https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 நவம்பர், 2022

அடையாளமாதல் * மாறாவிதி *


ஶ்ரீ:



பதிவு : 649  / 839 / தேதி 22 நவம்பர்  2022



* மாறாவிதி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 45 .




அரசியலின் வெற்றி என எதை என் வாழ்வில் வரையறை செய்கிறேன்? நிலையில்லாத மக்கள் ஆதரவை நேரடியாக பெரும் ஒருவரை கொஞ்சமேனும் தங்களை அவர்களுடன் பொருத்திக் கொள்ள முடிபவரை அரசியலில் வென்றவராக பார்க்க முடிகிறது. அது கனவும் கருணையையும் கொண்டதன் அடிபடையாக உருவாவது. அரசியலின் உயர் பதவி விரும்பம் கொண்டவர்கள் கனவை மையமாக வைத்து அதை நோக்கி நகர்பவர்களாக அமைப்பின் பலத்துடன் அதிகாரத்தில் வந்தமரும் போது தன்னுடன் தனது கனவை புரிந்து கொண்டவர்களின் நிரை சூழ அது நிகழ்ந்தால்  கொஞ்சமேனும் அந்த பதவிகளை அலங்கரிக்கிறார்கள். அவர்களின் முதன்மைச் சவால் அடங்க மறுக்கும் அரசு அதிகாரிகள். அவை யூனியன் பிரதேசங்களில் தவிற்க இயலாதது அதன் மேல அமர்ந்து பயணம் செய்ய மக்களாதரவு என்கிற சேனம் தேவையாகிறது. ஆனால் இங்கு ஒருவர் அரசாங்க உயர் பதிவியில் சென்று சேர்வது ஒரு தற்செயல் போல நிகழ வைக்கிறார்கள். அப்படியானால் கண்ணன் அதை வாழ்நாளெல்லாம் முயற்சித்தவர். அவருடன் பயணித்த அரசியலை மையமாக கொண்ட அனைவரும் விலகியது கண்ணன் முதல் முறையா அமைச்சரான ஒரு வருடத்திற்குள். அதன் பின்னர் அவரை சார்ந்து தங்களை வளர்த்துக்கொள்ள விழைந்த சிறு கூட்டத்தால் அவர் சென்றடைந்த இருள் பிறருக்கு அதை போல ஒன்றை முயற்சிக்க தடையாக இருக்கிறதா? 1991 துவங்கி வைத்திலிங்கத்தால் ஐந்தாண்டு நீடித்த ஆட்சியை கொடுக்க முடிந்தும் அது அவருக்கு வெற்றிகரமான அரசியல் பாதையை உருவாக்கிக் கொடுக்கவில்லை. அரசியலின் வெற்றி என அவர் வேறெதையாவது கருதியிருக்கலாம் ஆனால் பதவியில் அமர்ந்திருப்பது மட்டுமே வெற்றி என கணக்கிட்டிருந்தார் என்றால் அது பரிதாபகரமானது. அவர்கள் பலவித நிர்பந்தங்களுக்கு உள்ளாகி பச்சை மையில் கையெழுத்திடும் அரசாங்க அதிகாரிகளை பிரதி செய்பவர்களாக தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள். போதாமையை ஒரு தகுதியாக முன்வைத்து பிறரின் கைகளில் காயாக தங்களை இருத்திக் கொள்பவர்கள் உயர் பதவிகளில் வந்தமரும் போது வேடிக்கையானவர்களாக தோன்றுகிறார்கள்



ஒரு பதவியில் வந்தமர்பவர்கள் அதை தங்களுக்கான மரியாதையாக,பிறருக்கு அருளப்படாத ஒன்று தனக்கென கனிந்திருப்பதாக தனது ஜாதகத்தில் குறிப்பிட பட்டிருப்பது நடந்துவிட்டதாக, மேலும் சாமியாரை நாடி அதை நீடித்திருக்க செய்ய முயற்சிக்கிறார்கள் . அதை ஊழ் என வகுத்துக் கொண்டு அனுபவதித்து பின் விலக மனமில்லாமல் அதில் ஒட்டிக்கொண்டிருக்க எல்லா சமரசங்களுக்கும் தயாராகி கை நீட்டி முரட்டுக் கடிபடும் இடம் ஒன்றையே தங்கள் இறுதிக் காலத்தில் சென்றடைகிறார்கள். கட்சி ரீதியில் அவர் சென்று அடைந்த இடம் என ஒன்றில்லை. அது ஒரு பதவி யார் அங்கு வந்திருந்தாரும் அதைச் செய்திருப்பார்கள் என்கிற எண்ணமே அவர்களுக்கான தனியாளுமை உருவாகத் தடையாக இருப்பது. அதிகாரத்திற்கு வரும் ஒருவர் அதை அடைந்த பிறகு தேங்கி விடுகிறார்கள். தங்களை சுற்றி படியும்போற்றி பாடும்குழுக்களை அவர்களே ஊக்குவிக்கிறார்கள். அனைத்திலும் வென்றாதாக தங்களிடம் சதா சொல்லிக் கொண்டிருக்க அவை அவர்களுக்கு தேவையாகிறது. அந்த குழு பதவி காலம் முடிந்து பறந்து விடுகிறது. பதவியில் இருந்து இறங்கிய ஒருவர் பின்னர் அவர் பங்கு பெறும் அனைத்து நிகழ்விலும் மெல்லிய அவமதிப்பை பெறுகிறார்கள் குமுறுகிறார்கள் அனைவரின் மீதும் கசப்படைகிறார்கள். அங்கிருந்து தங்கள் இருளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவே அவர்கள் தங்கள் பதவிகாலத்தில் இருந்து திரட்டிக் கொண்டது. இவர்களில் இருந்து வேறுபட்டவராக அமைப்பின் மனிதராக தன்னை வகுத்துக் கொண்டவர் சண்முகம். ஆனால் முதல்வராக ஏறியமர்ந்த இரண்டொரு நாட்களில் அவர் சென்று சேர்ந்த அந்த மோசமான இடம் திகைக்க வைத்தது. ஒவ்வொரு முதல்வரும் அந்த அறையை விட்டு வெளியேறும் போது அவர்கள் அதுநாள்வரை அணிந்திருந்ததை சட்டையை கழற்றி மாட்டிவிட்டு சென்றதை புதிதாக யார் வந்தாலும் அதையே மீண்டும் அணிகிறார்கள் போலும்.


