https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 ஜூன், 2023

ஸ்ரிஷ்டாவுக்கு கடிதம்

 
அன்புள்ள ஸ்ரிஷடா , ஜேஷ்டாவிற்கு எங்கள் நல் ஆசிகள் எப்போதும்


நேற்று இரவு பேசிக் கொண்டது மிகுந்த மகிழ்வளிப்பதாக இருந்தது. அது வெறும் மதம் பற்றிய  கேள்வி பதில்கள் அல்ல. பதில் சொல்லும் நானும் கூட  நீண்ட தேடல்களில் இருந்து கொண்டிருக்கிறேன். அது ஒருபோதும் முடிவடைவதில்லை. வளர்வது , மாறுபாடுகளை அடைவது ஒரு போதும் தேங்காது.நான் என் வயது மற்றும் அனுபவத்தால் அடைந்தவற்றை உன்னிடம் பகிர்ந்து கொண்டேன். அது நாளை , நாளை மறுநாள் இன்னமும் முன்னேறி செல்லக்கூடியது


இன்று நீ நின்று கொண்டிருக்கும் ஐரோப்பா கொடுத்த கொடைதான் இன்று உலகம் முழுவதும் அடைந்திருக்கும் அத்தனை தனிமனித உரிமை , இலக்கியம் , வரலாற்றுப் பதிவு மற்றும் நவீன ஞானமும் வாழ்வியல் முறையும் அங்கிருந்து உலகம் பெற்றுக் கொண்டவைகள்


ஞானம் இரண்டு வகை.


ஒன்று. கோவில்களில் மிக நுட்பமாக , அழகாக செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கல் தூண்கள். அற்புத வேலைபாடுகளை கொண்டது . அதை கலைகளின் உச்சம் என்கிறார்கள்

இரண்டு. இயற்கை அளித்திருக்கும் மிக பிரமாண்டமான மரங்களும் அதன் முடிவில்லா பயன்பாடுகளும்.


அம்மா சொல்லிக் கொடுக்கும கடவுள் நம்பிக்கை என்பது அந்த கல்தூணைப் போல பல ஆயிரம் ஆண்டு நின்று கொண்டிருக்கும் . அதே சமயம் காலம் காற்று வெய்யில் மனிதர்கள் போன்றவை மாற்றிக் கொண்டே இருக்கிறது . நமது நம்பிக்கையை பிறர் அல்லது நமது ஆழ்மனமே கூட சிதைத்துக் கொண்டே இருக்கிறது . அது  Static


ஆனால் மரம் அப்படியல்ல சிதைந்தாலும் அறுபட்டாலும் முறிந்து போனாலும் அது மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கும் . வளர்ந்து கொண்டே இருக்கும்  காலம் அதை ஒன்றும் செய்வதில்லை . அதன் பரினாம வளர்ச்சி அதை எப்போதும் உயிர்புடன் வைத்திருக்கிறது அது Dynamic


நமது ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும் அத்தகைய ஒரு கலையின் பண்பாட்டின் கலாசாரத்தின் உச்சம். அது அங்கேயே கோவிலில் இருந்து கொண்டு இருக்கும். யாரோ சிலருக்காக ஒரு விதையாக அது அங்கே இருந்து கொண்டிருக்கும்.


நான் சொன்ன அந்த கல்தூண்கள் ஒரு வகையில் இந்த மரங்களை மனிதர்கள் செய்து பார்க்கும் முயற்சி என எடுத்துக் கொள்ளலாம் .


இளங்கோ சித்தப்பா போல வீட்டை கட்டிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ஒரு அழகான வீட்டை ஒரு பேப்பரல் ஜேஷ்டா வரைந்து காட்டும் போது அவர் செய்யும் புண்ணகை.


