https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 அக்டோபர், 2022

அடையாளமாதல் * வெளியே *

 



ஶ்ரீ:



பதிவு : 643  / 833 / தேதி 05 அக்டோபர்  2022



* வெளியே * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 39 .






சண்முகம் பழைமை விரும்பி போல பார்க்கப்படுபவர் எதையும் புதியவை நோக்கி மாறாமல் பார்த்துக் கொள்வதின் ரகசியம் புதியவை எப்பவும் துவக்க கால சிக்களை உடன் கொண்டுவருபவை. அதை சரி செய்யும் காலத்தை அரசியல் ஒருபோதும் கொடுப்பதில்லை. ஒரு முறை செயல்கள் மாற்று தடத்தில் நகர்ந்தால் ஒட்டு மொத்த திசையையே அது மாற்றிவிடும் அபாயமுண்டு. பின் அங்கிருந்து எப்பக்கத்திற்கும் நகர முடியாது என்பது அதன் இடக்கரடக்கல் மற்றபடி நவீனத்திற்கு எதிரானவராக அவரை சொல்லமுடியாது. தேர்தல் வேலைகள் எவரையும் மூழ்கடிக்கக் கூடியவை . முதல் முறையாக நான் மாநில அளவிலான  தேர்ந்தெடுத்து வைத்திருந்த நிர்வாகிகளை ஓரளவு அந்த தேர்தல் வேலைகளுக்கு பயணபடுத்திக் கொள்ள முடிந்தது. தினம் இரவு தலைவர் வீட்டில் அவரை சந்தித்து அன்றைய முக்கிய நிகழ்வுகளை சொல்லுவதும் நாளை நிகழ்வுகளை திட்டமிடலுமாக அந்த நாள் நிறைவடையும். மனதை தீவிர அரசயலில் இருந்து உதறிக் கொள்ள தலைவர் வீட்டின் பின்கட்டில் நிகழும் வேடிக்கை சந்திப்பு பெருமளவு உதவியது. மாறனுடன் தங்கியிருந்த கரூர் பாஸ்கரனின் உதவியாளர்களை அங்கு தினமும் சந்திப்பதும், பின்னர் அது நட்பாகியதுஒட்டு மொத்தமாக கரூர் பாஸ்கரன் அரசியல் நுழைவை வேரொரு கோணத்தில் பார்க்கிறேன். அவர் சண்முகத்தின் தேர்தல் உதவிக்கு வந்தாலும் அவரால் தன்னுள் இருக்கும் அரசியலாளன் அவரை உந்தி வெளித் தள்ளுவதை தடுக்க முடியவில்லை . சில காலம் கழித்து அவர் அதிமுகவில் சேர விழைவதை சண்முகத்திடம் சொல்லி அதற்கு மேலிடத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க சொல்ல சண்முகம் அதை முழுமையாக நிராகரித்து அரசியலின் சிக்கல் அதிமுகவின் எதிர் காலம் போன்றவற்றை சொல்லி அவர் விருப்பத்தை தடுத்து விட்டார்அது அந்த தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஏற்பட்ட மாற்றமாக இருக்க வேண்டும். கரூர் பாஸ்கரனை முன்வைத்து நடந்த அனைத்திற்கும் பின்னால் மாறன் இருந்திருக்க வேண்டும். கரூர் பாஸ்கர் உள்நுழைவிற்கே கூட மாறன் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது சண்முகத்திற்கு உதவ வந்த கரூர் பாஸ்கரனை மாறன் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னர் நடந்த அனைத்து அரசிலுக்கும் தனக்கு உதவியாக மாறனை தலைவர் தேர்தெடுத்தர் . அதை பாஸ்கரனால் அவருக்கு சொல்லப்பட்டிருக்கலாம்


1999 பாராளுமன்றத் தேர்தலில் இழந்த அதிமுக கூட்டணி திரும்பவும் வந்திணைந்த போது தமிழகம் மற்றும் புதுவை முழுக்க ஜெயலலிதா சுற்றுப் பயணத்தை ஒருங்கியவர்  தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை  சண்முகத்திற்காக அவருடன் இணைத்தது மாறன். சண்முகம் அந்த தொடர்பை உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும். அதில் உருவான செங்கோட்டையனின் தொடர்பு மாறனுக்கு இன்றுவரையில் நீடிக்கிறது. அவர் மூலமாக தனது காரியத்தை முடித்துக் கொடுக்கும் வல்லமையை தமிழக அளவில் பெருக்கிக் கொண்டான்.பின்னர் ரங்கசாமி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொடர்பு சிலருக்கு தில்லி வேலைகளை செய்து கொடுப்பதில் உதவியிருக்கலாம். செங்கோட்டையன் அரசியலில் சில காலம் பின்னடைவு ஏற்பட்ட பிறகு மாறனின் செயல்பாடுகள் தேக்கமடைந்தன. ஆனால் தொடர்புறுத்தலில் ஒன்றுல் இருந்து பலமுள்ள பிறிதொன்றுக்கு தாவிச் தாவிச் செல்லுதல் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் இன்று யாருடைய பலத்தில் இயங்குகிறான் எனத் தெரியவில்லை 