நான் யேனாமில் வந்து தங்கியிருந்த போது கரூர் பாஸ்கரனிடம் புதுவையில் சொல்லாமல்  விட்டதை மீளவும் சொல்லும் சூழல் உருவானது. என் தரப்பை இன்னும் தீவிரமாக வைத்து அன்று இனி அதிலிருந்து யாரும் மீண்டு வெளியே வர இயலாது என்றேன். முதலில் சொன்னவற்றிற்கு அவர் முதல்வரின் செயலாளர் நியமனம் குறித்த அரசாங்க அலுவல் கோப்பு சென்றுவிட்ட நிலையில் அதை மாற்றுவது இயலாது என எனக்குத் தெரிந்தாலும் அடுத்தடுத்த பல பொறுப்பிற்கான தனி செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கும் சூழலில் அதற்குள் வில்லங்கத்தை கொண்டுவர முடியும் என நம்பினேன் இனி யார் வந்தாலும் நிகழ்வதை தவிற்க இயலாது. நான் மிக நீண்ட அந்த பேச்சின் இறுதியில்வில்லங்கத்தின்பதவி குறித்து ஒன்றும் சொல்லவில்லை என்பதால் கரூர் பாஸ்கரன் குழம்பிப் போனார். அடுத்து என்ன நிகழும் என கேட்ட போது அது அவரின் கடைசி கால அரசியலாக இருக்கும் என்றேன். என் மீது கடும் கோபம் கொண்டார். அதன் பின்னர் அவரிடம் நான் பேசவில்லை. நான் அன்று அவரிடம் சொன்ன ஒவ்வொன்றும் நடந்து ஒரு வருடம் கழித்து சண்முகம் அவமானகராமாக அரசில் இருந்து வெளியேறினார்


வில்லங்கத்தின் மீது தலைவர், வைத்திலிங்கம், நாராயணசாமி போன்ற கட்சி முக்கிய தலைவர்கள் முதல் சாதாரன் தொண்டன் வரை கொண்டிருந்த அதே கசப்பும் நிராகரிப்பும் எனக்கும் இருந்தது,ஆனால் அதை கடந்து கட்சி ஆட்சி என இரண்டையும் மிகச்சரியாக இணைக்கக்கூடிய இடத்தில் வில்லங்கம் இருப்பதை என்னால் மட்டுமின்றி புதுவை நிர்வாக அரசியல் அறிந்த எவரும் மறுக்க முடியாது. இங்கு ஏற்படும் உடனடி சிக்கல்களை எரிச்சல்களை விட அதன் பிறிதொரு பக்கத்தில் உருவாகும் கட்சி நிர்வாக ஒழுங்கும் அதன் செயல்பாடுகளும் மிக முக்கியம் என நான் கருதினேன். பல தலைவர்கள் முதல் தொண்டர்வரையிலான ஒரு நீண்ட நிரையில் ஒவ்வொரு தனி நபரின் பின்புலம் தேவை சிக்கல் போன்றவை குறித்த தகவல்கள் அவரின் ஆகப் பெரும் பலம். யாருக்கு யாரை பிணை மற்றும் எதிரெடை வைக்கலாம் என்கிற நுண்னிய தகவல்கள் அறிந்ததன் காரணமாக உருவாகும் ஒருவித அங்கத பேச்சும் உடல் மொழியும் கேட்பவரை கேட்ட மாத்திரத்தில் பற்றி எரியச் செய்வது.அவர் அந்த பதவியில் அமரந்தால் பிறகு என்னென்ன பாதிப்புகள் நிகழுமோ அது எனக்கும் நடக்கும். ஆனால் அவரிடம் கருத்தியல ஈதியில் சிக்கல்களை மிக தீவிரமாக முன்வைக்க முடியும். அந்த சூழலில் இந்த அங்கத மனநிலை காணாமலாகி தீர்வு மட்டுமேயான ஒருவர் எழும் கணம் அனைத்து சிக்கல்களையும் சரி செய்ய இயலும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்