ஶ்ரீ:
அடையாளமாதல் - 519
பதிவு : 519 / 708 / தேதி 03 பெப்ருவரி 2020
*புதிய பக்கம் *
“ ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 33
காந்திராஜை பற்றிய எனது எதிர்மறையான கருத்து அவருடான நீண்ட உரையாடல்களுக்கு பிறகு மாறுபாடு அடைந்த பின் எனக்கும் அவருக்குமான அனுக்கம் உருவாவதற்கு ஒரு சில நாட்களே போதுமானதாக இருந்தன. அன்றைய சூழலில் புதுவை மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள தலைமைக்கான வெற்றிடம் பற்றி இருவரும் ஒரே கருத்தை கொண்டிருந்தோம் .அது அடுத்த தலைமுறை தலவரை பற்றியது . புதியதாக எழுந்து வரும் தலைவர்களால் மட்டுமே அடுத்த தலைமுறையை புரிந்து கொள்ள முடியும் அவர்களை நோக்கி பேசமுடியும் . கட்சி பலவித உட்பிரிவுகளை கொண்டிருப்பது இதன் பொருட்டே .
எந்த பின்புலமும் அற்று உழைப்பால் கட்சியிலிருந்து உருவாகி வரும் இளம் தலைவர்களால் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தங்கள் விழுமியங்களில் இருந்து உருவாக்கி கொள்வார்கள். தொண்டர் அமைப்பின் வழியாக தங்கள் எதிர்காலத்தை திட்டமிட முயல்வார்கள் . அது பலருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை வளர்த்துக் கொடுக்கும் . வாரிசு அரசியல் அ தற்கு உதவாது
தேர்தல் அரசியல் வேறுவிதமானது , பெரும்பாலும் தற்சார்பு அற்ற , அடைப்படை தகவலுக்கும் பிறிதொருவரை சார்ந்து நிற்கும் தலைவர்களையே அது உருவாக்குகிறது .அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் சந்திக்கும் குமுகம் தாண்டி பொது சமூகத்திடம் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்பதால் அவர்கள் கட்டற்றவர்களாக வளர்ந்து விடுவே வாய்ப்பு அதிகம். அவர்கள் உருவாக்கும் இரண்டாம் நிலை தலைவர்களின் நிரை ஊழலை வடிவைக்கும் ஊற்று முகமாக பெரும்பாலும் மாறி விடுகிறது .நல்ல ஆரோக்கியமான சூழலை அது உருவாக்காது போய்விடும் வாய்ப்பே அதிகம் .
புதுவை காங்கிரஸ் அமைப்பில் புதிய தலைவர்களை உருவாக்கி கொடுக்க வேண்டிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பு கால் நூற்றாண்டுகளாக அதன் தலைவர்களின் குறுகிய எண்ணத்தால் , எதிர்காலம் குறித்த பார்வை குறைபாடு காரணத்தினால் ,இங்கிருந்து அங்கு செல்லும் பாதையை முற்றாக சிதைத்து விட்டனர் .அது அவர்களுக்கான பாதையும் கூட .அதனாலேயே அவர்கள் சென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமற் போனது . அதன் இரண்டு தலைவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக அரசியலில் இருந்து பின்னர் காணாமலாயினர் . இருவரும் இயக்கத்தை ஒரே திசைக்கு நகர்த்திவர்கள் என்பதே அவர்களுக்கான ஒற்றுமை .
நான் மீளவும் அமைப்பை அதன் அசலான காரணத்தை நோக்கி முன்னெடுக்க முயற்சித்ததற்கு இரண்டு காரணம் , ஒன்று அதனூடாக சிதைந்த போன அதன் பாதையை சரிசெய்ய இயலும். புதிய இளம் தலைவர்களுக்கான களம் உருவாகும் , இரண்டு என்னை போன்ற தேர்தல் அரசியலை விரும்பாதவர்களுக்கான கதவை திறந்து கொடுக்கும் . இது ஐந்து வருட அமைச்சர் பதவியில் காந்திராஜ் உருவக்கிக் கொண்ட மனநிலை , மற்றும் தேர்தல் அரசியலில் இரண்டாம் நிலை தலைவர்களே இல்லை என்கிற உண்மையும் .வரும் சிலரும்அதில் கிடைக்கும் பொருளியல் காரணத்திற்காக வருபவர்கள் மட்டுமே .அவர்களுக்கு விழுமியங்கள் என்கிற சொல்லே கெட்டவார்த்தை .
அவருடைய மாற்றம் தனது தேர்தல் களத்தில் அவர் கண்டடைந்த உண்மையில் இருந்து பிறந்ததாக இருந்திருக்க வேண்டும் .ஒருகாலத்தில் கட்சி சர்ந்த இளம் நண்பர்களை கண்டு வளர்ந்த அமைப்பின் தலைவராக அவர் இருந்ததால் இன்றைய வெற்றிடத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும் . இதை குறித்து நான் எனது கருத்தை சொல்ல முற்பட்ட போதுதான் எனக்கும் அவருக்குமான பொதுவான கருத்து உருவாகி எங்களுக்குள் நல்ல அனுக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் .
பலருக்கு நான் புரியவைக்க முயன்று தோற்ற ஒரு நடைமுறை கருத்தியல் உண்மை அது. முக்கிய தலைவர்களுக்கு நான் அதை விளக்க முயற்சித்த அவர்கள் அனைவரும் தொகுதி அளவிலேயே சுருண்டவர்கள் என்பதால் மாநில அளவிலான கட்சி அரசியலை விபரீதமானதாக நினைத்தார்கள் . மேலும் பொருளியல் ரீதியாக தனக்கான அமைப்பை தொகுதி ரீதியாக வளர்த்து வைத்திருப்பவர்களுக்கு அதே போல மாநில முழுவதும் உருவாக்குவது கட்டுப்படியாகாததாக தோன்றி மிரள வைத்திருக்க வேண்டும் . மேலதிகமாக பிற பகுதிகளில் கவனம் , செலுத்துவது சக சட்டமன்ற உறுப்பினர்களின் எல்லைகளில் விளையாடுவது . பல விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என அஞ்சினர் . அது உண்மையும் கூட . ஆனால் காந்திராஜ் அதை தனக்கான இடமாக என்னிடம் சொன்னபோது நான் ஆர்வமுற்றேன் .
2006ல் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்க அதில் ரங்கசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . பின்னர் உட்கட்சி முரணில் 2008ல் பதவி விலக நேர்ந்தது .புதுவையில் இரண்டாம் முறையாக நிகழ்ந்த முதல்வர் மாற்றம் . முதல்வர் மாற்றப்படுகிற போது அங்கு அரசியல் நிலத்தண்மை குலைந்து புதியஅரசியல் வழிமுறைகள் திறந்து கொள்கிறது .குபேர் தோல்வியுற்ற களத்தில் ரங்கசாமி வென்றார் .2011ல் அந்த இடத்தை மிக வெற்றிகரமாக நிரப்பிய ரங்கசாமி அதுவரை யாரும் அடையாத மிகப் பெரிய வெற்றியை அடைந்தார் .அது ஒருவகையில் நாங்கள் யூகித்த “தலைவருக்கான வெற்றிடம்” என்கிற கருத்தியல் கொள்கை உண்மையானதே என்கிற புரிதலை கொடுத்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக