https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 520 *கற்றவையும் கல்லாதவையும் *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 520

பதிவு : 520  / 709 / தேதி 05 பெப்ருவரி   2020

*கற்றவையும் கல்லாதவையும் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 34.
.இளைஞர் காங்கிரஸ் அமைப்பு தலைவர்கள் உருவாகி வரும் இடம் என்பதால் அதில் வளர்ந்து வரும் எவருக்கும் தன்னை முன்வைத்த மாநில அளவிலான அரசியல் கனவு எழுந்துவிடும் , அதற்கு யாரும் விதிவிலக்கில்லை . பொருளியல் பலத்தை சாராத கருத்தியல் அல்லது நட்பின் அடிப்படையில் அமைப்பை உருவாக்குவது எளிது .பெரிய திரளை ஒருங்கிணைப்பது . அதன் வழியாக அதை வளர்த்தெடுப்பவர் அரசியலில் தவிற்க முடியாத தலைவராக உருவெடுப்பார் . கண்ணன் நட்பை முன்வைத்து பெரிய வெற்றியை அடைந்தார் . அதை கருத்தியலாக கொண்டு பாலன் உருவானார் .

தில்லி மேலிடம் சார்ந்த அரசியல் பற்றி காந்திராஜிற்கு  தெளிவான புரிதல் இல்லை என்பதை முன்பே அறிந்திருந்தேன் . தில்லி அரசியலில் அனுபவம் இல்லாதவரை மாநில அரசியலில் ஏற்படும் மாற்றத்தை புரிந்து கொள்ளவோ அதில் தனது இடத்தை திட்டமிடவோ இயலாது.அமைச்சராக இருந்த காலத்தில் தில்லிக்கு பல முறை பயணப்பட்டவருக்கு தில்லி தலைமை அலுவலகம் இருக்கும் அக்பர் ரோடு எந்த கவர்ச்சியையும ஏற்படுத்தவில்லை என்பது புரிந்து கொள்ள கூடியது . 1991ல் மாநில தலைவரை கடந்து நேரடியாக பாலனுக்கு தேர்தல் சீட்டு பெறுவதற்காக திட்டமிட்டு செயலபட்ட இளைஞர் காங்கிரஸின் அனுகுமுறையை அவருக்கு பிறிதொரு கோணத்தில் சொன்ன போது அவர் காங்கிரஸ் கட்சி அரசியலை புரிந்து கொள்ள முயன்றார் .

அகில இந்திய காங்கிரஸின் செயல்படுமுறை குறித்த மற்ற மாநில அரசியளார்களுக்கும் புதுவை இருந்து செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுவல்சராஜ் விதிவிலக்கு . வல்சராஜின் அரசியல் அணுகுமுறை கேரள பாணியை அடிப்படையாக கொண்டது . அவருக்கான தில்லி களம் விரிவானது . அதனாலேயே அவர் சண்முகத்துடன் முரண்பட்ட பிறகு அவரை மிக எளிதாக வீழ்த்துவதற்கான அலகை உருவாக்கி வைத்தார் .பின்னாளில் அவர் வீழ்ச்சியடைய வல்சராஜ் உருவாக்கி வைத்த அலகுகளே வழிவகுத்து கொடுத்தது .தில்லியில் பலம்பெறுவதே மாநில அரசியலின் அடிப்படை என்பது சண்முகத்திற்கு தெரியும் . அதனாலேயே  மாநில அமைப்பை சேர்ந்த யாரும் தில்லியில் தங்களுக்கென ஒரு தொடர்பை உருவாக்கி கொள்ளாது பார்த்துக் கொண்டார் என்பது அவரின் அரசியல் வெற்றிக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று .

இது இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் வளர்ந்த அனைவருக்கும்  உருவாகி வரும் அடிப்படை கருத்தியல் என்றாலும் காந்திராஜிற்கு தெரியாது போனதில் எனக்கு ஆச்சர்யமில்லை .இளைஞர் காங்கிரஸ் அமைப்பை அதன் தாய் அமைப்பிற்கு இணையாக வளர்த்தெடுத்தது 1977 க்கு பிறகு . சஞ்ஜய் காந்தி அதன் தலைவராக இருந்த காலத்தில் .காந்திராஜ் அதன் முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் .

