https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

மணிவிழா. 11

 





ஶ்ரீ:



மணிவிழா - 11

30.10.2022





வாசகன் தன் பித்துநிலையைக் கொண்டே வாசிக்கிறான். அதைத்தான் அவன் பரவசநிலை என்றோ மெய்மறந்த நிலை என்றோ சொல்கிறான்அவற்றினூடாக அவன் தான் தர்க்கபூர்வமாக அறிந்தவற்றுக்கு அப்பால் ஒரு தளத்தை அடைகிறான். அங்கே அனுபவம் முதலில் நிகழ்கிறது. அதன்பின்னரே அறிதல் நிகழ்கிறது. அதாவது ஆழுளம் அறிந்துவிடுகிறது. அதன்பின் தர்க்கமனம் அதை வகுத்து தொகுத்து புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது”.


-ஜெ-





ஜெயின்  இந்த வரிகளை கண்டடைந்து ஒரு சாவி கிடைத்ததைப் போலானது. இனி திறந்து பார்க்க வேண்டியதுதான் என்பதால் அதை ஒரு நுண் சொல் போல சொல்லிக் கொண்டிருக்கிறேன். தேடலுக்கான சரியான கேள்வியை உருவாக்கிக் கொண்ட பிறகு அதற்கான தர்க்கம் திரண்டு வரவேண்டும். ஆசாரத்தை ஆன்மீகத்தில் ஏற்றி வைப்பதை மிகச்சிறிய வயதில் இருந்தே என் ஆழுளம் ஏற்கவில்லை. ஆனால் அது ஏன் என்கிற புரிதலை அடையும் தர்க்கத்திற்காக காத்திருக்கிறேன் . அவற்றிற்கு விடை போல சில கிடைத்தாலும் பல விஷயங்களில் அதன் முடி அவிழ வேண்டும் என்று தோன்றியதுஇதுவரை கடந்து வந்த வாழ்கையில் நடைபெற்ற அனைத்திலும் முடிவும் அதற்கான தர்க்க நியாமும் சிறு கால இடைவெளிகளில் கிடைக்கப் பெற்றதால் இதற்கும் உரிய காலம் வரும் என்கிற என் காத்திருப்பை நம்புகிறேன். அதற்கான இறையின் அருளையும் நிராகரிப்பையும் ஒன்றென எடுத்துக் கொள்ளும் மனம் வாய்தால் அந்த காத்திருப்பிற்கும் அர்த்தம் வருவதாக நினைகிறேன்


ராமாநுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் மீதுள்ள பிடிப்பு இதுவரை நழுவாதிருப்பதும், நம்மாழ்வார் இன்னும் என்னுள் இளமை குறையாதிருப்பதும் ஏன்? என்று தோன்றாதது என் நல்நூழ். அதை தவிற பிற விஷயங்களை ஆழுள்ளம் நிராகரிக்கிறது . அதற்கான தர்க்கமாககாலம் கடந்தும் நிற்பவைகளே அந்த யுகத்திற்கானது பிற அனைத்தும் உதிர்ந்து கொண்டே இருக்கும்என தொகுத்துக் கொள்கிறேன்.இன்று

பௌராணிக மரபு ஆன்மீகம் தொடக்கமும் முடிவும் இல்லாமல் சிதையுற்றிருக்கும் இன்றைய சூழலில் இனி அடுத்தடுத்த பத்தாண்டுகளில் அது அடைய இருக்கும் வீழ்ச்சியை தீவிர ஆன்மீக செயல்பாட்டாளனாக உணர்ந்திருந்தேன். அன்று பதட்டமும் அதற்கு ஏதாவது மாற்று செய்ய வேண்டும் என்கிற பதைப்பின் தொடக்கம் முன்பு சொன்ன ஆழுள நிராகரிப்பும அடுத்தடுத்து நிகழ்ந்து முடிந்தது . ஆரம்பத்தில் அதை தவிற்க முயற்சித்து உருவாக்க நினைத்த அனைத்து முயற்சிகளும் முட்டு சந்திற்குள் அடைபட்டுவிட அடுத்த கட்ட நகர்விற்கு காத்திருந்த சமயத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை கண்டடைந்தது கீதா முகூர்த்தம்


அடுத்த தலைமுறையினரிடம் ஆன்மீகத்தை கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பௌரானிக மரபை சார்ந்துசநாதன தர்மம்அதன் கருதுகோளாக இருந்தது. அப்போது இந்து ஞான மரபு என்கிற சொல்லாட்சி அறிமுகமாகி இருக்கவில்லை. மாணவர்களுக்கு அதை கொண்டு செல்ல வேண்டும் என்கிற உத்வேகம் விவேகானந்தா பள்ளி தாளளர் செல்வகணபதி சொன்ன போது அதன் தேவையை அறிந்து கொண்டேன். அதற்கான பாடதிட்டத்தை உருவாக்க சிறந்த கல்வியாளர்களை தேடிச் சென்றபோது  கிடைத்த அனுபவம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.சந்தித்த ஆனைவரும் தலை வறண்டவர்கள். கற்பனை சிறுதும் அற்றவர்கள் ஆகவே ரசனையில்லை அது கொடுக்கும் இலக்கிய வாசிப்பு இல்லை என்பதோடு வாழ்வியல் குறித்த விஷங்களில் அரசியல் சரிநிலைகளத் தவிற பிற எவற்றின் மீதும் எந்த புரிதலும் இல்லைசிலர் கம்பனை மேற்கோள் காட்ட மட்டும் அதில் சில வரிகளை கற்றிருந்தார்கள். இவர்களை போன்றவர்கள் தான் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்களா? என்கிற திகைப்பை அடைந்தேன்




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்