https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 24 அக்டோபர், 2022

மணிவிழா - 5

 





ஶ்ரீ


மணிவிழா - 5

24.10.2022





பெண்களால் சூழப்பட்ட உலகம் முற்றியலும் வேறானது. வாழ்ந்தும் வாழச்சென்ற இடத்தில் இருந்தும் அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்வதற்கு செலவிட்ட நேரம் போக, போகாத நேரத்தை அங்கையும் இங்கையுமாக இணைக்க முயற்சிக்கிறார்கள். புரிதலின் படிநிலை போல. நிலைக்கு தக்கபடி பிறந்தகம் புகுந்த வீடு என்கிற எல்லைக் கோட்டை மிக மெல்லியதாக்கி விட முயற்சிக்கிறார்கள் . அது அவர்கள் அங்கு காலூன்றும் வரை தான். பிறகு அந்த செயல்பாடுகளால் அவர்களுக்கான இடம் உறுதிபட்டதாகஉணர்ந்தபிறகு அது பிறிதொரு திசையில் வேகமெடுக்கிறது


அதில் ஒன்றை இன்னொன்றுடன் பொருத்தி இரண்டு பக்கமும் கொதிநிலை அடைவதைப் பற்றி அவர்கள் கவலையுறுவதில்லை. இரண்டிற்குமான நிறையை குறையை அவதானித்து ஒன்றன் மீது ஒன்றை ஏற்றிச் சொல்லி இரு தரப்பையும் வெறுப்பேற்றுவார்கள். வெளியில் இருந்தபடி  நிலையழித்தலை கொடுக்க முடிவது இங்கு ஒரு விளையாட்டைப் போல நிகழ்ந்து விடுகிறது . தாய் இருந்தால் அதன் தாக்கம் அதிகம் உணரப்படுகிறது . நவீன மருத்துவம் பெற்றுக் கொடுக்கும் உபரி ஆயுள் கொண்டு வயதாகும் தாய்க்கு ஒரு கட்டத்தில் யாரும் தேவையற்றவர்கள் ஆகிறார்கள். ஆயுள்

நீட்டிக்கப்பட்டவர்களுக்கான இடம் இன்னும் முழுமையாக உருவாகி வராத சூழலில் அனைத்தும் தன்னை மையம் கொண்டிருக்க வேண்டும் என்கிற விழைவு அவரை எந்த எல்லைக்கும் செலுத்த தயங்குவதில்லை. வாழ்கை முழுவதுமாக இருந்து அல்லது அதனுள் வந்து செல்பவர்கள் பலவித கசப்புகளை உருவாக்கி அந்த கசப்புடன் வாழ்ந்து மண் மறைகிறார்கள்


வாழ்கையை வடிவமைத்துக் கொள்வதற்கு கருவியாக என்னை பாதித்த ஆளுமைகள் ஆற்றுப்படுத்திவை பின்னர் நிகழ்ந்தாலும் துவக்கத்தில் அவர்களின் கருத்தை ஆழ்மன விருப்பாக கொண்டிருக்கிறேன் என அறிதலும்பிடித்ததை மட்டுமே செய்வேன் என்பது மாபெரும் இலட்சியவாதிகள், ஞானத்தேடல் கொண்டவர்கள் இரு சாராருக்கு மட்டுமே இயல்வது. ஆனால் அதற்கான நிபந்தனை துறவுதான். தனக்கு பிடித்தமானதை மட்டுமே செய்யும் வாழ்வுக்காக அவர்கள் துறப்பவை மிக அதிகம். உலகியலின்பங்கள், உலகியல் மரியாதைகள் என அவர்கள் நாம் வாழும் இயல்புலகை விட்டு விலகி தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பார்கள்ஜெ யின் இந்த வரிகள் நான் அவதானித்து உருவாக்கிக் கொண்ட வாழ்கையை குறிக்கிறது. அவர் சொன்னது போல சமரசங்களுக்கு உடன்படாது எடுக்கும் எந் நிலைப்பாடும் முதலில் கொண்டு வருவது குடும்பம் துவங்கிய பின்னர் உலகியல் அவமரியாதையாக உருவெடுக்கிறது


அனுபவங்களை ஒட்டி நான் எடுத்த முடிவுகள் என் வாழ்வின் இறுதி பகுதியை வடிவமைத்து. முதலில் நான் என்னை என் இயல்பில் நிலை நிறுத்திக் கொண்டேன் பின் அங்கிருந்தே அனைத்தும் முடிவானது. அது ஒரு கீதா முகூர்த்தம். 1970 களில் ஒரு நீண்ட பயணம் இளமையில் ஆற்றுப்படுத்துவார் இன்றி ஆழ்மன வழிகாட்டலால் உருவாக்கி கொண்ட பின்னர் 1993 களில் தந்தையிடம் உருவான  நெருக்கமும் அவர் கையளித்தை தொடர்ந்த போது 2008 களில் நான் வந்து சேர்ந்த இடம் அளித்த அதிர்ச்சி கொடுமையானது. அது என்னிடம் சொன்ன தெளிவான செய்திஇதுவரை நான் செய்த அணைத்து  வீண் நீ நினைத்த உலகம் என்றும் இருந்ததில்லை அதன் மாயங்களில் சிக்கி உண்மையை அறியாமலானாய் ஆகவே திரும்பி செல் இனி இந்த பாதை இங்கு முடிவுறுகிறது இங்கிருந்து மேலதிகமாக செல்லுவது போல தோற்றமளிக்கும் பாதைகள் அனைத்தும் முட்டு சந்துகள் வெவ்வேறு சிடுக்குகளை உருவாக்கி கதவில்லாக இடத்தில் கொண்டு விடுபவைஎன்றது.


அதை என்னால் ஏற்க முடியவில்லை அது சொல்லும் அர்த்தம் பிரத்யட்சமானது என்றாலும் உலகம் அதனால் மட்டும் கட்டுண்டு விடவில்லை இதன் வழியாக மேலதிகமாக அது ஒன்றை சொல்ல வருகிறது. இப்போது இங்கு பயணத்தின் திசை மாறினால் அதுநாள் வரை கொண்டு கொடுத்த வாழ்வு கொடுத்த நம்பிக்கை இழப்பு அதிலிருந்து உருவாகும் கசப்பு இனி வாழ நினைக்கும் பாதையை கருக்கிவிடக் கூடியது. அதனால் எதுவும் தொடாத உலகை உருவாக்கிக் கொண்டேன் அது ஒரு வித துறவு 

மனநிலை வானப்பிரஸ்தம் போல .அது நிபந்தனைகளை முன்வைப்பதில்லை. முடிந்தவரை உலகியல் செயல்பாடுகளில் இருந்து விலகி நிற்பது என்றானது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்