https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 நவம்பர், 2022

மணிவிழா 12

 



ஶ்ரீ:


















மணிவிழா - 12


01.11.2022




கடந்த இருபது ஆண்டுகளாக நடுத்தர வர்க்கம் பொருளியல் தன்னிறைவு அடைந்ததில் உருவாகி வந்த மாற்றம் இளம் தலைமுறைகள் தலையெடுப்பிற்கு குடும்ப அறம் அனைத்தையும் கீழ்மேலாக்கியதுடன் சிலவற்றை இல்லாமலாக்கினர்பல சமயங்களில் உரத்த குரலில் மறுத்துப் பேசும் வல்லமையை அதிலிருந்து பெற்றனர். யாரையும் பொருட்படுத்த தேவையற்ற சுதந்திரத்தை அது அவர்களுக்கு கொடுத்திருந்தது. அதனால் எல்லோரையும் குனிந்து பார்க்க துவங்கினார்கள். அவர்களுக்கு அது ஒரு விடுதலை. அதன் முதல் பலி பெற்றோரும் மற்றும் வீட்டு மூத்தவர்கள். அவர்கள் குரலிழந்து மட்டுமின்றி முகமிழந்தும் போனார்கள். அவர்களின் வழிகாட்டால்கள் காலத்திற்கு ஒவ்வாதவைகளாக கருதி முற்றாக நிராகரிக்கப்பட்டது. இதில் வினோதம் அவர்கள் அந்த கால வீட்டின் மூத்த தலைமை்யை நெட்டித் தள்ளி தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இன்றுஅறம்குறித்து அவர்களால் பலவீனமாக சொல்லப்படும் போதெல்லாம் இளிவரல் குரலில் பிள்ளைகள் அதை கடந்துவிடுகிறார்கள் . பெற்றோரின் கடந்த கால சாட்சிகள் அவர்களின் குழந்தைகள். இன்று தங்களது பெற்றோர் கணக்கில் புதிய வரவை வைக்க அவர்கள் சொன்ன அதே காரணங்களை அடுக்கி திகைக்க வைக்கின்றனர்


சடங்கும் சம்பிரதாயங்களும் ஒரு தலைமுறை முழுக்க கேலி செய்யப்பட்டு கைவிட்ட பிறகு மனதை நிலைநிறுத்தும் இந்து ஞான மரபின் அத்தனை தத்துவ கோட்பாடுகளை இழந்து போனார்கள் . நமது மொழி கலாச்சாரம் பண்பாடு போன்றவை மதத்தில் தான் அமர்ந்திருக்கிறது. மதம் நிராகரிக்கப்படுகிற போது அனைத்தும் இல்லாமலாகிறது. பெற்றோர் மற்றும் தனது வளர்ந்த பிள்ளைகளிடம் ஒரு வயதை தாண்டிய பிறகு அன்றாடங்களை கடந்து உரையாட பொதுவான நம்பிக்கை சார்ந்து பேசு பொருள் ஒன்றுமில்லாதாகியது. ஒரு பிள்ளை ஏன் அப்பா சொல்வதை ஏன் கேட்க வேண்டும் என்கிற கேள்வை விளக்க எங்கிருந்து தொடங்குவது என்கிற திகைப்பை அடைகிறார்கள். மெல்ல காட்டு நெறி நோக்கி நகர்வதை தவிற வேறு வழியில்லை


வீட்டு பெரியவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட பௌராணிக மரபை சார்ந்து குடும்பத்தை முன்னெடுத்து அதில் உள்ள ஆன்மீகத்தை தங்கள் வழிபாட்டு முறையாக கொண்டு முதலில் தங்கள் வாழ்வில் அதை நடத்தி காட்டி பிள்ளைகளை பின்பற்ற வைத்தனர். இன்று அந்த தலைமுறை ஏறக்குறைய மிச்சமுள்ளவர்களே அந்த சம்பிரதாயத்தின் கடைசி வாரிசுகள். அவர்கள் அருகிவிட்டனர்இன்று அந்த மரபும் சில பத்தாண்டுகளுக்கு முன்பு துவங்கிய வீழ்ச்சி வேகமெடுத்து அடுத்தடுத்த பத்தாண்டுகளில் மேலும் மேலும் அது தொடர்ந்து அழிவை மட்டுமே அடையவிருக்கிறது


சங்கரர் மற்றும் ராமாநுஜர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அவரது பின்வந்தவர்கள் அதை மரபை நிறுவன படுத்துதலாக மாற்றியபோது அதன் நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மேல் கீழ் அடுக்குகள்  பேணப்பட்டு தேங்கிப் போனது. இன்றைய எதார்தத்தை உணர்ந்து கொள்ள முடியாதபடி நிலைமையை சிக்கலாக்கியவர்கள் அரசு பணி ஓய்வு பெற்று வேறு போக்கிடமில்லாமல் ஆன்மீகம் என உள்புகுந்து அந்த இடத்தை நிரப்ப ஆரம்பித்த போது. அவர்கள் சாஸ்திர அறிமுகமோ நம்மிக்கையோ அற்றவர்கள். எளிய அன்றாட வழிபாடுகூட இல்லாதவர்கள் . உள்நுழைந்த இடத்தில் தங்களின் அதிகாரத்திற்காக தங்கள் வயதை ஜாதியை முன்னிறுத்தி பயன்படுத்தி மேல் கீழ் அடுக்கு முறைகள் கொண்டு வர முயல்கிறார்கள் அவை என்றோ சமூகத்தின் நிராகரிப்பை அடைந்துவிட்டதுடன் பௌராணிக முறை பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்குகிவிட்டது


அது ஆன்மீகத்தின் நவீன வடிவம் குறித்த எந்த சீர் திருத்தமும் கொண்டு வரும் வாய்பில்லாமையும் கொண்டுவர கூடியவர்களாக தென்பட்ட சிலரும் பழமைவாதம் நோக்கி இழுத்துச் சென்று நவீன உலகத்து இளைஞர்கள் அதனுள் வரும் வாய்ப்பை முற்றிலுமாக தகர்த்துவிட்டனர் . அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆன்மீக செயல்பாட்டிற்குள் வந்து நுழைந்த பிறகு வீழ்ச்சி இன்னும் வேகமெடுத்தது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் மட்டுமல்ல ஆன்மீகமும் கூட



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...