 

இந்தப் பதிவில் சண்முகத்தின் வீழ்ச்சியில் மாறன் பங்கு பற்றி அதானிக்கு முயல்கிறேன் என்பாதல் பிற விஷயங்களை தவிற்திருக்கறேன். சண்முகத்திற்கு 1990 களில் துவங்கிய சிக்கல் 2001 ல் முழு சரிவாகி நின்றது . அவரது அரசியல் முடிவுற்றது அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எடுத்து பல பிழை முடிவுகள். அனுபவம் என்பது கூட நவீனமயதாலுக்கு ஒரு பெரிய தடை என நினை்கிறேன். அது மிகப் பெரும்பாலான சமயங்களில் நேர்மறையாக சிந்திக்க வைப்பதில்லை. சண்முகத்தின் வயோதிகம் அவரது இறுதி கால முடிவுகளில் பின்னடைவை உருவாக்கி இருந்தது. கொள்கை முடிவுகள் கூட ஒருவகை நரம்பு சம்பந்தப்பட்டவை போல .வயதாகும் போது அதன் முடுக்கு இழக்கத்துவங்குகிறது. அல்லது அதுவரை இருந்த சில இல்லாமலாகின்றன. யாரை நோக்கியும் அவர்கள் சொல்ல ஒன்றுமில்லை என்நினைக்கும் போது அதுவரை கொண்டிருந்த அனைத்து விழுமியங்களும் அர்த்மற்றப் போகின்றன. தனது செயல்பாடுகள் யாராலும் கவனிக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் அதுவரையிலான சமூகம் நோக்கிய அவர்களின் உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறது போலும்

ஒட்டு மொத்த புதுவை அரசியலில் மாறன் என்கிற மறைமுக ஆளுமையை உருவாக்கியது இந்த சூழலில்,அதற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சண்முகம் உதவினார் என நினைக்கிறேன்


காலம் எப்போதும் பல விசித்திரங்களை கொண்டு வந்து வைத்தே எல்லோரையும் திகைக்க செய்கிறது . மாறன் தனது தனிப்பட்ட இடத்தை உருவாக்க அல்லது காப்பாற்றிக் கொள்ள சண்முகம் அறியாது அல்லது அவரால் தவிற்க இயலாதபடி உருவாக்க ஆரம்பித்தான். அதில் தனக்கு இடறென நினைத்த எல்லாவற்றையும் மாற்றி அமைக்கத் துவங்கினான். அதற்கு பின்னால் அரசியலென எதுவும் இல்லை இது எப்படி சண்முகத்தின் மூக்கிற்கு கீழே நடந்தது என்பதை அவதானித்தால் பல வித அடுக்குகளாக அந்த சூழலை புரிந்து கொள்ளலாம். அவர் அறிந்து அல்லது அறியாது என இரண்டு வகைமைகளில் அவற்றை தொகுத்தாலும் இரண்டும் அவரது நீண்ட கால அரசியல் அனுபவத்திற்கு பெருமை சேர்ப்பவையல்ல. பிறரின் தவறு என அவர் சுட்டிய அனைத்தும் இந்த இரண்டின் கீழும் வருபவை ஒன்று அறியாமை பிறிதொன்று இயலாமை இரண்டுமே அரசியல் தேக்கத்கத்தை சொல்லுபவை


புதுவை அரசியலில் சண்மகத்தின் இடம் பற்றிய புரிதலை அவரது எதிர்காலம் குறித்து என எல்லாவித செய்திகளும்  சண்முகத்தின் குடும்பத்தாருக்கு அனைத்தும் உள் தகவல்களும் மாறனால் பகிரப்பட்டிருக்க வேண்டும். கரூர் பாஸ்கரனின் வியாபார யுக்தி அதை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தது புரிந்து கொள்ளக் கூடியது. 1988 பாராளுமன்றத் தேர்தலில் தனது குடும்பம் ஒட்டுமொத்தமாக பின்னின்றதை அவர் மனதால் ஏற்றிருக்க வேண்டும். தலைவரின் குடும்பத்தினரை மூன்றாக பகுக்கலாம்காரைக்கால் நெடுங்காட்டை மையமாக கொண்ட குடும்பத்தினர்இவர்கள் ஏனக்குறைய காரைக்காலை நிர்வகிக்க முயன்றவர்கள். இரண்டாவது குழுவினர் சண்முகத்தின் உடன் பிறந்தவர்கள் இருவர் அதில் இளையவர் சண்முகத்தின் கண்கானிப்பில் இருந்து உடல்நலம் குன்றி மரணித்தார் அவரது மகன் பாலு பல ஆண்டுகளாக மாறனை போல கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க முயன்று தோற்றவன். சண்முகத்தின் மூத்தவர் இந்திய எண்ணை கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் அவரது மருமகன் கரூர் பாஸ்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக