https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 அக்டோபர், 2022

மணிவிழா. 9

 ஶ்ரீ:



மணிவிழா - 9

28.10.2022.




மணிவிழா ஏற்பாடுகளை மனைவியும், விஜியும் பார்த்துக் கொண்டனர் எனக்கு ஒரு வேலையும் இல்லை. செலவுக்குகூட மிக மிக குறைந்த தொகையே எனது பங்காக கொடுத்திருந்தேன் அதுவும் என் வரையில் ஒன்றும் கொடுக்கவில்லை என எனக்கு இருக்கக் கூடாது என்பதற்காக. மற்றபடி முழு செலவையும் விஜி நிவாஸ் பார்த்துக்கொண்டனர். என் மனைவி அவர் செலவிற்கு அவர் அம்மா கொடுத்ததாக சொன்னார் அது எவ்வளவு என தெரியாது


மணிவிழா பெற்றோருக்கு குழைந்தைகள் நடத்துவது . நான் என் தந்தைக்கு இதுபோல மூன்று நாள் நிகழ்வாக ஒருங்கி இருந்தேன். மிக சிறப்பாக நடந்தது . என் தந்தையின் மணிவிழா 1991ல் நடைபெற்றது அந்த சூழலில் எனக்கும் எனது இரு தங்கைகளுக்கும் திருமணம் நிகழாத சூழலில் என் தந்தை அவரின் மணிவிழா திட்டத்தை மறுத்தார் என்றும் அவரது நண்பர்கள் மற்றும் சம்பிரதாய பெரியவர்கள்தவிர்ப்பது முறையல்லஎன்று சொன்னதற்கு பின்னர் ஏற்றார் என அறிந்திருக்கிறேன் . அப்பாவின் மணிவிழா முதல் நாள் வைதீகமாக திருக்கோவிலூர் ஜீயர் தலைமையில் துவங்கி பின்னர் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வாக நிறைவடைந்தது. அது அவரின் வாழ்வின் முழு பயணத்தையும் பிரதிபலித்தது . நான் எனக்கான தேடலை அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து துவங்கி இருக்கிறேன் என்பதை மிக தாமதமாக உணர்ந்தேன்


மணி விழா ஏற்பாட்டில் முக்கியமாக மூன்று விஷயங்கள் ஒருங்கு திரள வேண்டும் என்பதால் ஐந்து மாதத்திற்கு முன்பாக ஏற்பாடுகளை துவங்க வேண்டி இருந்தது . பட்டாசாரியார் கோஸகன் முதலில் உள்வரவேண்டியவர் . அவர்தான் மூன்று நாள் நிகழ்வை முழுமையாக கொண்டு செல்லபவர் . விஜி அவரை சந்தித்து அவரது பங்களிப்பை உறுதி செய்த பிறகு பிற வேலைகள் திட்டமிட்ட பாதையில் மெல்ல நிகழத்துவங்கியது .


வேதா நெருங்கிய உறவினர்கள் அனைவரின் குடும்பத்தார்களுக்கும் பட்டு புடவை, வேட்டி,சட்டை மற்றும் தாம்பூலத்துடன் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாள் . நான் அது செலவேறியது என்று தவிர்க்க சொல்ல மறுத்தது விட்டாள் . முன்பே அறிந்தது தான்குறைந்தது முப்பது குடும்பத்திற்கான உடைகள் . பின்னர் பணியாளர்கள் உடை என பட்டியல் நீண்டு சென்றது .அதற்கு முழுமையாக மூன்று மாதம் எடுத்துக்கொண்டாள் . அதற்கு பிறகும் வெவ்வேறு காரணங்களை கண்டு அது இன்னும் வளர்ந்தபடி இருந்தது . பொருளியல் தாண்டி உடல் உழைப்பு இன்னும் தீவிரமான ஒன்று . அந்த ஐந்து மாதமும் காலை மாலை என தனி ஒருத்தியாக செல்வதும் வருவதுமாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வீடு திரும்பும் போது கை நிறைய துணி பைகளுடனும் சிரிப்புமாக இருந்தாள். பெண்களுக்கு பொருட்களை வாங்குவதில் உள்ள சந்தோஷதிற்கு இணை பிறிதில்லை. அது யாருக்காக வாங்கியதாக இருந்தாலும் அதே உணர்வை அடைந்து விடுகிறார்கள்


அடுத்த கட்டமாக எழுத்தாளர் ஜெயமோகனை  தொடர்பு கொண்ட போது வெள்ளிமலையில் இருந்தார் . மணிவிழா பற்றி அவரிடம் சொன்ன பிறகு இரண்டு விஷயங்களை அவரிடம் சொன்னேன். ஒன்று அவர் தனது மனைவியுடன் அவசியம் வந்து பங்குபெற்று திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும். இரண்டு நிறைவு விழாவை ஒட்டி நிகழ இருக்கும் சிறிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்விற்காக அவருடைய தனி உரை ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் இரண்டாம் அமர்வாக   தூரன் விருது பெற்ற கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு பாராட்டு விழாவில் நடத்த இருப்பதையும் அதிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என சொன்னேன் . மிக மகிழ்வாக ஏற்றுக்கொண்டார். அனைத்தும் மிக சரியாக அதனதன் கட்டத்தில் அமைந்தது பிற்றிதொரு கீதா முகூர்த்தம்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...