ஆட்சியில் அமர்ந்தாலும் ஆறு மாதத்திற்குள்ளாக தங்களின் ஆதரவாளர்களில்  கணிசமானவர்களை  இழந்திருப்பார்கள் . அது அடிப்படை விதி . பதவிக்கு வந்த பிறகு உட்கட்சி அரசியலுக்கு முக்கியத்தும் கொடுக்காத ரெட்டியார் முழுமையாக ஆதாரவிழந்திருந்தார் .வேட்பாளர் தேர்வில் அதை மிகத் தாமதமாக அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் .அனைவரையும் சமரசம் செய்யும் குழு உருவாக்கப்பட்டது . அது அதிகார பூர்வ வேட்பாளரை எதிர்பவர்களை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்ததுவேட்பாளர் குழுவில் சண்முகம் முக்கிய பங்கு வகித்தார் என்றாலும் ஒருமித்த கருத்தை உருவாக்க இயலவில்லை .

ரெட்டியார் பதவிக்கு வந்த பிறகு கட்சி நோக்கிய பார்வை குறைந்து போனது .குபேரை   எப்போதைக்குமாக   வீழ்த்தியதாக நினைத்தார்  . அது அமைப்பை நெறி செய்வதை முக்கியமற்றதாகாக்கியது . 1963 தேர்தலுக்கு முன்பிருந்தே, காங்கிரஸின் நிர்வாகிகளுக்குள் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது . தலைவர்களுக்கு உறிய மதிப்பு யாருக்கும் கொடுக்கப்படவில்லை  அதனால் எல்லா தலைவரும் தங்கள் இருப்பை இழந்தனர் . அதன் பின்னனியில் குபேர் இருந்தார்

தேர்தல் நெருங்கி வரும்  சூழலில்  கட்சி ரீதியில்  குபேருக்கான ஆதரவு குழு ஏறக்குறைய முழு உருவம் பெற்றிருந்தது. 1963 -64 தேர்தல் காலம் நெருங்கியது . வேட்பாளர் தேர்வில் குபேரின் அதிரடி ஆட்டத்தை ரெட்டியார் குழு எதிர்பார்த்திருந்தாலும் ,அது இத்தனை விஸ்தீரணம் கொண்டது என்பதை கணித்திருக்கவில்லை . குபேர் பல அடுக்குகளில் தனது தாக்குதலை  துவங்கியிருந்தார். ரெட்டியார் குழு திகைத்து நின்று , பின் எதிரவினையாற்ற புறப்படுவதற்குள் ஆட்டம் ஏறக்குறைய முடிந்திருந்தது .

குபேர் முதற் கட்டமாக காங்கிரஸ் மாநில அமைப்பின் சார்பில்  தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு தேவையான வேட்பாளர்களை முன்பே தெரிவு செய்து வைத்திருந்தார் . இரண்டாம் நிலையில் ரெட்டியார் தரப்பில் நியமிக்கப்படும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு மாற்றாக பிறிதொரு வேட்பாளர் நிரை அவரால் உருவாக்கப்பட்டிருந்தது  . அது ரெட்டியார் ஆதரவு வேட்பாளர்களின் தேர்வின் போது, தொகுதிகளில் ஒருமித்த கருத்தை எட்ட இயலாது பார்த்துக்கொண்டது .

மூன்றாவது கட்டமாக தன்னால் கைப்பற்ற இயலாத தொகுதிகளுக்கு அதிரகார பூர்வமாக நியமிக்கப்படும் ரெட்டியார் ஆதரவு வேட்பாளர்களை எதிர்க்க சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்க தாயரிக்கப்பட்டிருந்தனர் . மேலதிகமாக தன்னியல்பாக  எழும் இயற்கைகையான சுயேட்சைகள் வெற்றி பெற்றால் அவர்களை   வளைக்க குபேர் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர் என மிக விரிவான அவரது திட்டம் தயாராக இருந்தது.

தேர்தல் முடிந்து வாக்கெடுப்புகள் நடக்கும் வரை  உள்ளூர் காங்கிரஸ் கட்சி மீது குபேர் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். புதுவையில்  பிரெஞ்சு அதிகாரம் முடிவடைந்த பிறகு தனது நிலையை மாற்றிக்கொள்ள அவர் தயங்கவில்லை . அரசியலில் தப்பிபிழைக்க எந்த நிலைப்பாட்டை எடுக்கவும் தயங்காத எண்ணத்தை ஒரு இயல்பாக அவர் உருவாக்கி கொண்டு இருக்க வேண்டும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...