அதைப் போன்றதுதான் காற்று மழை வெய்யில் என பிரம்மம் வரையும் மரத்தை , மனிதன் கல்தூண்களாக செய்து அதை கோவிலில் வைக்கும் போது அந்த பிரம்மம் புண்ணகைக்கிறது .


பல சம்பிரதாயங்களை உள்ளடக்கியது மதம். மதம் பல ஆயிரம் கால தொடர்ச்சி கொண்டவை . இந்தியாவில் கலை , மொழி பண்பாடு இலக்கியம் கலாச்சாரம் என சொல்லப்படுகிற அனைத்தும் நமக்கு மதம் வழியாக சொல்லிக் கொடுக்கப்பட்டவைகள் . மதத்தை மறுக்கும் ஒருவர் அதை எல்லாவற்றையும் இழக்கிறார். கலை கலாச்சாரம் என எல்லாம் ஒரு குடும்பத்தில் ஒருவரிடம் இருந்த அந்த குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அது அளிக்கப் படுகிறது . பின்னர் ஆகவே அது ஒருவரின் அடையாளமாகிறது .


நம்முடையது ஶ்ரீவைஷ்வைஷ்ணவ சம்பிரதாயம். ராமாநுஜர் உருவாக்கிய மதம் அல்ல . அவர் அதை அதுவரை இருந்த நடைமுறைகளை புதிய காலகட்டத்திற்கு நவீனப் படுத்தினார். அந்த நவீனப்படுத்துதலால் அவர் இன்றளவும் இளமையாக கொண்டாடப்படுகிறார்


அவர் கொண்டு சீர்திருத்த கருத்துக்களுக்கு இந்த  ஆயிரம் ஆண்டு கழித்து இன்று எப்படி பொருள் படுகிறது என்கிற அடிப்படை கேள்வி குறித்து நீயும் நானும் நேற்று உரையாடினோம்.


Dear Srishada,and jhesta  Our best wishes for you both, always.


It was so much fun talking last night. It's not just questions and answers about religion. Even I, the answerer, have been searching for a long time. It never ends. Growing up and achieving change never stops. I have shared with you what I have achieved through my age and experience. It can go further tomorrow and the day after tomorrow


The gift of Europe where you are standing today has given its gift of all the individual rights, literature, historical records and modern wisdom and way of life that the world has achieved today.


Wisdom is of two types.


One. The temples have beautifully carved stone pillars. It has wonderful works. It is called the pinnacle of arts.


Two. Nature's greatest creation “the tree” and its endless uses.


Faith in God is taught by mother will stand for thousands of years like that stone pillar. At the same time, time, wind, and people keep changing. Our faith is destroyed by others or even by our own subconscious mind. It is static


But even if the tree is damaged, cut or broken, it keeps sprouting again and again. A growing period does nothing to it. Its evolution keeps it always alive and it is dynamic


Our Śrīvaishnava Sampradayam is the cultural culmination of such an art culture. It will be taken from the temple itself. It will be there as a seed for some one , like us to receive from there.


Those stone pillars that I mentioned can be taken as an attempt to see these trees by humans.


Like Ilango Siddappa, a house-builder makes a smile when he shows a beautiful house on a paper drawing of jeshta.


In the same way, the tree that Brahma draws as an symbol of wisdom which curved by wind and rain, this pillor are a childish miniature of that tree . Created and kept in the temple for brammam to see . When it sees it smiles .


Religion includes many rituals. Religions have been around for thousands of years. In India, everything that is called art, language, culture, literature and culture is taught to us through religion. One who rejects religion loses it all. As art and culture, it is given to all the family members who had one family. Then it becomes one's identity.


Ours is Srivaishvaishnava tradition. It is not a religion created by Ramanuja. He modernized the existing practices for the new era. Because of that modernization, he is still celebrated and still famous for his darshan.


You and I had a conversation yesterday about the basic question of how his reform ideas are relevant today after a thousand years.we can continue….this 


With best love to you both


Kirubanidhy Arikrishnan
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக