https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 25 அக்டோபர், 2022

மணிவிழா - 6

 




ஶ்ரீ


மணிவிழா - 6

25.10.2022




காலம் அதிகமில்லை. இதுவரை கொடுத்ததே அதிகம். இனி ஒவ்வொரு நாளும் ஒரு இனிய இணைப்பு  வழக்கமான மனோ வியாபாரத்தில் ஈடுபடுவது தேவையற்றது. இனி வாழ்வில் எதன் பொருட்டும் கசப்பு கொள்வதில்லை என எனக்கு நான் சொல்லிக் கொண்டது. கசப்பை என்னால் நீண்டநாள் கொண்டிருக்க முடியது


எங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக்கொள்ளத் துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன? எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா? இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா? என்னென்ன எண்ணங்கள்! இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப்

பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும்.”


இன்றை வாழ்வியல் தளங்களை நவீன நாகரீகம் எடுத்து கொண்டு சில பத்தாண்டுகள் ஆகின்றன. அது உருவான காலத்தில் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் தங்கள் நிலைப்பாட்டின் விலைவை தங்கள் சந்ததிகளிடம் மெல்ல காண துவங்கி இருக்கிறார்கள். அது உருவாக்கும் பதட்டம் விளைவாக தங்களுக்கு தெரிந்த பாரம்பரிய மீட்பை மொழியில், பண்பாட்டில் ஆன்மீகத்தில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வழியாக அவர்கள் எதிர் கொள்ளும் சவால் மற்றும் ஏளனம் மிக கடினமானவைகள்.


குடிபெயர்ந்த நாடுகளில் நகர்கள் தோரும் கோவில்கள் உற்சவங்கள் என தங்களுக்கு தெரிந்த மரபுகளை மீட்டுருவாக்க முயற்சிக்கிறார்கள். மூத்த குடும்ப மூத்தவர்களை தனிமையில் விட்டு அயல் நாட்டில் வேலைக்கு சென்றோர் தங்கள் பெற்றோர் அறியாத புதிய உலகங்களை உருவாக்கும் வாய்ப்பை அளித்தனர்.அது அதன் யதார்த்தங்களை புரிந்து கொள்ளவது அவசியம் என அவர்கள் அன்று உணராதிருந்திருக்கலாம். வளர்ச்சி அனைவரையும் உள்ளெடுத்துக் கொள்வது என்பது தவறான பரிதலானது. மொழியை கலாச்சாரத்தை பண்பாட்டை பிள்ளைகளுக்கு கையளிக்காமல் போனதால் இன்று எந்த ஊடகத்தில் நின்றும் அவர்களுடன் உரையாட இயலாமலானது. அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்திருப்பதை இது தெளிவுபடுத்துகிறது. நவீன மருத்துவம் அளித்த நீடிக்கப்பட்ட ஆயுளை கொண்டு ஆற்ற வேண்டிய இருக்க வேண்டிய இருப்பு குறித்து சிந்திக்க வேண்டும் 


மருத்துவம் உயர்த்தி அளித்த ஆயுள் வரம்பை பெற்றவர்கள் தங்களுக்கும் தங்களுக்கு பின் வருவோருக்கும் தங்கள் வாழும் காலத்தில் அதற்கான முன்மாதிரியை வாழ்ந்து உழைத்து உருவாக்க வேண்டி இருக்கிறது. மேலை நாடுகளில் முதியோர் தனித்து வாழ்வதற்கு பழகியிருக்கிறார்கள். அந்த வாழ்வியலை இனிமையாக்குவது குறித்த உரையாடல்கள் துவங்கியிருக்கின்றன. பொருளியல் வெற்றி குல மூத்தவர்களின் இடத்தை இல்லாமலாகி இருக்கிறது


மரபு சொல்லும்அறம்என்பதும் இத்துடன் காலாவதியாகி போனதா என்றால் இல்லை. இந்திய ஞான மரபின் அத்தனை வழிகாட்டலும் மதம் வழியாவே நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன மதத்தை மறுத்தால் மொழி, சிந்தனை கலாச்சாரம் பண்பாடு போன்றவை அனைத்தும் இல்லாமலாகும் அவை மதத்தில் தான் அமர்ந்திருக்கின்றன.அது புரிதலுக்கு வருவதற்கு ஒருகீதா முகூர்த்தம்தேவையாகிறது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்