https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 15 நவம்பர், 2022

அடையாளமாதல் * கனவும் கருணையும் *

 



ஶ்ரீ:



பதிவு : 648  / 838 / தேதி 15 நவம்பர்  2022



* கனவும் கருணையும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 44 .





தன்னறம். தனக்குரிய செயல், எதில் தான் சிறப்புற வெளிப்பட முடியுமோ, எதில் நிறைவுறமுடியுமோ அச்செயல். பிறப்பால் வருவது அல்ல. சூழலால் அளிக்கப்படுவது அல்ல. ஒருவரின் அகம் இயல்பாகச் சென்றமையும் செயல்என்கிறார் ஜெ. என்னைப் பற்றிய புரிதலில் மிக பின்னர் அவற்றை இந்த சொற்களில் கொண்டு வைத்தேன். நம்மை வகைகளாக பிரித்துக் கொள்ள சில கலைச் சொற்கள் தேவையாகின்றன. அச்சொற்கள் நம்மால் தொகுத்துக் கொள்ள இயலாத பலவற்றை  அவற்றில் சட்டென கொண்டு வைத்து விடுகின்றன. தன்னறம் குறித்தகலைச்சொல்பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த காலகட்டத்தில் இருந்த என்னுடைய உள நிலையை அவதானிக்க முயல்கிறேன். எனக்கு உகந்தது எதுவோ அதை செய்வதினால் மட்டுமே  நிறைவடைய முடியும் என எதை கண்டடைந்தேனோ வாழ்நாள் முழுவதும் அதை முன்னிறுத்தி ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் அதை கொண்டு முடிவு செய்தேன் என வகைப்படுத்திக் கொண்டால் அனைத்தும் வேறு பொருள் கொள்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுஎன்னால் முன் சொன்னவைகளுக்கும் செய்தவைகளுக்கும் மாற்றாக அல்லது முரணாக ஒன்றை சொல்லவோ செய்யவோ இயலுவதில்லை என அறிந்திருக்கிறேன். அவற்றை சொல்லில்லா எண்ணமாக அன்று இருந்ததை இன்று தன்னறம் என்கிற சொல்லில் நிறுத்திய பிறகுஆம்தன்னறம் பிறப்பாலோ சூழலாலோ அமைவதில்லை அது ஆழ் அகம் சார்ந்து ஒன்று என உணர்கிறேன். அது வழிகாட்டி வழிகாட்டி மெல்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதை கண்டடைவது நல்லூழ். இன்றுவரை அது எனது வழிகாட்டியாக நிற்கிறது. அதற்கு உகக்காத எதையும் செய்ததில்லை என்பதாலோ என்னவோ நான் கடந்த வந்த அந்த காலத்தை மிக இனிதாக கடந்த பயணமாக பார்க்கிறேன். இவற்றிற்கு முரணாக செய்யும் ஒன்று என்னை உறங்கவிடுவதில்லை. அது கொடுக்கும் அலைக்கழிப்பை எப்போதும் அஞ்சினேன். வாழ்நாள் முழுவதும் என்னை இயக்கிய விசை அது அங்கிருந்து என்னை வசீகரித்தவை முதலில் அரசியல் பின்னர் வெகுகாலம் கழித்து இலக்கிய வாசிப்பு


இந்திய அரசியலில் சுதந்திர கால தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்பில்லாமல் போனாலும் அவர்களின் செயல்பாடுகள் நம்மை கவர்கின்ற ஆழ்மனதை பாதிப்படைய செய்கின்றன. ஆரம்பத்தில் குறிப்பாக எவரையும் அறிந்து கொண்டு அது நிகழவில்லை. அனைத்திற்கும் காந்தி ஒரு குறியீடு போல பொதுப் புரிதலாக நின்றார்.ஆனால் அவரை அனைவரையும் தொந்தரவு செய்பவர் வீட்டுக் கிழவர் போல, ஒதுக்க முடியாதவர் போல அமைந்த அடிப்படை புரிதலாக முதலில் இருந்தது. காங்கிரஸின் தவிற்க முடியாத சொல்லாக அவர் எழுந்து நின்றதை அரசியல் ஆளுமையாக. ஆரம்பத்தில் அப்படித்தான் புரிந்து கொண்டேன். காந்தி பற்றி உருவான அனைத்து புரிதலும்இன்னறைய காந்திவாசிப்பிற்கு பிறகு நிகழ்ந்தது.  


அரசியலில் நுழைந்து என்னை வரையறை செய்து கொள்ள என்னுள் உறையும் நாமறியாத ஒன்று தன் இருப்பை கிளர்ந்தெழச் செய்கின்றன. பின்னர் கற்பனையால் அதற்கு சமானமான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வதின் வழியாக அரசியல் அத்தனை ஈர்ப்புள்ளதாக நிகழ்கிறது. அரசியலில் நுழைய முடிவெடுத்த அந்த கணம் முதல் நான் உருவகப்படுத்திக் கொண்ட இடம் நோக்கிய எனது பயணம் தடைபடவேயில்லை. அவ்வப்போது சில இடைவெளிகள் உருவானாலும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து அது தொடர்ந்தது. என்னளவில் அவற்றையெல்லாம் வென்றெடுத்தேன் என்பதில் சந்தேகமில்லை. கற்பனையாக உருவாகிய அனைத்தையும் மிகுந்த செயலூக்கத்துடன் முயன்று அந்த இடங்களை சென்றடைந்தேன். ஆனால் அது பிறர் விழையும் அரசியலில் இருந்து வேறுபட்டது. அதனால் சுற்றி இருந்தவர்கள் அது புரிந்த போது இணைந்து பயணப்பட்டனர். விலங்காத போது என்னை நிராகரித்தனர். என்னை நிராகரித்தவர்களை கவர நான் ஒரு போதும் முயன்றதில்லை. அதற்கான செயல்முறை அரசியல் சூழ்தல் அது எனக்கு ஒருபோதும் உகப்பாக இருந்ததில்லை


