https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 நவம்பர், 2022

அடையாளமாதல் * பதவியின் தடை *

 



ஶ்ரீ:



பதிவு : 647  / 837 / தேதி 06 நவம்பர்  2022



* பதவியின் தடை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 43 .





1991 ல் முதல்வர் பதவியை தேர்தலில் தோற்று இழந்ததை அவர் மறந்திருக்க முடியாது. ஆனால் அதையே அனைத்திற்குமான அளவுகோலாக வைத்துக் கொள்ள முடியாது. பத்து வருடம் கழித்து 2000 ல் முதல்வராக வந்த போது ஆறு மாதத்திற்குள் ஏதாவதொரு தொகுதியில் வென்று பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவர் தனக்கு பாதுகாப்பான தொகுதியை பற்றி நினைக்கும் போதெல்லாம் தனது எதிரிகளை பற்றிய அச்சத்தின் காரணமாக அவர்களால் தொட முடியாத தொலைதூரயேனாமைமுடிவு செய்தார் . அது தற்கொலை முடிவு. அந்த முடிவு தேர்தலில் வெற்றியை தேடித் தரலாம் ஆனால் அதுநாள்வரை வளர்த்தெடுத்த அத்தனை அடையாளத்தையும் அதற்கு ஈடாக வைத்திருக்க வேண்டுமா என்பது கேள்வி பின்னாளில் தன்னை நோக்கி நிச்சயம் கேட்டு கொண்டிருக்கக் கூடும் . “ அரி அரசியலில் நீ ஒன்னுமே ஆகமல் கூட போகலாம் ஆனால்அன்பாப்புலராகமட்டும் ஆகிவிடாதேஒரு சிக்கலான எனது அரசியல் முடிவை ஒட்டி எனக்கு அவர் சொன்ன அந்த ஒற்றை சொல் எனக்கு வேதம் போல. எனது அரசியலை அதுவே எப்போதும் தீர்மானித்தது . தன் சொல்லில் இருந்து அவர் எங்கு தடம் புரண்டார் என்பது வியப்பாக இருக்கிறது. அதன் பின்னரும் அதற்கு நிகராக பிறிதொரு பிழை 2001 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கட்சி வெற்றிபெற தான் தேர்தலில் நிற்கக் கூடாது என எடுத்த முடிவு. மீண்டும் பாதுகாப்பான தொகுதியை உத்தேசித்திருந்தார் . 2001 பொதுத் தேர்தலில் நிற்பது தன்னை ஒரு தொகுதியில் கட்டிப்போட்டு விடும் என சொல்லி அந்த தேர்தலில் நிற்கவில்லை. அந்த முடிவினால் சண்முகம் மீண்டும் முதல்வராக விரும்பவில்லை போலும் என அனைவரும் நினைக்கத் துவங்கினர். ஆனால் மீண்டும் முதல்வராக பதவியேற்று அனைவரையும் குழப்பினார். மீளவும் அதே ஆறுமாதம். இப்போது அவருக்கு நிற்க யாரும் தொகுதியை விட்டுத் தராமலாகி ஆறுமாதம் கழித்து முதல்வர் பதவியில் இருந்து அவமானகரமாக வெளியேறினார். அது ஒரு குறியீடு .மாபெரும் தலைவர் புதுவை அரசியலாளர்கள் அனைவரும் அஞ்சும் ஆளுமை முதலவராக வந்த ஒரே வருடத்தில் அவர் வாழ்நாளில் கண்டிராத வீழ்ச்சியை அடைந்தார். அவருக்கான முடிவு இப்படி இருந்திருக்க வேண்டாம்

அவர் அடைந்திருந்த உயர் தன்மதிப்பு அன்று ஒரு தீயூழ் போல அவரில் தோன்றியது. யேனாம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது அனைவராலும் அப்படி பார்க்கப்பட்டது . அவர் முற்றாக அனைவரின் மனத்தில் இருந்து இறங்கிப் போனது அந்த ஒற்றை நிகழ்வில். அவர் முதல்வராக தேர்வான போது சட்டமன்ற உறுப்பினரல்ல என்பதால் சட்டம் அவருக்கு ஆறுமாத காலம் தவணை கொடுத்திருந்தது. தான் போட்டியிட பாதுகாப்பான தொகுதியை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்று பல சட்டமன்ற உறுப்பினர் அவர் பொருட்டு ராஜினாமா செய்து அதை அவருக்கு கொடுக்க தயாராக இருந்தனர் . ஆனால்  சுயேட்சையான மல்லாடி கிருஷ்ணாராவின் யேனாம் தொகுதியை தேர்வு செய்திருந்தார். யேனம் ஒரு தவறான தேர்வு


