https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அடையாளமாதல் - 522 * வினோதம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 522

பதிவு : 522  / 711 / தேதி 09 பெப்ருவரி   2020

வினோதம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 36 .



இளைஞர் காங்கிரஸின் பொது செயளாலர் பதவிக்கு, வராமல் இருந்திருந்தால் அரசியல் பரிபவங்களை பார்க்கும் வாய்ப்பு வாய்த்திருக்காது . ஊழின் முடிவுகள் விந்தையானது . அது மீளவும் சர்ச்சை மிகுந்த அரசியலுக்குள் என்னை தள்ளிவிட்டது . பதவியேற்ற புதிதில் நான் உருவாக்கி வளர்க்க என்கிருந்த பெருங் கனவு இப்போது காலாவதியாகி இருந்தது மேலும்  சிலரின் அரசியல் சூழதலால் நினைத்த காலத்திற்குள் நிகழாது போனது

மெல்ல நான் பலம்பெற்று வளர்ந்து வந்த சூழலில் செய்ய நினைத்த பல விஷயங்களை முன்னெடுக்க வாய்பில்லாமல்  காலம் கடந்துவிட்டிருந்தது .அரசியலில் நகர்வுகள் காலத்திற்கு அதீனமானது காலத்திற்குள் அவற்றை செய்து முடிக்க முடியாது போகுமானால் அந்த நகர்வுகள்  எதிர் நோக்கிய பலனை தராது  என்பதோடு அல்லாமல் எதிர்மறை பலனை  உருவாக்கி விடும் .

1998ல் எனக்கு எதிராக திரண்டிருந்த குழு வெரும்  உதிரிகளின் திரள் அவற்றால் அரசியலில் எதையும் முன்னெடுக்க இயலாது என்றாலும் நான் செயல்படுவதில் இருந்து என்னை முடக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர் . என்ன உள் திட்டத்திற்காக இவற்றை முன்னெடுத்தனர் என்பது இன்றுவரை எனக்கு புதிர்தான் .பின்னர் ஒரு புள்ளியில் என்ன காரணத்தினாலோ வல்சராஜ் மீது நம்பிக்கை இழந்து காங்கிரஸை விட்டு விலகினர் . வழமை போல கமலக்கண்ணன் அதற்கு முன்நிலை வகித்தார் . அது  வல்சராஜை அதிர்ச்சி அடைய செய்தது .அவர் அந்த செய்தியை கேட்கும் போது தில்லிருந்தார் . நான் உடனிருந்ததால் அவரது மனநிலையை பார்க்கும் வாய்ப்பு எனக்கு .

தனக்கு தலைவர் பதவியில் எந்த ஆர்வமும் இல்லை என அவர் சொன்னதும் நடந்து காட்டியதும்  அனைத்தும் நடிப்பு மட்டுமே என்பதை அப்போது அவர் இருந்த மனநிலையை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது .வல்சராஜின் உள்ளோட்டம் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள முடியவில்லை .எனக்கான பாதை புதுவையில் திறந்து கொண்டது . தில்லியில் இருந்து புதுவை வந்து சேரும் வரை அதை  நான் அறிந்திருக்கவில்லை.

என்ன காரணத்திற்காவோ அவர் அமைப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிய காரணிகள் ஒதுங்கிவிட்டதால் அவர் அமைப்பிலிருந்து முற்றாக விலகிக் கொண்டார் . சில காலம் எந்த செயல்பாடுகளும் இல்லாமல் அமைப்பு ஸ்தம்பித்து போனது .வருடாந்திர அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கூடுகை தேதி குறிப்பிடப்பட்டு தகவல் வல்சராஜிற்கு வந்த போது அவர் அந்த கடிதத்தை கொண்டுவந்து சண்முகத்திடம் கொடுத்து தன்னால் இதற்கு செல்ல இயலாது என சொல்லிவிட்டு அன்று மாலையே வல்சராஜ் மாஹே புறப்பட்டுச் சென்றுவிட்டார் .

நான் தலைவரை வழமையாக இரவு சந்திப்பது .அன்று சந்தித்தபோது என்னிடம் உரத்த குரலில் வல்சராஜின் பொறுப்பற்ற நடத்தையை என்னிடம் விமர்சிக்க துவங்கினார் .எதை குறித்து ஆவேசப்படுகிறார் என்பதை அறிந்து கொள்ள எனக்கு எந்த ஆர்வமும் இல்லை . அவர் நினைத்திருந்தால் வல்சராஜ் மாஹே சென்றிருக்க முடியாது . பல  சந்தர்ப்பங்களில் அவர் சண்முகத்தின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை என்பதை பார்த்திருக்கிறேன். அதைபற்றி வல்சராஜிற்கு ஒரு அளவுகோல் இருந்திருக்க வேண்டும் . மீற முடிபவை , முடியாதவை என . அல்லது சண்முகம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரை கட்டுப்படுத்த விழைவதில்லை. தனக்குறிய நேரத்திற்காக அவர் வல்சராஜின் மீறல்களை அனுமதிப்பது கூட ஒருவித தன்னிருப்பு குறித்த எதிர்கால  சேமிப்புதான் போலும்.

அடுத்த நாள் காலை காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற போது உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சூர்யநாராயணன் . சண்முகம் என்னை சந்திக்க விழைவதாக சொன்னார் . என்னவாக இருக்கும் என அவரிடம் கேட்டபோதுதான் தில்லியில் நடக்க இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு குறித்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தது .

எனக்கு சண்முகம் நேற்று என்னிடம் பிதற்றியதன் பிண்ணனி புரிந்து கொள்ள முடிந்தது . ஒருவித வெறுமையை அடைந்திருந்தேன் . மனதில் பல வேறு சிந்தனைகள் . இளைஞர் காங்கிரஸில் நான் சந்தித்த சிக்கல்களை அவரிடம் ஒருபோதும் சொன்னதில்லை .மிகுந்த மன உளைச்சலை அடைந்த சந்தர்ப்பங்களில் அது பற்றி சூரியநாராயணனுடன் மட்டுமே பேசி இருக்கிறேன் . அந்த சூழல்களில்  அவரும் சண்முகம் பற்றிபல நுணுக்கமான தகவல்களின் வழியாக என்னை ஆற்றுப்படுத்துவார் .
சூர்யநாராயணன் சண்முகம் அமைச்சரான காலத்தில்இருந்து அவருடன் இருப்பவர் .சண்முகம் பற்றி மிக தெளிவான புரிதல்களே அவரை சண்முகத்துடன் இருக்க வைத்திருக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...