https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 அக்டோபர், 2022

மணிவிழா. 8


ஶ்ரீ:



மணிவிழா - 8

27.10.2022



நிகழ்ந்ததில் இருந்து  என் மனத்தில் தோன்றுவதை வெளிப்பட பேச முடியாமை எப்போதும் என் மன குமைதலில் கொண்டு விடும் அதில் இருந்து மீண்டெழுவது சவாலைப் போல நிலை கொண்டுவிடும்நான் எனக்குள் செய்து கொள்ளும் நிலைப்பாடுகளால் செயல்பாட்டை உருவாக்கிக் கொள்வது வழியாகவே மீண்டிருக்கிறேன்அதை போன்ற ஒன்றை இன்றுள்ள பிறரால் புரிந்து கொள்ள முடியாதது. அவர்கள் எப்போதும்அரசியல் சரி நிலைகளைஒட்டி தங்களை வைத்துக் கொள்கிறார்கள். முன்பு சொன்னவைகளுக்கும் செய்தவைகளுக்கும் எதிர் புறமாக நின்று ஒன்றை செய்யவும் பின் அதை நியாயப்படுத்தவும் அவர்கள் கூச்சப்படுவதில்லை. யார் என்னை கவனிக்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாது முடிந்தவரை என்னை சுற்றி நிகழ்பவை குறித்து எனது சொந்த கருத்துக்களை அதிலிருந்து நிலைப்பாடுகளையும் உருவாக்கிக் கொள்கிறேன்.


நிலைப்பாடுகளையும் செயலையும் இணைத்து வாழ்கையை கண்டவர்களை மிக அறிதாக சந்தித்திருக்கிறேன். என்னை மதிப்பிடும் பிறர் பார்வைக்கு அவை என்னை குறித்த முரண் போல படுவது புரிந்து கொள்ளக் கூடியதுகாரணம் செயல்பாடுகள் திட்டவட்டமாக வெளிப்படுபவை அதில் உள்ள தனது நிலைப்பாட்டை ஒருவர் மீள மீள சொல்ல வேண்டி இருக்கிறது . பிறருக்காக மட்டுமின்றி நமக்குள்ளும் அவற்றை அப்படியே சொல்லி சொல்லி நிறுவிக்கொள்ளவும் வேண்டி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் செயல்பாடுகள் அவர்களின் தனித்த நிலைப்பாடுகளில் இருந்து உருவாவதை பார்த்திருக்கிறேன். இதிலுள்ள நகைமுரண் சண்முகம் அரசியலை மட்டுமாக கொண்டவர். ஜெயமோகன் அரசியல் விமர்சகர் ஆனால் நடைமுறை அரசியலை பேசியதில்லை. இந்த இருவரை குருவாக கொண்டு இரண்டையும் பொருத்தி மையப்படுத்தி எனது நிலைப்பாட்டை செறிவாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். கடந்த கால அனுபவத்தில் இருந்தும் இலக்கிய வாசிப்பில் இருந்தும் கற்பவைகள் கொண்ட கருத்தை ஊடுருவி ஏற்படுத்தும் மாற்றமே இதற்கு அடிப்படை


நிலைப்பாடுகள் அனுபவம் சார்ந்தும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது . மனம் செயல்படும் விந்தையாக அது இருக்கலாம் மாறாதது என ஒன்றில்லை ஆனால் 

நிலைப்பாட்டு உறுதி  என்பது அடியாழத்தில் உள்ள கட்டுமானத்திற்கு மேல் பிற நிலைப்பாடுகள் கட்டமைக்கப் படுகின்றன. அனுபவம் மற்றும் கற்றலில் இருந்து உருவாகும் புரிதல் வழிய அதன் மேல் மேல் என படிந்து படிமங்களாக புதிய புரிதல்களாகின்றன. சில சமயங்களில் எதிர்பாரத அனுபவம் வழியாக ஆழ்மன கட்டமைப்பையும் மாற்ற வல்லது என்றே ஊகிக்கிறேன் . அந்த இயல்பை ஒட்டி மொத்த நிலைப்பாட்டை உருவகப்படுத்திக் கொள்கிறோம் குறைந்த பட்சம் அது ஏற்காத சூழலுக்குள் செல்வதை தவிர்த்தி விடுகிறேன்


அதுவரை நான் எனக்குள் கட்டமைத்துக் கொண்ட நிலைப்பாடுகள் இன்றைய நவீன உலகியல் நியங்களுக்கும் அரசியல் சரிநிலைகளுக்கும் பொருந்தாது என்றாலும் எனது முடிவு அதுவே . இதுவரை எந்த தன்னறம் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததோ அதுவே இனியும் எனக்கானதுக்கு .அனைத்து வித கொண்டாட்டம் பற்றிய மன விலக்கத்தில் இருந்த என்னை மனைவியும் விஜியும் மீள மீள பேசி  மணிவிழாவை ஏற்க வைத்தனர்


அதை எனது தொடக்க கால புள்ளியில் இருந்து இன்று வந்து சேர்த்திருக்கும் இடம் நோக்கிய ஒரு கோடு இழுத்தத்தை போல எனக்குள் நிகழ்ந்த அகப் பயணத்தை மீண்டும் சொல்லிக் கொள்ளவது போன்ற வாய்ப்பை அது தந்தது . அது ஏறக்குறைய தெளிவிற்கு முந்தைய கனவு போல . இப்போதுள்ள நிலையை முழு தெளிவு என சொல்ல மாட்டேன். ஆனால் சரியா திசையில் பயணிப்பதை உணர்ந்திருக்கிறேன். தந்தை கையளித்ததை நழுவ விட இயலாது என்பது ஒரு நிலைப்பாடு. சம்பிரதாயம் மற்றும் குடும்ப அறம் இரண்டிற்கும் அது பொருந்தும். அவர் கொடுத்த ஒற்றை பற்றி பிறிதொன்றை கைவிட இயலாது























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்