https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 அக்டோபர், 2022

மணிவிழா.1

மணிவிழா.1


எனக்கு  மணிவாழா கொண்டாட்டம் பற்றி எந்த எண்ணமும் இருந்ததில்லை. அதற்கு பல காரணம். முன்மையானது நான் எனது ஆயுள் 58 என வரையறை செய்திருந்தேன்.  60 க்கு நான் இல்லை என்பது உளப்பதிவாக இருந்தது. என் மனைவி மணிவிழா பற்றி பலமுறை சொன்ன போதும் நான் அதை காதில் கொள்ளவில்லை . மகள் விஜி ஒரு வருட காலம் அதை திரும்ப திரும்ப பேசி என்னை சம்மதிக்க வைத்தாலும் நிகழ்வை அவள் போக்கில் விட்டுவிடேன்.

மணிவிழா என்பது பிள்ளகளின் விழா. மேலும் எனது வளர்ப்பு பிள்ளைகள விஜி நிவாஸ் இருவருக்கும் தொல்லை  கொடுக்க வேண்டாம் என எண்ணினேன் .. நான் என் தந்தைக்கு அவரின் மணிவிழாவை மூன்று நாள் கொண்டாடினேன். முறையான ஏற்பாடுகளை சிதம்பரம் AV. ரங்காசாரி ஸ்வாமி ஒருங்கியிருந்தார். ஜீயர் முன்று நாளும் இருந்து அதை நடத்திக் கொடுத்தார். மூன்றாம் நாள் அப்பாவின் விருப்பப்படி இலக்கிய விழாவாக நிகழ்ந்தது. பிரபஞ்சன், இந்திராபார்த்தசாரதி, கிரா,என பல இல்கிய உலக அவரின் நண்பர்கள் கலந்து கொண்டனர்

அப்பா அவரின் அறுபதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. விளையாடாக அவரையும் அம்மாவையும் அப்புசாமி சீதா பாட்டியாக சித்தரித்து வெளியிட்ட வாழ்த்தில் கையில் அப்புசாமி உடலில் அப்பாவின் முகத்தை ஒட்டி அதில் வலை தடியுடன் இருப்பது ஏற்காமல் அதை வெளியிடக்கூடாது என கடிந்து கொண்டார்

எனது ஆறுபது பற்றிய எந்த பதட்டமும் எனக்கில்லை. மனதளவில் அந்த பத்து வந்து சிறுவனை இழக்காமல் இருக்கிறேன். என் முதல் குழந்தை இறந்து பிறந்து மனைவி பிழைப்பது கடினம் என்கிற சூழல் நிருமனமாகி பத்து மாதமாகி இருந்த சூழலில் அதை எப்படி எதிர் கொள்வது  என தெரியாது திகைத்திருந்த நேரம் அப்பா உடல் நிலை சரியில்லாத சூழலில் எனது பூஜை அறைறைக்கு வருவது தவிர எனக்கு வேறு வழி இல்லை பொதுவாக என் பூஜை வேண்டுதலாக நிகழ்வததில்லை மனம் மிக அமைதியாக சலனமில்லாமல் இருக்கும் ஒரு இடம்   அங்கு வேண்டிக்கொண்டேன் மனைவியை  மீட்டு தரும்படி . என் ஆயுளில் இருப்பது வருடம் அவளுக்கு தருவதை சொல்லிக் கொண்டேன் மூக்கு சொம்பில் இருந் தீர்த்தம் கொண்டு அந்த வருடங்களை தானம் தருவதாக சொல்லி நீர் விட்டேன். எனது ஜகத்தில் எனக்கு எழுபத்தி எட்டு என இருந்ததால் மிச்சமுள்ள ஆயுள் 58 ..விழா முடிவானது  தந்தைக்கு நடந்த அதே போல இன்னும் விரிவாக
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்