https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 நவம்பர், 2022

மணிவிழா. 21

 


ஶ்ரீ:



மணிவிழா - 21


10.11.2022




இது நிகழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு பின்னர் ராமாநுஜர் ஆயாரமாவது ஆண்டு விழா குழுவை துவங்கி இருந்தேன். ஒரு கால கட்டத்தில்ஏந்தூரார்என அழைக்கப்படும் ஏந்தூர் சடகோ ராமாநுஜத்தின் சீடர்களே இன்று புதுவை மற்றும் அதன் சுற்றப்பகுதியை சேர்ந்த வைணவர்கள். ஏந்தூராருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் அந்நாளைய திருக்கோவிலூர் ஜீயரின் அறிவுத்தலின் படி  புதுவை வந்து பலரை வைணவர்களாக மாற்றியவர்விலக்ஷணகவி ராமாநுஜ நாவலர்அவர் அடியொட்டி உருவானவரேஏந்தூரார்

அவரிடம் கற்றவர்கள் அதை வைணவ மதக் கல்வியாக கொள்ள என் தந்தைவைணவ இலக்கியத்தைநோக்கி நகர்ந்தார். நான் எனக்கான பாதையை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன் என நினைக்கிறேன் . எனது கேள்வியும் தேடலும் அவர் எனக்கு கையளித்தது. அந்த தலைமுறையை சேர்ந்த பலர் மண்மறைந்த பின் ஒரு நீண்ட மௌன காலம். அதன் பின் அடுத்த 30 ஆண்டுகளில் எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை


குருவின் அருகமர்ந்து கற்றவர்கள் அருகிப் போயினர். சிலர் ஆரம்ப கால கல்வியின் செருக்கால் உலகியலில் சிக்குண்ட அனைவரையும்காப்பாற்றும்பொருட்டு முனைந்து முடியாமலாகி சிதறி நீர்த்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் ஆயிரமாவது ஆண்டு விழா குழு உருவாகி வந்தது. அதற்கு முன்னர் பல இயக்கங்களை உருவாக்கி முன்னகர இயலாமலானதையும் அதில் ஏற்பட்டட தோல்விக்கான காரணத்தையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தேன். அந்த அனுபவத்தை கொண்டு அந்த தவறுகளை விழா குழுவில் நேராதபடி களைந்தேன்





நான் கட்டி எழுப்ப முயற்சிப்பதை எனக்கு முன்பே துவக்கியவர்கள் என்கிற இடத்திலிருந்து பார்த்தவர்கள் என்னை பிழையாக புரிந்து கொண்டனர் . அவர்கள் துவக்கியது போல ஒன்றை நான் முயற்சிப்பதாக பொருள் கொண்டனர். துவக்க விழா குறித்த ஆலோசனை நடைபெற இருப்பது பற்றி அவர்களிடம் தெரிவித்தபோது

மெல்லிய இளிவரலுடன் எனக்கு சொன்ன ஆலோசனைகளில் அவர்கள் பெற்றஅனுபவமும்அதில் எனக்கானஎச்சரிக்கையும்இருந்தது


எனது தந்தை என்னிடம் பலமுறை சொன்னது. வைணவ கல்விமுறை இளநிலை கல்வி கற்றவர்களுக்கு முதுநிலை சொல்லித் தருவது போல இருக்கிறது. இதில் சாமான்யனுக்கு சொல்ல ஒன்றுமில்லை என வருந்தியிருக்கிறார். அவரது வருத்தம் எனக்கு வேறுவித தேடலை கொடுத்திருந்தது என நினைத்தேன். ஆனால் அவர் எந்த இடத்தில் விட்டுச் சென்றாரோ அங்கிருந்து எனது துவக்கம் நிகழ்ந்திருக்கிறது எனபதை புரிந்து கொள்ள எனக்கு 30 ஆண்டுகள் தேவையாயின


விழா குழுவின் நோக்கம் வேறு வகையானது. அதன் மைய பேசு பொருள் ஆயிரமாண்டு பழைமையான விசிஷ்டாத்வைத சிந்தாத்தற்கு இன்றை நவீன உலகில் என்ன இடம் என்பது குறித்து விவாதிக்க இருப்பதை அவர்களிடம் விளக்கவில்லை. அவர்கள் உலகம்  ஆயிரம் வருடத்திற்கு முன்பான உலகை நோக்கி திரும்பிக் நின்று கொண்டிருந்தது அதற்கு காரணம்


உலிகியலில் சிக்குண்டவர்கள் தாங்களாகவே மீள வேண்டியவர்கள் . பிறிதொருவர் வந்து மீட்க வேண்டுமானால் ராமாநுஜர் திரும்பவும் பிறந்து வர வேண்டி இருக்கும்அவர்கள் துவக்கியது போன்று பிறிதொன்றான ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் தோல்வியை ஆழ்மனத்தில் விரும்பினாலும், அதே சமயம் அதை தங்களுக்கான ஒரு வாய்ப்பாகவும் பார்த்தனர். ஆகவே என்னை அவர்கள் நிராகரிக்கவில்லை . அதன் காரணமாகவும் காலம் மாறிய சூழலிலிலும் என் தந்தையிடம் காட்டிய காழ்ப்பை என் மீது சுமத்தவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்