https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 521 * அனுபவம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 521

பதிவு : 521  / 710 / தேதி 07 பெப்ருவரி   2020

அனுபவம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 35.



கல்லாதவை கொடுக்கும் போதாமையை கற்றவையும் ஒரு கட்டத்தில் கொடுப்பவை என்பதால் உலகிகியலில் இரண்டும் எல்லா சந்தர்பத்திலிலும் மாயை என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது .மேலும் உலகியல் கடந்த ஒன்றில் இவற்றிக்கு ஒன்றே நிலை என்றும் அறிந்திருக்கிறேன் .கற்றவை பிறவற்றை உள்நுழைய விடுவதில்லை . புதிதென கற்பவை நிகழ்வதில்லை .நீண்ட அனுபவம் புதிய முயற்சிகளை தடுத்து விடுகின்றன ஆனால் எத்துறையிலும் புதிதாக நுழைவபவர்கள் அனைத்திலும் சாதித்து செல்வதை காண இயலுகிறது . அனுபவம் போன்ற தடை பிறிதில்லை என்றே நினைக்கிறேன் .

சண்முகம் தனது தனிப்பட்ட அரசியல் வாழ்கையில் இருந்து  ஏற்பட்ட நிகழ்வுகள் , அதில் தான் அடைந்த புரிதல் மற்றும்  விரக்தி , விலகல் நிலை பற்றி மிக விரிவாக பேசினார். அவர் மேற்கோளிட்ட அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் ஒருவகையில் நான் அறிந்திருந்தேன். பலவித அரசியல் செயல்பாடுகளின் வழியாக  மூப்படைந்த அவரிடம் புதிய கற்றலுக்கான இடம் இன்னும் மிச்சமிருப்பதை உணர முடிந்தது .இறுதியாக எனது வயதை குறிப்பிட்டு எனக்கான நேரத்திற்திற்காக காத்திருக்க சொன்னார். அதுவரை கட்சியின் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட அறிவுறுத்தினார்

அவரது அனுகுமுறையால் ஈர்க்கப்பட்டேன் . என்றாலும் அவர் சொன்னது எனக்கு நகைப்பை ஏற்படுத்தியது . அன்று நான் இருந்த மனநிலை என்னிடம் இருந்து என்னை மீட்கும் தருணத்தை நோக்கி காத்திருப்பது மட்டுமே . அதில் அரசியல் இலக்கு என ஒன்று இருப்பதாக என்கண்ணுக்கு எட்டியவரை தென்படவில்லை . சண்முகம்  புதுவை அரசியலின் முதன்மை ஆளுமை அங்கு எனக்கான அரசியலில் வாய்ப்பு தானாக உருவாகி வருவதற்கு வாய்ப்பில்லை . அதே சமயம்  நான் ஒன்றை உருவக்கிக் கொள்ளும் மனநிலையிலும் இல்லை பின் காத்திருப்பு எங்கு நிகழ போகிறது என்பதே நான் உள்ளூற நகைத்துக் கொண்டதற்கான காரணம் .

காலம் மிக விந்தையானது ,எவரின் உறுதியையும் உடைத்து வீசி விளையாடுவது , நிலைகுலைய வைப்பது . ஒருநாளும் எவரையும் , எப்போதும்  தங்கள் இருப்பில்  வைத்து கொள்ள விடாதது  . அது ஒரு உயிருள்ள விலங்கு போல ஒருவர் எது ஒன்றில் உறுதியாக இருக்கிறாரோ அதை கலைத்து அவருடன் விளையாடுவதை அறிந்திருக்கிறேன் .

1996ல் பாலன் அரசியலில் தன்னை மட்டுமே நம்பி இருந்த எளிய இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எந்த கவலையும்  சிந்தனையும் இன்றி கட்சியில் இருந்து வெளியேறினார் . அது ஒரு முண்ணனி அமைப்பின் தலைவர் செய்யும் காரியமில்லை . தனது எதிர்காலம் நோக்கி அவர் பயணித்தபோது ,காலம் அவரை புரட்டிப் போட்டிருந்தது  . இன்று கைவிடுதலின் அனுபவத்தை அதன் வலியை அவர் மிக நுணுக்கமாக அறிந்திருப்பார் என நம்புகிறேன் .காலம் அவருக்கு அவரை  விட்டு விலகிய எதையும் மீட்டளிக்கவில்லை .பல புதிய எல்லைகளை தொட்டார் , எண்ணாத பல பெரிய இலக்கை அடைந்தார் ஆனால் நிறைவடைந்தாரா என்றால் இல்லை என்பதுதான் அவரது பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்

அரசியலில் அவரை மட்டுமே நம்பி இருந்தவர்கள் வாழ்விடத்தை இழந்த பறவை போல அங்கேயே சுற்றி வந்தார்கள் இடம் பெயரத் தெரியாமல் அங்கேயே மக்கி போனார்கள் .பலர்  நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகினார்கள் . அவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் நல்ல வாய்ப்பு இருந்தும் அதற்கு  மீளவேயில்லை . மீண்டவர்கள் சிலர் .வேறு சிலர் எல்லாவித மன சமாதனங்களையும் ஏற்றார்கள் . அவர்கள் அரசியல் தவிர பிற எதையும் அறியாதவர்கள் .

பாலனுக்கு பிறகு 1997ல் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின்  தலைமையை வல்சராஜ் ஏற்றார் . அவர் பாலனின் நிர்வாக கமிட்டியில் சண்முகத்தின் எண்ணத்தை நிறைவேற்ற வந்தவர். எந்த நிர்வாக கூடுகையிலும் அவர் கலந்து கொண்டது இல்லை .சக நிர்வாகிகளில் யாருடனும் அவர் தொடர்பு உருவாக்கிக, கொள்ளவில்லை .தனக்கு முதலியார்பேட்டை தொகுதியில் தேர்தல் சீட்டு .அதற்கு தடையாக இருக்கும் சண்முகத்தை  எதிர்ப்பது என்கிற பாலனின் இரட்டை கொள்ளகையில் ஆரோக்கியமான அரசியலுக்கு இடமில்லாது போனது அதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்

வல்சராஜ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு இளைஞர் காங்கிரஸிற்கு கடந்தகாலத்தில் உழைத்த அனைவரும்  மறக்கடிக்கப்பட்டனர் .அது வாழ் நிலம் சட்டென இல்லாமலாவதற்கு நிகர் . தலைமை பதவிக்கு வரும்போதே அது தனக்கு பொருந்தாத உடை என்கிற நினைப்போடு வந்திருக்க வேண்டும்  . மரைகாருக்கு நெருக்கமாக பேசப்பட்ட முன்னாள் மாணவர் காங்கிரஸின் தலைவர் நாராயணசாமிக்கு கிடைத்திருக்க வேண்டிய தலைவர் பொறுப்பு . அவரது அனாவசிய வாயால் கெட்டது . அவருக்கு கிடைக்காமல் செய்ய சண்முகத்தின் பரிந்துரையால் வல்சராஜ் அங்கு வந்து அமர்ந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...