https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 21 அக்டோபர், 2022

60 விழா துவக்கம் 2

 ஶ்ரீ


மணிவிழா -2

21.10.2022


வாழ்வில் நன்மைகள் எப்போதாவது நிகழ்ந்து அதனால் என்ன பலன் என அறுதியாக வரையறை செய்துவிட முடியாதபடி ஆகிவிடுகிறதுஆனால் ஊழ் எதிர்மறையாக ஒன்றை சொல்ல விழையும் போது அந்த செய்தி மிகத்தெளிவானது பாவனை இல்லாதது. மிச்சமில்லாமல் எல்லா பக்கங்களில் இருந்து நெருப்பை போல சூழ்ந்து நின்று தகிப்பது . அதன் உள்புகுந்தே வெளிவர வேண்டி இருக்கும். மரணத்திற்கு இணையானது. ஒரே சமயத்தில் சுற்றியிருந்த அனைத்தும் நெருக்கி மூச்சுவிட முடியாத சிக்கலை உருவாக்கி இருந்தன . குடும்பம் வியாபாரம் என எந்த இடத்தில் இருந்தும் அதை சரி செய்ய முடியாது . அடுத்தடுத்து அது உச்சம் நோக்கி நகர்ந்து கொண்டே இருந்ததுதற்கொலை எண்ணம் இதன் உச்சத்தில் நிகழும் ஒன்றாக இருக்கலாம். நடப்பவைகளை அவற்றின் பாதைகளில் விட்டு அனைத்தில் இருந்தும் மனதளவில் வெளியேறுவது என்பது அதிலிருந்து விலகி நிற்பது என்பது எனக்கான தீர்வாக உத்தேசித்திருந்தேன் . புயலில் அகப்பட்ட செடி போல அது அறையும் திசை எல்லாம் அதனுடன் ஒத்திசைவது தவிற வேறு ஒன்றை முயற்சிக்காது இருப்பது மட்டுமே அதிலிருந்து மிஞ்சி இருக்க முயலும் வழி . அது தனது நடனத்தை முழுமையாக ஆடி முடிக்கும் வரை காத்திருப்பது. கிட்டத்தட்ட செயலின்மையை சிந்தனையின்மையை ஒரு யோகம் போல தன்னுள் நிறுத்திக் கொள்வது


அதுவரை வாழ்ந்த வாழ்வில் இருந்து அற விமர்சன கோட்பாடுகளுக்கு எதிரான மனநிலை உருவாக்கிக் கொள்வதை போல் அசட்டுத்தனம் பிறிதில்லை. சிந்தனைக்கு எதிரான மனநிலையை உருவாக்கிக் கொள்வது தற்கொலைக்கு நிகரானது. அகவயமான காயத்தின் மிச்சங்களுடன் வெளிவந்து ஆகவே வேண்டும். அது நிகழும் போது அதை முழுமையாக அனுமதிப்பது ஒன்று மட்டுமே அதில் இருந்து மீளும் வழி. மனம் மரத்துப் போகும் போது மூளை செயல் இருந்து விடுபடுகிறதுஅன்றாட நிகழ்வுகளுடன் மனம் குமைவதில்லை என்பதால் அவை  மரத்த மனதுடன் மூளை தொடர்புறுத்துவதில்லை. அதன் அனைத்து செயல்பாட்டில் மோதும் போது புதிய தொடக்கம் தருகிறது அதில் விருப்பமானவைகள் என சேமித்து வைத்தவை கழன்று புதியவைகள் வந்தமர்ந்து அவை மீளுருவாக்கம் அடைகின்றன போல. அவை நான் அறியாத எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள்.


அதிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த நாட்களில் எனக்குள் அந்த மாற்றம் மெல்ல எனது ஏற்புடன் நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் எந்த விளக்கத்தையும்  எனக்குள் கேட்டுக் கொள்ளவில்லை உள்ளிருந்து மறுக்க சொன்னவற்றை தயக்கமில்லாமல் மறுத்தேன் ஏற்க சொன்னவைகளை ஏற்றேன். காரணம் அவை எனது மனத்திற்கு அணுக்கமாக இருந்தன. முன்பிருந்த தடுமாற்றம் இப்போது இல்லை. போலி மேல் பூச்சு இல்லை. முக்கியமாக இறை நம்பிக்கை ஒருவகை அச்சத்தில் இருந்து துவங்குவது. இன்று ஆழ்மனம் முன் வைக்கும் அச்சமின்மை அழகிலானது என்பது அதன் மிகப்பெரிய வரம் என நினைக்கிறேன்.  


தனிமையில் இருந்து இசை என்கிற கதவு வழியாக வெளியே வந்தேன் . அந்த நான்கு வருடத்தில் எனக்கு மிக விருப்பமான இசை மற்றும் கணினி விளையாட்டு என அனைத்திலிருந்தும் விலகி இருந்தேன். இசை என்னை புற உலகை நோக்கி இழுத்து வந்தது. இசை ரசணையில் தான் அந்த முரணை முதல்முறையாக  உணர்ந்தேன். பழைய திரையிசை கேட்க முயன்ற போது மனம் அதில் ஒட்டாமல்லாகி அன்னியாமாக ஒலித்து அந்த ஒவ்வாமையை எழச்செய்தது. அதன் பிறகு நவீன இசை மாதிரிகளை தவிற பிறவற்றை கேட்காமலானேன். அது புதிதாக பிறந்து வந்தது போன்ற உணர்வை கொடுத்தது .அது ஒரு வித விடுதலை மனப்பான்மை. ஒவ்வொன்றையும் பற்றிய சிடுக்கில்லாத புரிந்து கொள்ளும் அனுபவமாக இருந்தது. என்னுள் சிதறிக்கிடந்தவற்றைஅத்வைதம்என்கிற ஒற்றை சரடில் கோர்த்துக் கொள்ள ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆற்றுப்படுத்தின. அதிலிருந்து பின்னோனோக்கிய பார்வையில் என் இயல்பில் அந்த ஒழுங்கு இருப்தாக பட்டது. அதில் என் வெற்றிகளும் தோல்விகளும் சம பங்கை கொடுத்திருந்தன. அங்கிருந்து என்னை முழுமையாக தொகுத்துக் கொள்ள ஆரம்பித்தேன் .














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக