https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 3 ஜூன், 2023

43 வது வைகாசி விசாகம்

வைகாசி விசகாம் வீட்டில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்வு. என்னை விட பல மடங்கு தீவிரமாக அந்த நாட்களுக்கு காத்திருப்பவள் என் மனைவி. என் தந்தையால் 1980 களில் துவங்கப்பட்ட இந்த நிகழ்வு இடையில் அவரது மரணம் காரணமாக 1996 களில் சிறிது தடைபட்டது. மீண்டும் அதை துவங்க வேண்டும் என்கிற எண்ணம் சிதம்பரம்AV. ரங்காசாரி ஸ்வாமி பேரன் பூநூல் வைபவத்திற்கு சென்ற போது சாத்தியமானது

வைகாசி விசாகம் நம்மாழ்வார் அவதார தினத்தின் பொருட்டு கொண்டாடப்படுவது. திருவாய் மொழி பாரசுங்களை முற்றோதுதல் நிகழ்வாக கோவில்களில் கொண்டாடப் படுகிறது. தந்தை தீவிர வைணவ நிலைப்பாடு எடுத்த பிறகு அவர் கொண்டு வந்த சில விஷயங்களில் ,வைகாசி விசாகமும் ஒன்று. அவரு குருவாக இருந்ழு ஏந்தூர் சடகோபர் இதை என் தந்தையிடம் சொல்லியிருக்க வேண்டும். அல்லது ஆர்வத்தால் தந்தையே இதை நடத்த வேண்டும் என விரும்பி இருக்கலாம் துவக்கத்தில் மூன்று நாள் நிகழ்வாக ஆரம்பித்து பின்னர் இரண்டு நாட்களானது. நான் விசாகம் நடத்த ஆரம்பித்த பிறகு பல்வேறு காரணிகளால் ஒன்றரை நாளாகியது

நம்மாழ்வார் சபை என்கிற அமைப்பு வருடம் முழவதும் பன்னிரண்டு விசாகங்களை நடத்துகிறது. இடைப்பட்ட இந்த நாற்பது வருடத்தில் முதல் முறையாக ஒரு சபையிடம் விசாகம் நடத்தும் பொறுப்பை கொடுத்து ஐந்து வருடங்களாகிறது . முன்னர் நாங்களே அதை முழுவதுமாக முன்னெடுத்துக் கொண்டிருந்தோம். சில நடைமுறை சிக்கல்களினால் இறுதியாக அது சபை வசம் சென்று சேர்ந்தது

இதுவரை பலவிதமானவர்கள் அர்ச்சகராக இருந்துள்ளனர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஆச்சரத்தை கொண்டிருந்தனர். இப்போது விசாகம் கோவில் திருவாய் மொழி முற்றோதல் என அரை நாள் அளவிற்கு சுருங்கி விட்டது. ஒன்றரை நாள் நிகழ்வாக ஓரிரண்டு இடத்தில் மட்டுமே நிகழ்கிறது. இரண்டு தலைமுறை காலத்தில் நிகழ்ந்த பெரிய மாற்றமிது












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக