https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 4 நவம்பர், 2022

மணிவிழா. 15

 



ஶ்ரீ:



மணிவிழா - 15


04.11.2022




என் தந்தை ஒருமுறை ஏதென்று அறியாத ஒரு மனநிறைவில்நான் இப்போதும் கிளம்பிச் செல்ல தயாராக இருக்கிறேன்என தனது மரணத்தைப் பற்றி சொன்னார். அவர் நம்பிய சித்தாந்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை குறித்து அந்த வயதில் எனக்கு அதன் அர்த்தம் புரிந்ததுடன் அவர் அடைந்திருந்த வாழ்வின் நிறைவையும் உணர முடிந்தது . அந்த மனநிலையை அவர் எனக்கு கையளித்திருக்க வேண்டும் . இன்று நான் அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன். எனது மணி விழாவிற்கு பிறகு பல சமயங்களில் அந்த நிறைவை அடைந்திருக்கிறேன். இனி இங்கு தங்கி ஆற்ற ஒன்றில்லை என்றும் இல்லை சில இருக்கின்றன என கலவையாக உணர்கிறேன் . ஏன் தேவையற்று தங்கி இருக்கிறோம் என்றும் நினைத்ததுண்டு


அப்பா தனது இறுதி கால நோயின் தாக்கத்தில் முழுமையாக இருந்த போது வாழ்வின் மறுமுனை கண்களுக்கு தெரிந்த அந்த சூழலில் அவர் தனது இறுது பற்றி அப்போது என்னவாக உணர்கிறார் என கேட்க விழைந்தும் துணியவில்லை . அந்த சந்தர்ப்ங்களில் சித்தாந்தம் பற்றிய ஆழ் புரிதலை நம்பிக்கயை தக்க வைத்துக் கொள்ள என்னை ஆற்றுப்படுத்தியவர் DA.ஜோசப். அவரது கூறுமுறை என் மனதிற்கு நெருக்கமாக இருந்தது . அவர் மரபின் புற வெளியில் இருந்து அதை சொன்னது காரணமாக இருக்கலாம். எந்த நிர்பந்தமும் இல்லாமல் மரபான விஷயங்களை நவீன மனம் ஏற்கும் படி அவற்றை முன்வைத்தார். அதில் அவரது தனிப்பட்ட உழைப்பும் புரிதலும் இருந்தது. அதனால் அவர் பல சபைகளால் நிராகரிக்கப்பட்டார்சம்பிரதாயத்தில் முதலில் மறுக்கப்படுவது அது.முன்னோர் சொன்னவைகளை சொல்லியபடியே மீளவும் சொல்லப்பட வேண்டும் என்கிற நெறி இருந்தது. ஆரம்பத்தில் அவை வேதத்திற்கு இணையானவை என்பதால் தான்தோன்றிக்கு அங்கு இடமில்லை என சொல்வது எனக்கு ஒரு வகையில் சரியென பட்டது. ஆனால் அவை வேதம் சொல்லவருவதை உணர்த்தும் விளக்கங்கள். கற்பனைக்கு உகந்த மேலதிக பொருளில் அவற்றில் காலத்திற்குரிய மாற்றம் வந்தேயாக வேண்டும். இல்லையென்றால் தேக்கமடைந்துவிடும். காலத்திற்கு ஏற்றவையாக அவை இருக்க முடியாது. என்கிற என்னமும் ஊடுபாவாக இருந்தது







பிரபந்தந்தற்கு விரிவுரை எழுத ராமாநுஜர் மறுத்து சொன்ன காரணம் அது காலத்திற்கேற்ற மாற்றம் கொள்ள வேண்டும் என்றார். இன்றுவரை அதில் எந்த மாற்மும் வரவில்லை . அதில் மாற்றம் செய்ய ஒப்புதல் இல்லை. மாற்றம் வேண்டும் என சொல்லுவது சிலரின் அதிகாரதை நோக்கிய அறைகூவலாக பார்க்கப்படுவது புரிந்து கொள்ளக் கூடியது


நான் இங்கு ஒரு சமநிலை பேணப்பட வேண்டும் என விழைகிறேன். எந்த இயக்கமும் இரண்டு வகையான செயல்பாடுகளால் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.அவை ஒன்றுஸ்டாட்டிக்மாற்றமடையாத நிலை. இரண்டு அதிலிருந்துடைனமிக்காலத்திற்கான மாற்றத்தை உள்வாங்கி பரிணமிக்கும் செயல். முதலில் சொன்னது ஆசார அனுஷ்டானங்களில் கடும் கவனம் கொண்டு அதை நீர்ப்படையாத அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும்வைதீகஅமைப்புகள்ஸ்டாட்டிக்” . அவை விதைகளைப் போல.மாற்றமில்லாது தழைத்து விதை விழுந்து மரமாகி அடுத்து வரும் தலைமுறைக்கெல்லாம் பழங்களை கொடுக்க வேண்டியது . இரண்டுடைனமிக்அதில் இருந்து கிடைக்கும் பலன். பழங்களைப்போல அனைவருக்குமானது. பழத்தில் அடுத்து தலைமுறையை உருவாக்கும்  விதையுண்டு. ஆனால் இந்த நவீன உலகில் எல்லோரும் வீட்டில் மரம் வளர்க்க இயலாது. ஆனால் எங்கோ யாருக்கோ அதை முளைவிக்க விருப்பம் கொண்டவர்களுக்கானது . பௌராணிக மரபின் கூறுமுறை அது அனைவரிடத்தும் முளைக்க வேண்டும் என்பது போல எதிர்பார்பது தான் அதன் சிக்கல் என நினைத்தேன். அதற்கான மாற்று முயற்சியை துவக்க நினைத்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்