1991 ல் காசுகடைத் தொகுதியில் உள்ளடி வேலைகளால் தோற்ற கசப்பான விஷயங்கள் அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை தவறவிட்டது போன்றவை இம்முறை நிகழலாகாது என நினைத்திருக்கலாம். இப்படி எத்தனை வலுவான காரணங்களை சொன்னாலும் யேனாம் தவறான தேர்வே. யேனாம் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ் பற்றி பிறரைவிட கட்சித் தலைவராக சண்முகமே நன்கு அறிவார் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி ஏறக்குறைய மனப்பிறழ்வு நோய் கொண்டவர் போல யாராலும் கணிக்க இயலாதவர். சண்முகம் காக்கிநாடாவுக்கு ரயிலில் இருந்து இறங்கிய அந்த நொடி அனைத்தையும் தீர்மாணித்தது. யேனாமில் வாக்கு சேகரிக்க தங்கியிருந்த 20 நாள் சண்முகம் தனது தலமைப் பண்பை முற்றாக இழந்தவர் போலானார் எதற்கெடுத்தாலும் பதறினார் அல்லது எரிந்து விழுந்தார்.அவரை சுற்றியிருந்த யார் என்ன சொன்னாலும் அது அவரை தோற்கடிக்க சொல்லுகிற யுக்தி அல்லது சதி என நம்பினார். அவரை வரவேற்க வந்திருந்த காக்கிநாடா வந்திருந்த யேனாம் தொகுதி காங்கிரஸ் தலைவர்களை கண்டுகொள்ளாமல் அவரை அழைக்க வந்த மல்லாடியின் வெள்ளைத் துணியில் காங்கிரஸின் கை சின்னத்தை வரைந்த காரில் ஏறி கிளம்பினார் . அலுவலக ரீதியில் சண்முகம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டாலும் வெள்ளைக் கொடி அவரை சுயேட்சை என்றே அறிவித்தது. அதை பார்த்த அனைவரும் திகைத்து போனார்கள்.


யேனம் புதுவை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சுயேட்சைகளை மட்டுமே உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் வென்றிருக்கிறதுகாமிச்செட்டி அதை நீண்டகாலம் தக்கவைத்திருந்தார். யேனாம் முற்றும் ஆந்திரப் பகுதிகள் சூழ்ந்த சிறிய தொகுதி புதுவை மையத்தில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலவில் உள்ள சிறிய கிராமம் போன்ற அமைப்பு . ஒரு அரசு நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருப்பது. சட்டமன்ற உறுப்பினரும் அரசு நிர்வாக அதிகாரியும் இணைந்து கொண்டால் தனி ராஜ்யமாக அதை நடத்த முடியும். ஆந்திரத்தை ஒப்பிடுகையில் அதன் மத்தியில் யேனாம் ஒரு கனவுலகம். மலிவான விலையில் அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடம். சாராயத்தை மிகக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்கிறது. அதிலிருந்து கிளம்பும் உடனடி விளைவு கள்ளக்கடத்தல் என தொடங்கி சட்டத்திற்கு புறம்பான அனைத்தையும் கொழிக்கச் செய்து சட்டத்தின் ஆட்சியை அழித்திருந்தது. கடத்தல் போன்ற சட்டவிரோத மூலம் பெரும் பொருளியலை திரட்ட முடியும் என்பது ஒரு நோய் போல பீடித்திருப்பதை புதுவையின் புறப் பகுதிகள் கரைக்கால் , மாஹே அனைத்திலும் இந்த பொது அம்சத்தைப் பார்க்கிறேன்.அங்கு எவர் வென்றாலும் குறுநில மன்னர் போல வாழ்ந்தார்கள். காக்கிநாடா ரயிலடியில் துவங்கி மல்லாடி சண்முகத்திற்கு அனைத்து விஷயத்திலும்கேட்”  போட்டுக் கொண்டே இருந்தார். தினம் ஒரு புது மாறுதல். ஏற்பாடு செய்து வைத்திருந்ததுகள்மல்லாடியால்மாற்றமடைகிற போது தலைவரை சந்தித்து முறையிட முயன்றவர்கள். சண்முகத்தின் கோபக் கணலால் காயமுற்று அங்கிருந்து கிளம்பி புதுவை சென்று கொண்டே இருந்தனர்


ஒரு தலைவன் தனது நிர்வாகத்திற்கு கருவிகளான சிலரை உருவாக்கி வைத்திருப்பான். அந்த இடம் அவனைத் தவிற பிறிதொருவனால் சென்றடைய முடியாது. காரணம் ஒவ்வொருவரும் தனக்குந்த கருவிகளை உருவாக்கி தங்களின் பின்பு வைத்தே தங்கள் இடத்தை நோக்கி நகர்கிறார்கள்.அவர்கள் ஒருபோதும் பிறதொருவரை பிரதிபளிப்பதில்லை. எந்த இடத்திற்கு சென்றமர்ந்தாலும் அதை தன் பாணியில் மட்டுமே செயல்படுத்தவார்கள் என்பதால் அவர்கள் எப்போதும் சிக்லானவர்கள். சிக்கலை மிகத் திறமையாக தீர்க்கும் மூளைத்திறன் அமைப்பு கொண்ட மனிதன் எப்போதும் பதவி மற்றும் அதிகாரத்தில் இருக்கும் எல்லோரையும் தனக்கு கீழே என மதிப்பில் வைத்து செயல் கொள்பவன். ஆகவே அவன் ஒரு கொலைக் கருவி போல அவன் எல்லோராலும் அஞ்சவும் வெறுக்கப்படுகிறான். அதை கையில் எடுக்க அஞ்சும் யாரும் களத்தில் நிற்பதில்லை. அவனுக்கான உறையில் அவனை வைக்கத் தெரிந்தவனுக்கானது உச்ச அரசியல் பதவி. இன்று பதவிக்கு வந்த பிறகு அவனை அஞ்சும் யாரும் நீண்டநாட்கள் அந்த பதவியில் இருக்க முடியாது. அவர்கள் ஒரு போதும் தனக்கான எதிர்காலத்தை திட்டமிட்டதில்லை. தி்டமிடவும் முடியாது அவர்களை அழுத்தும் எடை ஒவ்வொரு நாளையும் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வெற்றி வரை மல்லாடியை சகித்துக் கொள்வது. பின்னர் விலகிச் சென்றவர்களுக்கு புரிய வைப்பது என நினைத்தார். ஆனால் அது நடைபெறவேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...