https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 17 அக்டோபர், 2022

60 விழா துவக்கம் 1

 ஶ்ரீ


நவீன மருத்துவம் செலவேறியது. அவை அனைவரின்  மறைமுக வாரிசு போல அவர்களின் வாழ்நாள் சேமிப்பை சுரண்டிவிடுதுடன் இந்திய மக்களின் சராசரி ஆயுளைக் கூட்டியிருக்கிறதுசமூகம் மற்றும் குடும்பத்தில் அதற்கான இடம் அவர்களுக்கு இன்னும் உருவாகியிருக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் இதுவரை இல்லாத அந்த இடத்தில் இருந்து கொண்டு மொத்தத்தையும் பின்னோக்கி இழுக்க முயற்சித்து மரியாதை இழந்து போகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே தங்கள் இடங்களை மிக அழகாக தெரிவு செய்கிறார்கள். தந்தை எனக்கு கையளித்து சென்ற முக்கியமான கருதுகோள் கூட்டுக் குடும்பமும் அதன் கடமைகளும் .அவரிடம் இருந்து நான் கற்றது அவரின் நிமிர்வு, நெடிய கடமைகளுக்கு மத்தியில் அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட இடம் மிக அழகானது. தன் இறுதி காலம் வரை தனக்குள் இறக்காமலிருந்த சிறுவனையே எனக்கும் விட்டுச் சென்றார்


எனக்கு சொல்லப்படவைகளை நான் என் வாழ்வில் அவற்றை எப்படி தொகுதுக் கொண்டேன் என அவதானிக்க முயல்கிறேன். நான் அவரை ஒருவகையில் மறுத்தே எனக்கான இடத்தை அடைந்தேன். அவர் எனக்கு சொன்னவற்றை அனைத்தையும் அப்படியே கடைபிடித்தவன் அல்ல மறுத்தவனும் அல்ல. அவற்றை என் இயல்பிற்கு  மாற்றி பொருத்தி பார்த்திருக்கிறேன் என்பது என் நல்லூழ்


அவரால் மிக சிறு வயதிலேயே நான் பொறுப்பான குடும்பஸ்தன் என சொல்லப்பட்டேன் . ஒரே பிள்ளையாய் பிறந்தவர்களின் நரகமாக என அன்று அதை புரிந்திருந்தேன். உடன் பிறந்த மூன்று தமக்கை மூன்று தங்கைகள் என் வாழக்கை முறைக்குள் கொண்டுவரப்பட்டார்கள். பெண்கள் புழங்கும் வீட்டில் நண்பர்களை அழைத்து வருவதற்கு தடை இருந்தது . அங்குடீஷார்ட்அணிபவன் பொறுப்பான வியாபாரியாக இருக்கமுடியாது. கூட்டுக் குடும்பத்தில் இருந்த அனைத்தும் என் வாழ்கையில் புகுத்தப்பட்டது. துவக்கத்தில் இவை புறவயமான முகம் தெரியாத யாரோ சிலரை மனதில் நிறுத்தி வடிவமைக்கப்பட்டவை என நினைத்ததுண்டு.ஆனால் அனைத்திற்கும் மறு தட்டில் அவர் கொடுத்தது ஆன்மீகம். துவக்கத்தில் பெரும் எடையாக இருந்தாலும் பின்னாளில் மனம் குமுறும் ஒவ்வொரு கணமும் அதிலிருந்து வெளிவரும் வழியை அதுதான் எனக்கு காட்டிக் கொடுத்தது


தீவிர அரசியலில் இருந்த காலங்களில் நான் அணிந்த வெள்ளை கதர் சட்டை அப்பாவிற்கு மிகவும் உகப்பாக இருந்தது. அரசியலில் இருந்து விலகிய பிறகும் கதர் என்னை விடவில்லை. 2008 ஆம் ஆண்டு வாழ்வின் மிக முக்கிய தருணம். ரிஷிகேசத்தில் ஆழ்மனதில் விழுந்த விதை 2013 களில் முளைவிட்டிருந்தது . 50 வது வயது அனைத்தில் இருந்தும் ஒய்வு பெற முடிவு செய்தேன். அது எளிதானதில்லை உடலில் இருந்து ஒரு பகுதியை வெட்டி எடுப்பது. அது அவ்வளவு எளிதாக இல்லை. அதுநாள் வரைநான்என்கிற அடையாளத்தின் மீது எனது ஆளுமை கட்டமைக்க பட்டிருந்தது . அதை இழப்பது உள்ளத்தை முழுமையாக வெட்டி எடுப்பது. அடையாளத்தை இழப்பது. ஒருவகை நிர்வாண மனநிலை அது அதீத வலி தருவது. அதிலிருந்து வெளிவர அடைப்படை கோட்பாடாக உருவாக்கி கொண்டவைஇறந்தவனுக்கு ஆவதென்ன இந்த உலகில்என்பது . அது ஒரு தரிசனம் போல அனைத்திலும் அதை போட்டு பார்த்து வெளிவருவது அடுத்த இலக்கான மரணத்தை நோக்கி.அது கனவுகள் இல்லாத உலகின் யதார்த்தம். மெல்ல அதில் வாழ்வதற்கு பழகிக் கொண்டேன் என்றாலும் அதன் துவக்கம் என் வாழ்கையில் நான் அறிந்திராத என இயல்பு பற்றியது. ஆனால் நான் அதை தொட்டுணுரும் முன்பே அங்கு என்னுடன் இருந்து கொண்டிருந்தது.எப்போதும் போல என்னை தொகுத்திக்கொள்ள திணறிய போது ஆழ்மனம் வழிகாட்ட அதுவரை சூடி இருந்த அணைத்தில் இருந்தும் வெளியேறினேன்.


பிலவித மனக்காயங்களில் இருந்து விடுபட புறவய உலகின் ஒழுக்கில் இருந்து நழுவி தனித்திருக்க துவங்கியிருந்தேன்.அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருந்தேன். அங்கிருந்து கசப்பையும் காழ்ப்பும் நிறைந்த இருள் உலகிற்கு செல்லும் வழி திறந்திருந்தது. அதன் வாயிலுக்கு வெளியே சுமார் 4வருடம் முழுவதுமாக யாருடனும் பேசாத அமைதியாருடனும் ஒரு சொல் பேசாத முழு தனிமை ஒரே துணை கிருஷ்ணா பிரேமியின் உபன்யாசம் அதில் உள்ள இசை என்னை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது.


காலை முதல் இரவு வரை மீள மீள ராமாயணம் மஹாபாரதம் உபநிஷத், பிரம்மரசூத்தரம் போன்றவை வைஷணவ பாணியில் இல்லாமல் முழுக்க பக்தி இலக்கியம் போல. அந்த இருள் கால கட்டத்தில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தபோது ஆழ்மனதில் நான் நிகழ்ந்திருந்த மிகப்பெரிய மாற்றம் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லைமெல்ல மெல்ல அது வழக்கமான விஷயங்கள் சம்பிரதாயம் ஆசாரம் பூஜை போன்றவை மீது தனது நிராகரிப்பை எனக்கு நான் அதுவரை அறிந்திராத என்னை எனக்கு அறிமுகம் செய்ய துவங்கியது. எனக்குள்  நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றத்தின் வழியாக நான் என்னை தொகுத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன்


அது தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்க நான் அந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் இருந்து புதிதாக பிறந்து வெளி வர துவங்கினேன். அதுவரை தான் அணிந்திருந்த அனைத்து அடையாளங்களில் இருந்து வெளியேறியதற்கு மாற்று மெய்மை போல் ஒன்று தொடர்ந்து முன் வைக்கப்படுவையாக சிதறிக்கிடந்த மனதை்மெல்ல தொகுத்துக் கொள்ள உதவியதுஅந்த காலகட்டதில் ஜெயமோகன் அறிமுகமானது பெரும் நல்லூழ். அவரது எழுத்துக்கள் என்னை ஆற்றுப்படுத்தின










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்