1996ல் மோசமான உளக்கொந்தளிப்பிலும் பலவிதமான சிக்கலான அரசியலாலும் அடிப்பட்ட எனக்கு மீளவும் அரசியல் துவங்கிய போது  காந்திராஜுடனான அரசியலே போதும் என்கிற உறுதியுடன் இருந்த நேரம் .ஆனால் எனக்கான இடம் சண்முகத்திடம்தான் இருக்கிறது என சொல்லி அவரிடம் அழைத்துச் சென்றார்சண்முகம்  என்னை மீண்டும் கட்சி விஷயங்களில் ஈடுபட சொன்னபோது அவரிடம் உறுதியாக மறுத்தேன் . அந்த மனத்துடன்தான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அரசியல் குறித்த அவரது பார்வை ஒரு மாணவனாக என்னை பெரிதும் ஈர்த்தது .மிக நுண்ணிய கோணத்தில் என்னிடம் பேச முற்பட்டார்

ஒரு மாநிலத்தின் முதன்மை ஆளுமையுடான உரையாடல் மிகவும் வசீகரமானது .சண்முகம் பேச்சில் இருந்த எதார்த்தமே அந்த உரையாடலுக்கு நான் முக்கியத்தும் கொடுக்க காரணமானது . அவர் சொன்னது அத்தனையும் புதுவையில் இளைஞர் காங்கிரஸிற்கும் அவருக்குமான  முரண்.அதில் தன் தரப்பென அவர்முன்வைத்த விஷயமே நான் முழுமையாக அவருடன் நிகழ்த்திய உரையாடலுக்கான காரணம்

அவர் என்னிடம் சொன்ன அனைத்து நுண்தகவல்களும் இளைஞர் காங்கிரஸின் தலைவர்களாக இருந்த கண்ணன் மற்றும் பாலனை நோக்கி கேட்கப்பட வேண்டியவை . என்னை என்னவாக நினைத்து அவர் அவற்றை முன்வைத்தார் என்பது எனக்கு தெரியாது . ஆனால் அவரது உரையாடல் ஒரு வகையில் காந்திராஜை நோக்கியதாக இருந்திருக்கலாம் . காந்திராஜும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் .அந்த அமைப்பின் மீது சண்முகத்திற்கு இருந்த கசப்பு காந்திராஜன் காலம் முதல் இருந்திருக்க வேண்டும் என யூகித்தேன் .ஒரு வகையில் அது உற்சாகமளிப்பதாக இருந்தது .

சண்முகம் மீதான முரண் எனக்கும் தனிப்பட்ட முறையில் இருந்தது . எனது இயல்பில் ஒருவர் மீதாக புரிதலை என் அனுபவத்தில் இருந்தே துவங்குவது எனது வழமை . பிறரின் கருத்திற்கு என்னிடம் மதிப்பு உண்டு என்றாலும் ஒருவர் மீதான கசப்பை பிறிதொருவர் என்னிடம்  உருவாக்க இயலாது என்பது நான் உருவாக்கி கொண்ட எனது  அடிப்படை. இன்றுவரை என் வாழ்கை எனது ஆழமான புரிதலில் இருந்து உருவானது . அதனாலேயே அதில் நான் சந்தித்த மிக மோசமான நிகழ்வுகள் கூட என்னை பாதித்ததில்லை , காரணம்  அந்த நிகழ்வுகளின் பின்புறத்திலிருந்து அதன் இன்றைய பரிமாணத்த்தை புரிந்து கொள்ள முயல்வேன் .

அவை எனது ஆழ்மனப் புரிதலில் இருந்து நான் பெற்றவை . அறிவையும் அறீவீனத்தையும் அடையும் கற்றலிலும்  கல்லாமையிலும் இருந்து கிளைத்தவைகளாக புரிந்து கொள்கிறேன் .இரண்டும் ஒரே மயக்கத்தை கொடுப்பவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக