https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 12 நவம்பர், 2022

மணிவிழா 23

  


ஶ்ரீ:


மணிவிழா - 23


12.11.2022



*  *



பெருமாள் ராமாநுஜத்திடம் நீண்ட வருடங்களுக்கு பிறகு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்திக்க இருப்பதாக சொன்ன போது பலர் வேண்டாம் என்றனர். சமீபத்தில் அவரிடம் சென்று வந்த விழா குழு நிர்வாகி ஒருவரிடம் மிக கடுமையாக நடந்து கொண்டதாக, பழைய கசப்பில் இருந்து அவர் மீண்டதாக தெரியவில்லை என்றார். என் ஆழுளம் என்னிடம் அப்படி நடந்து கொள்ள காரணம் ஏதுமில்லை. நான் அவர்களுக்குள் அன்றாடம் நிகழும் சர்ச்சைகளுக்கு வெளியில் இருந்தேன். என்னிடமும் காழ்ப்புடன் நடந்து கொண்டால் நான் இழக்க ஒன்றுமில்லை. ஆனால் அவர் இழக்க நிறைய இருக்கிறது என்பதை அவருக்கு சொல்லும் வாய்ப்பை நான் தவறவிட தயாரில்லை


அவரை சந்திக்க சென்ற போது அவர் வீட்டின் பின்புறத்தில் ஏதோ வேலையா இருப்பதாக சொன்ன அவரது மனைவி சென்று அவரிடம் சொல்வதாக கூறிச் அதுவரை அமர்ந்திருக்க ஒரு நாற்காலியை காட்டிச் சென்றார். சில நிமிடங்களில் பெருமாள் ராமாநுஜம் வந்தார். நான் அவரை சந்திக்க வந்தது முதல்முறை அவரது முகத்தில் ஆச்சர்யத்தை பார்க்க முடிந்தது. ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவங்க இருப்பது குறித்து அவரிடம் மிக விரிவாக சொன்னேன். ஆர்வமாய் கேட்டுக் கொண்டார். அவரிடம் எனக்கு புரிந்திருந்தவற்றை என் கூற்றாக வைக்காமல் அவற்றை பொது கேள்வியாக அவர் முன் வைத்ததுடன். “திறந்த அரங்கம்பற்றிய கருதுகோளை அவருக்கு சொன்னேன். அந்த  கேள்விகளுக்கான விடை அங்கே கிடைக்கலாம் என்கிற நம்பிக்கை பற்றி சொன்னேன். அவருக்கும் அது சரி எனப்பட்டிருக்க வேண்டும். நான் சொன்னவற்றிற்கு எதிராக மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தால் அதைப் பற்றி பேசி தெளிவடைய வேண்டிய இடம் அந்ததிறந்த அரங்கம்என புரிந்திருக்க வேண்டும். அவர் என்ன பொறுப்பில் விழா குழுவில் நுழைய இருக்கிறார் என்பது பற்றி நான் முடிவு செய்ய இயலாது என்று கூறியதற்கான காரணத்தை அவர் அறிந்திருக்கலாம். என்னைவிட நான் உருவாக்கிய அமைப்பு பெரியது என அவருக்கு புரியவைத்ததால் அவருக்கு என்மீதும் அமைப்பின் மீதும் மரியாதை வளர்ந்திருக்க வேண்டும்





விழாக் குழுவின் முதல் கட்ட அதிகார அமைப்பிற்குள் வந்தவர்கள் சமூக அந்தஸ்து மற்றும் பல துறைகளைச் சேர்ந்த முதன்மை ஆளுமைகள்.அவர்களால் நான் நினைக்கும் பொது அடையாளத்தை விழா குழுவிற்கு கொடுக்க முடியும் .அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பிற்குள் வைணவ ஆன்மீக செயல்பாட்டாளர்களை கொண்டு வரவில்லை. மற்றவர்களை கொண்டு அமைப்பை முழுமை செய்த பிறகு அதன் உட்பிரிவு குழுக்களுக்கு தலைமை தாங்க வைத்தேன். அனைத்தும் தனித்தனியான  செயல்பாட்டை கொண்ட தலைமை மற்றும் நிர்வாகிகளால் ஆனவை. அவை இரண்டும் இரண்டு வகையான பாதைகளை கொண்டிருந்தது . மரபான வைணவ ஆன்மீக செயல்பாட்டாளர்களுக்கு நான் பெருமாள் ராமாநுஜம் கொண்டு கடிவாளம் இட முயன்று கொண்டிருந்தேன். அது அவர்கள் என்னுடனான தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும்.  


வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் தலைமையில் நிகழ்ந்த முதல் செயற்கூட்டத்தில் அவர்தான் பெருமாள் ராமாநுஜத்தை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சிறப்பு உறுப்பினராக முன் வைத்தார்.பெருமாள் ராமாநுஜத்தின் உள்நுழைவு தங்கள் இடத்தை பாதிக்கும் என சிலர் நினைத்தனர். அது ஒருவித அரசியல். அதன் விளைவை அறிந்தே இதில் நான் தலையிட்டு பெருமாள் ராமாநுஜத்தின் பெயரை முன்மொழியவில்லை. அந்த முடிவை ஆலோசன கூட்டம் எடுக்கட்டும் என காத்திருந்தேன். அதில் அவரை யாரும் முன்மொழியும் வாய்ப்பில்லை. மீறி முன் மொழியப்பட்டால் எதிர்வினையிற்ற பலர் தயராக இருந்தனர்


வேளுக்குடி ஸ்வாமி அவரது பெயரை சொன்னவுடன்ப லமான எதிர்ப்பு எழுந்ததுஅதை நிர்வாக ரீதியில் நிராகரித்தேன். அவர் பெருமாள்ராமாநுஜத்தை முன்வைப்பார் என ஊகித்திருந்தேன் என்பதால் எந்த பதற்றமும் எனக்கு இருக்கவில்லை. வேளுக்குடியும் அந்த எதிர்ப்பை என்னவென்று அறிய விரும்பினார். அவர்களிடம் மைக்கை கொடுக்க சொன்னபோது நான் மென்மையாக மறுத்துவிட்டேன். குழுவின் துணைத் தலைவர் என்கிற முறையில் அவர் முன்வைத்து சொன்ன பிறகு அதில் விவாதிப்பது நல்லதல்ல. சில சமயம் அது கட்டுக்கு அடங்காமல் போகும் வாய்ப்பிருக்கிறது. நான்ஒருவர் முன்மொழியப்பட்ட பிறகு அதை ஆதரித்து பேசுவோர் முதலில் பேசட்டும்என்றேன். ஒரு கூட்டம் எப்போதும் அலையில் அடித்து செல்லப்படுவது . அது நிகழும் போது எதிர் சொல்லெடுக்க மிகுந்த கவனம் தேவைப்படும். ஒருவர் அதற்கு தன்னை தொகுத்துக் கொண்டு எழுந்து வந்தால் பின்னர் அதே அலை வேறுமாதிரி எழும். ஆதரவு மிக பலவீன குரலாக எழுந்தது. பின் ஒருவரை பற்றி ஒருவர் மிக மெல்ல பேசத் துவங்கினர். பலமான எதிர்ப்பு யார் வைக்கக் கூடும் என அறிந்திருந்தேன். அதை அவர் செய்ய அவகாசம் அளிக்வில்லை. ஆதரித்து பேசுவது இன்னும் நிறைவுறாத போது எதிர்த்து பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும் என சொன்னேன். ஆனால் எதிர்ப்பு பலமாக எழ நான் அனுமதிக்கவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்