எது என்னை அரசியலை நோக்கி செலுத்தியது விசை என அவதானிக்க முயல்கிறேன். என் பதின் பருவத்தில் நண்பன் ஒருவன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணனைப் பற்றி பேசி பேசி கண்ணன்,இளைஞர்காங்கிரஸ் என அதன் மீது ஒரு அழைப்பை உருவாக்கினான். திரவிட அமைப்புகள் மீது இயல்பில் கொண்டிருந்த ஆழமான கசப்பு என்னை காங்கிரஸை தேரச் செய்தது. நான் கண்ணனிடம் சென்று சேரும் போது அந்த அமைப்பு கண்ணனுடன் முரண்பட்டு பாலன் பின்னே சென்றுவிட்டது . நான் கண்ணன் என்கிற தனி நபரை விட அமைப்பு முக்கியமாகபட்டு நான் பாலனை தேர்வு செய்தேன். இது என் முதல் முரண். ஆனால் அது ஒரு ஆழ்மன வழிகாட்டலில் நிகழ்ந்தது . நான் அரசியலில் ஈடுபட நினைத்தது கண்ணனை கருத்தில் கொண்டு பின் ஏன் பாலனை தெரிவு செய்தேன்? . பாலன் பின்னால் இயக்கம் நின்றிருந்தது என்கிற காரணம். தனிமனிதனை சார்ந்து என்னை உருவாக்கிக் கொண்டதில்லை. அதே சமயம் தலைவர் சண்முகம் மீது எனக்கிருந்தது ஒட்டுதல் என்பது குரு சிஷ்யனுக்கானது. அங்கு கற்றல் மட்டுமே நிகழ்கிறது. அவரின் வழிமுறைகளை பலவற்றை ஏற்றலும் சிவற்றை விலக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை நான் அவரிடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் அரசியல் அன்றாடங்களில் அதன் சரிநிலைகளை அவர் ஆதிப்பதில்லை என்பது எனக்கான வழிகாட்டல். அன்று பலர் அரசியலில் அந்த நெகிழ்வுத் தன்மை விலக்க முடியாதது என சொன்ன போது அதை தனது செயல்பாடுகளால் கடுமையாக மறுத்தார். அரசியலில் தன்னை தலைவனாகவே அனைவரும் முன்வைக்கின்றனர் அது தன்மதிப்பும் தன்னறத்தில் இருந்து உருவாவது. அதில் தன்னை தலைவனாக வளர்த்தெடுக்க சமரசம் செய்து கொள்பவர்கள் பின் தலைவனான பிறகு எதை முன் வைக்கப் போகிறார்கள். அரசியல் என்பது நெகிழ்வுத் தன்மை கொண்டதே அது அதை செயல்படுத்தும் காலம் வரும்வரை காத்திருப்பது. அது கனவும் கருணையை கொண்டிருப்பது. உடனடி தேவை கருதி அது தனது முகமிழப்பதை பற்றிய கவலையில்லாதது என்பதை ஏற்க முடியாது என்பார். அரசியர் முடிவுகள் தனக்கானது மட்டுமின்றி பிறருக்கும் நாம் கொடுக்கும் உறுதிமொழி மற்றும் நம்பிக்கை என்பது அடிப்படைக் காரணம்


தலைவர்களிடம் நான் என்ன உத்தேசிக்கிறேன் அல்லது எதிர்பார்க்கிறேன். ஏன் தொடர்ந்து சீண்டப்படுகிறேன் என கேட்டுக் கொள்வதுண்டு. அரசியலின் உயர் பதவிக்கு வருபவர்களை அதைப் பற்றிய கனவு உள்ளவர்களாக  மனிதர்களோடு மேலும் மேலும் என தங்களைத் தொடர்புறுத்திக் கொள்வதை பற்றியதாக அது இருந்தால் எப்படியிருக்கும் என்கிற விழைவும் அதன் அடிப்படை அளவுகோளாகக் கொண்ட ஒன்றாக நான் அவர்களிடம் எதிர்பார்கிறேன். ஆனால் அது எவ்வகையிலும் நிகழாதிருப்பதை பார்த்துக் குழம்பியதுண்டு. ஒன்று அதற்கானவர்கள் அங்கு வந்து சேர்ந்து சூழ்நிலை சமரசங்களால் தொலைந்து போகிறார்கள் அல்லது கனவே இல்லாமல் சந்தர்பங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த வரண்ட மனநிலை கொண்டவர்கள் அங்கு வந்து அமர்கிறார்கள். மக்களிடம் தொடர்புறுத்தலில் வென்றவர்கள் அங்கு வந்து அமர்வதில்லை. அப்படி அமர்ந்தவர்களை அராஜகவாதிகளாக பார்த்து இன்னும் திகைத்திருக்கிறேன் . எது அவர்களை அல்லது அந்த சந்தர்பங்களை அப்படி மாற்றுகிறது என தெரியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்