தூரன் விருது, இளங்கோவன். கடலூர் சீனு



தமிழ்விக்கி – தூரன் விருது 2023

இனிய ஜெயம்

சில ஆண்டுகள் முன்னர் ஒரு துறவியை பார்க்கச் சென்றிருந்தேன்இங்கதான் இருக்கார்அவரை படிச்சிருக்கோம் ஆனா அவரை பார்க்காமலேயே இருக்கிறோமே என்று தோன்ற கிளம்பி சென்றேன்வேறு பிற மடங்களில் இருந்து வந்த முக்கியஸ்தர்கள் சிலருக்கு ஏதோ பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

காத்திருந்து கிடைத்த சில நிமிடங்களில் சில வார்த்தைகள் பேசினேன்அவர் அரிய நூல்கள் பல கொண்ட நூலகம் வைத்திருக்கிறார் அதை பார்க்க அனுமதி கேட்டேன்நேரமில்லை மற்றொரு சமயம் வாருங்கள் என்று சொல்லி விட்டார்அந்த மற்றொரு சமயம் வருவதற்கு முன்னர் அவர் இயற்கை எய்தி விட்டார்.

அவர் பெயர் ஊரன் அடிகள்வள்ளலார் சன்மார்க்க வழி துறவிஊர் வடலூர்அவர் இயற்கை எய்திய சேதி கடலூர் மாவட்ட செய்திகளில் கூட இடம்பெறவில்லைஊடகங்களுக்கு அஜித்தை தெரியும் வலிமை அப்டேட் போட தெரியும்ஊரன் அடிகளையும் அவர் வாழ்வையும் பணியையும் மறைவையும் மக்களுக்கு சொல்வதா ஊடகங்களின் பணிஊரன் அடிகள் மறைந்த சேதியை மு .இளங்கோவன் இணையதள பதிவு வழியாகவே அறிந்தேன்.

இன்று இரவு புதுவையில் அவரது இல்லத்தில் இளங்கோவன் அவர்களை சந்தித்த முதல் உரையாடலாக இதைத்தான் சொன்னேன்

இன்று மாலை 6.30 மணிக்கு மேல் நான் வேலை முடிந்து வந்ததும் இளங்கோவன் சாரை நாம்  போய் பார்ப்போமா என தாமரை கேட்கஉடனே ஏற்பாடுகள் துவங்கினஇளங்கோவன் இரவு 7 மணி முதல் வீட்டில்தான் இருப்பேன் வாங்க என்றார்இந்தியாவில் எங்குமே காண இயலாத புதுவை மட்டுமே அறிந்த பைத்யக்காரத்தனமான டிராபிக் வழியே தவளை போலும் தாவி தாவி நான் தாமரைதிருமாவளவன்ஹரிக்ரிஷ்னன் நால்வரும் 7.30 கு அவர் இல்லம் சென்று சேர்ந்தோம்மாடியில் அவரது பெரிய நூலகத்தில் எங்கள் சந்திப்புஒரு பக்கம் முழுக்க நூல்கள் கொண்ட அலமாரிமறு பக்கம் முழுக்க பெட்டி பெட்டியாக முக்கிய ஆளுமைகள் பேசிய ஆடியோ வீடியோ மற்றும் ஆவண பதிவுகள்பக்கத்து அறை முழுக்க முனைவர் இப்போது செய்து கொண்டிருக்கும் பணி சார்ந்த கச்சாக்கள்

 பரஸ்பர பூச்செண்டு சால்வை மரியாதைக்கு பிறகுநான் விட்ட ஊரன் அடிகள் இடத்தில் இருந்து இளங்கோவன் தொடர்ந்தார்ஊரன் அடிகளை அவர் ஆவணம் செய்த விதத்தை விரிவாக விளக்கினார்பின்னர் ஜெயமோகனை அவர் நாகர்கோயில் தேடி சென்று சந்தித்ததைஜெயமோகனோடு சேர்ந்து வேத சகாய குமார் அவர்களை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்நான் அவர் பூர்வீக கிராமம் குறித்து கேட்டேன்இப்போதும் அங்கே ஒரு நல்ல நூலகம் கிடையாது நீங்கள் எப்படி எதையும் வாசிக்காமல் 4 வருடம் விவசாயம் செய்ய திரும்பி விட்டீர்கள் என வினவினேன்அவர் சிரித்தபடி புத்தகம் வழியா படிக்கல மத்தபடி கழனி ஆளுக வழியா படிச்சேன்எத்தனை எத்தனை நடவுப் பாட்டுஒப்பாரி,தாலாட்டு,கும்மி எவ்ளோ அழகான மெட்டுஎவ்ளோ எவ்ளோ வட்டார வழக்கு சொற்கள் …எல்லாம் அப்ப படிச்சதுதான் என்றார்.

தாமரையின் இசை சார்ந்த கேள்வி வழியேஇளங்கோவன் அவர்கள் குடந்தை சுந்தரேசனார் ஆவண பணிகள் குறித்து சொன்னார்சுந்தரேசனார் மூன்று வெவ்வேறு பெரிய கல்வி நிலையங்களில் பேராசிரியராக இருந்தவர்மூன்று குழந்தைகள்மனைவி அனைவருமே தவறி விட்டனர்அவருக்கென ஒரே ஒரு துண்டு நிலம் கூட சொந்தமாக இல்லைஇசை இசை என தன் வாழ்வில் அது தவிர வேறு எதற்கும் அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லைஅவர் மேற்கொண்ட பண்ணிசை ஆய்வுகள் குறித்து முனைவர் விரிவாக விளக்கிதான் ஆவணம் செய்த சுந்தரேசனார் குரலில் பண்ணிசையில் பாடிய ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஒலிக்க விட்டார்ஹரி திகைத்து விட்டார்என் வாழ்வில் இப்படி ஒன்றை இப்போதுதான் முதன் முறை கேட்கிறேன் என்றார்.