https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 25 ஜூன், 2023

தமிழ் விக்கி தூரன் 2023 ஆண்டிற்கான விருது முனைவர. மு.இளங்கோவன்

 

தூரன் விருது – கடிதங்கள்


https://www.jeyamohan.in/184800/


இனிய ஜெயம்,

புதுச்சேரி விஷ்ணுபுரம் நண்பர்கள் இன்று மு.இளங்கோவனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். அரிகிருஷ்ணன், திருமாவளவன், தாமரைக்கண்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்

கடலூர் சீனு



அன்பு நிறைந்த ஜெ. அவர்களுக்கு,

வணக்கம்.இன்று மாலை என் இல்லம் மகிழ்வில் திளைத்தது.

ஆம். கடலூர் சீனு, அரிகிருஷ்ணன், தாமரைக்கண்ணன், திருமாவளவன் ஆகியோர் ’தமிழ் விக்கி- தூரன் விருது’ பெற உள்ள என்னை நேரில் வந்து பார்த்து வாழ்த்துரைத்தனர்.பல்வேறு செய்திகளை உரையாடல் வழியாகப் பகிர்ந்துகொண்டோம்.தங்கள் படைப்புகள் குறித்தும், அறிவார்ந்த தங்களின் வாசகர்கள் குறித்தும் நீண்ட நாழிகை உரையாடினோம்.

தங்கள் அறிவிப்புக்குப் பிறகு என் வலைப்பதிவுப் பக்கத்திற்கு வந்தோர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக உயர்ந்தது.தொலைபேசி, மின்னஞ்சல், வாட்சப் வழியாகத் தங்கள் வாசகர்கள்  பலரும் வாழ்த்துரைத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.பலருக்கும் என் பணிகளை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இன்றைய நாளில் நினைவுக்கு எடுத்துக்கொண்ட படத்தைத் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

மு.இளங்கோவன்,

புதுச்சேரி

 

மு. இளங்கோவனுக்கு தமிழ் விக்கி தூரன் விருது. மலேசியாவுக்கு அடிக்கடி வருகை தரக்கூடியவர் மு. இளங்கோவன். இங்குள்ள தமிழியக்க அமைப்புகளுடன் அணுக்கமான தொடர்பு வைத்துள்ளவர். தமிழ் விக்கி கட்டுரைகள் தயாரிப்பின் போதுதான் மலேசிய ஆளுமைகள் குறித்து அவர் தேடிச் சேகரித்த கட்டுரைகளை அவர் தளத்தில் காணக்கிடைத்தது. அவர் சேகரித்து வழங்கிய தகவல்கள் போல மலேசியாவில் கூட அதுவரை யாரும் செய்திருக்கவில்லை.

பாவலர் குறிஞ்சிக் குமரனார், அ.பு.திருமாளனார், சி.வேலுசுவாமி, முரசு நெடுமாறன் என முக்கியமான அறிஞர்கள் குறித்து தேடித் தேடி சேர்த்திருந்தார். அவருக்கு தமிழ் விக்கி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. மலேசியத் தமிழ் ஆய்வுலகம், அறிவுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.

மு. இளங்கோவன் அகப்பக்கம் : http://muelangovan.blogspot.com/

மு.இளங்கோவன் முகநூல் பக்கம்ன்https://www.facebook.com/muelangovan

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

மு.இளங்கோவன் தொலைபேசி 9442029053

மின்னஞ்சல் muelangovan@gmail.com

ம.நவீன்

வல்லினம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக