https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 1 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 517 *கருத்தின் மறுபக்கம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 517

பதிவு : 518  / 707 / தேதி 01 பெப்ரவரி   2020

*கருத்தின் மறுபக்கம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 32

அரசியலின் உண்மையான முகத்தை அறியாது அதனுள் விளையாட்டாக 1985ல் நுழைந்ததை பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 1993 ல் வருத்தமுற்று விலகியதை விட  அதில் அத்தணை நாள் நிலைகொண்டிருந்ததுதான் ஆச்சர்யம் .1996ல் பல்வேறு நிகழ்வுகளினால் மிக ஆழமான  உள்கொந்தளிப்பில் இருந்த எனக்கு ஏதோ ஒரு வகையில் மீட்பிற்கு ஏங்கிய போது , எனது கதவு தட்ப்பட்டு நண்பர் வக்கீல் சுரேஷ்  என்ன சந்திக்க வந்திருந்தார் . என்னை முன்னாள் அமைச்சர் காந்திராஜ்  சந்திக்க விழைவதை சொன்னார் .அது தேர்தல் நேரம் . காந்தராஜ் எனது தொகுதியை சேர்ந்தவர் .

தேர்தல் ஒரு மாபெரும் திருவிழா . அது பல வித களியாட்டங்களுக்கு இடமளிப்பது .உளக் கொந்தளிப்பிற்கு மீட்சியை தரும் எல்லா அம்சங்களும் அதில் உண்டு . ஆனால் காந்திராஜ் நீண்ட காலம் காங்கிரஸில் இருந்தாலும் அவரை முழு நேர அரசியல்வாதியாக என்னால் ஏற்க இயலவில்லை . எனது தொகுதியான ராஜ்பவன் சர்ச் மற்றும் கிருத்துவ பள்ளி மற்றும் மிஷன்கள் நிறைந்த பகுதி.கணிசமான வாக்கும் அவர்களுக்கு உண்டு .அந்த கண்ணோட்டத்தில் ராஜ்பவன் எப்போதும் பார்க்கப்பட்டதில்லை முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸ்  திமுக வில் இருந்து சண்முகத்தால் காங்கிரஸிற்கு கொண்டுவரப்பட்டார்  . அவர் காங்கிரஸிற்குள் கொண்டுவரப்பட்ட பிண்ணனி மிக சுவாரஸ்யமானது . அது பற்றி விரிவாக முன்பே பதிவிட்டிருக்கிறேன் .

ஒரு கட்டத்தில் சண்முகம் மரியதாஸை  ஓரம்கட்ட முடிவெடுத் போதுதான்  கிருத்துவ சமூக வாக்கு வங்கி  அரசியல் உரத்து பேசப்பட்டது . கிருத்துவ ஓட்டுக்களை மரியதாஸ் முன்வைத்து தன்னை ஒதுக்க முடியாதபடி ஒரு  சிக்கலை உருவாகினார்மரியதாஸிற்கு கிருத்தவ சபையில் பெரிய மதிப்புண்டு .  அவர்கள் திரண்டு சண்முகம் சந்தித்து மரியதாஸிற்கு சீட்டு கொடுக்க வலியுறுத்திதினர் . அதை முறியடிக்க அதே சமூகத்தை சேர்ந்த காந்திராஜ் முன்னிறுத்தப்பட்டு   1991 தேர்தல் ராஜிவ்காந்தி  மரணமுற்ற தருணம்.  அந்த அலையில் மிக சொற்பமான நாற்பத்தி இரண்டு வாக்கு வித்தியாசத்தில்   வென்றிருந்தார் .1996 தேர்தல் நிச்சயம் வரு சாதகமில்லை என்பதே அன்றைய சூழல்  தேர்தலில் வென்று அமைச்சரானார் . புது பொருப்புகளுடன் தொகுதி அரசியலையும் ஒருங்கே கவணிக்க அவரால்   இயலவில்லை என்பது பிரதான காரணம் .

வக்கீல் சுரேஷ் என்னை தேடிவந்ததுகூட காங்கிரஸ் அமைப்பிலிருந்து  விலகியுள்ள அனைவரையும் உள்ளே கொண்டுவரும் நோக்கத்தில்தான். நான் இளைஞர் காங்கிரஸ் மாநில அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தும் கூட என்னை காந்திராஜ் அறிந்ததில்லை என்பதுதான் வேடிக்கை . ராஜ்பவனின் மொத்த வாக்காளர் ஆறாயிரத்திற்குள் . அவ்வளவு சின்ன தொகுதி . பத்து குடும்பம் ஒரு வேட்பாளரை புறக்கணித்தால் அவர் வெற்றி பெருவது சாத்தியமில்லை .

காந்திராஜ் அரசியலில் வேரற்றவர் . எனக்கான இடம் அங்கு இல்லை என்பதால் காந்திராஜை சென்று சந்திக்க விருப்பமின்றி இருந்தேன் .ஜோசப் மரியதாஸ் எங்கள் குடும்ப நண்பர் . நான் காந்திராஜை சந்திப்பதை மரியதாஸ் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது என தயக்கத்திற்கு பிறிதொரு காரணம் .

ஒரு கட்டத்தில் மரியதாஸ் நேரில் வந்து என்னை அழைத்த போது மறுக்க முடியாமல்  அவருடன் சென்று காந்திராஜை சந்தித்தேன் . சிலருடைய  முக அமைப்பு அல்லது உடல்மொழி எனக்கு  ஒவ்வமையை ஏற்படுத்துவதுடன் அவர்களைப்பற்றி தவறான புரிதலை கொடுத்துவிடுவதுண்டு . சில நாட்கள் பழக்கத்திற்கு பிறகு காந்திராஜை பற்றிய புதிய புரிதல்கள் கிடைத்தன . அவர் புதுவையின் மிகச்சிறந்த தண்டனைச் சட்ட  வழக்குரைஞர் என்பது நான் அறிந்ததே  .தொழிலில் அவருக்கிருந்த ஆளுமை அரசியலில் சற்றும் இல்லை என்பதே எனது புரிதல் . அவர் பழக மிக எளிய மனிதராக இருந்தார்

காந்தராஜ் அரசியல் பற்றி பல அரிய கருத்தியல்களில் தனிப்பட்ட எண்ணம் கொண்டவர் .நல்ல உரையாடல்களில் ஈடுபடக்கூடியவர் அதனால் நல்ல கொள்கை வகுப்பாளர் . தேர்தல் அரசியல் களம் வேறுவிதமான மனிதர்களுக்கானது. காந்தராஜ் அதற்கு சற்றும் பொறுத்தமில்லாதவர் .அரசியல் பற்றிய அவரின் பல நுண்ணிய  கணக்குகள் ஒரு சிறந்த  வக்கீலுக்கு உரியது . ஒரு அரசியல் மாணவனாக என்ன ஈர்க்கக்கூடியது .எனக்கும்  காந்திராஜிற்கும் மிக அனுக்கமான உறவு உருவாகி வந்தது .

பல உரையாடல்களின் வழியாக அவரும் என்னை புரிந்து கொண்டிருக்க வேண்டும்  . எனக்கான இடமாக சண்முகத்தை அவர் நினைத்தார் அதற்க்கு நான் எப்போதும் முரண்பட்ட கருத்துக்களையே முவைத்தேன்  . என்னைப்பற்றி கவனத்தை காந்திராஜ் சண்முகத்திற்கு கொண்டு சென்றபோது தேர்தல் முடிவுறும் சமயம்சண்முகம் என்னை அழைப்பதாக காந்திராஜ் சொன்னபோது எனது மறுப்பைத்தான்  முதலில் தெரிவித்தேன் .சில வாரம் காந்திராஜ் தொடர்ந்து வலியுறுத்தியும் எனது நிலை அதுவேஒருநாள் திடீரென வீட்டிற்கு வந்து அழைத்த போது தவிற்க இயலாமலும் மிக தயங்கிய நிலையில் சென்று சந்தித்தேன் . சண்முகத்தை சந்தித்தேன் .அதுவே என்னை மீண்டும் தீவிர அரசியல் செயல்பாட்டில் கொண்டு விட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...