https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 22 அக்டோபர், 2022

மணிவிழா -3

 ஶ்ரீ


மணிவிழா -3

22.10.2022




சாஸ்திரம்,சம்பிரதாயம் என சொல்லப்படுபவைகள் பற்றிய புரிதலுள்ளவர்கள் இன்றில்லை என்பதுடன் அவை கடந்த காலத்தவைகள் அவற்றிற்கு இன்றைய நவீன வாழ்வியல் முறையில் எந்த இடமும் இல்லை. வரும் காலத்தில் அது இன்னமும் விலகியே செல்லும். மீதமிருப்பது குல நெறிகள் மட்டுமே . ஒவ்வொரு குலத்திலும் அவை இன்று அதிகம் பேசப்பட்டாலும் அது பற்றி எந்த புரிதலும் யாருக்கும் இல்லாமல் அவர்களுக்கு சொல்லப்பட்டவைகளாக அவை மீளுருவம் பெறுகின்றன. இன்று அவற்றை எந்நிலத்திலும் அவற்றை கடைபிடிக்க முடியாதுபுதிய தலைமுறை தங்களது பொருளியல் வெற்றி மூலம் அவற்றை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முன்னெடுப்பவர்கள் அருகி வரும் காலத்தில் அவை இன்னும் நீர்த்து காணாமலாகி விடும்


இவை நிகழவிருக்கும் எந்த வகையான எதிர்காலத்திற்கானவை. ஐரோப்பிய கலாச்சாரங்களும் இலக்கியமும் கலைகளும் பெரும் செல்வாக்கை

கீழை நாடுகளின் மீது செலுத்தியிருக்கிறது. அவை இந்திய பண்பாட்டில் வட இந்தியாவை முழுக்க மாற்றி அமைத்திருக்கின்றன. அதனுடைய நீட்சியாக மீதமுள்ள பகுதிகளில் அது தனது ஆழ்ந்த செல்வாக்கை செலுத்துகிறது. கண்மூடித்தனமான பின்பற்றல் கால சூழலில் தனிந்து தனக்கான பாதையை அது வகுத்துக் கொள்ளலாம். நான் அவற்றை இப்படி தொகுத்துக் கொள்வேன். இளைய தலைமுறையினரின் பொருளியல் வெற்றி குடும்ப நெறிகளை பின்னுக்கு தள்ள அவற்றில் அடியில் இருந்து உலகியல் நியாயங்கள் கோர்க்கப்பட்டு அதன் அடி வேர் மண்ணிழந்தது . இனி வருங்காலத்திற்கான நெறிகளை அவர்களே உருவாக்க இருக்கிறார்கள். “தவறுதல் பின் சரி செய்தல், பின் திருத்திக் கொள்தல்விதியின் படி அது நிகழலாம்


பின் நவீனத்துவ உலகில் மரபான நெறிகளுக்கும் விழுமியங்களுக்கும் இடமில்லை என்பதுஅறம்போன்ற சிறுகதை தொகுப்பு வெளிவந்த காலத்தில் உரத்து பேசப்பட்டாலும் . இப்போது அது தகர்க்கப் பட்டிருக்கிறது. காதல் காமம் கோபம் போலஅறம்மனித இயல்பில் இல்லை என்றாலும் அவை எக்காலத்துக்குமானவை . சாம்பல் மூடிய கங்கு போல சிறு காற்று அதை திரும்பவும் எழுப்பக் கூடியது.ஊழ்கம் போல அதன் நெறிகள் கூர் மழுங்காது மீள மீள எழுந்து வந்து கொண்டே இருப்பவை. நிலைத்து நின்று விடுகின்றன . இன்று அவற்றிற்கு பெரிய இடமில்லை என்பது போல இருப்பது ஒரு தோற்றம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்வில் தனிப்பட்டு உணரும் ஒரு தருணம் வந்தே தீரும். தங்கள் வாழ்கையில் முன்பே அதை ஏற்று வகுத்துக் கொண்டவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள்





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...