https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 23 நவம்பர், 2022

மணிவிழா - 34

 


ஶ்ரீ:


மணிவிழா - 34


23.11.2022



* தெளிவென அறிவது *







புதுவை வைணவ மாநாட்டு அமைப்பின் ஆரம்ப கால நிர்வாகிகளில் ஒருவராக என் தந்தை பொறுப்பேற்ற காலத்தில்காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமிதலைமையில் புதுவை ராமாநுஜ நாவலர் மன்றம் துவக்கப்பட்டட போது. யானை வந்து வரவேற்பில் நிற்க ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் நிகழ்வு என கேள்விப்பட்டிருக்கிறேன். அது நடந்து 40 வருடமாகிறது. இப்போதும் காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் வருடம் ஒரு முறை நடைபெறகிறது ஐம்பதிற்கும் குறைவானவர்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு சிறுத்து ஒரு சடங்கு போல நிகழ்ந்து முடியும். பின்னர் அதுவும் தேய்ந்து அரை நாள் நிகழ்வாகிப் போனது. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு துவக்க விழாவில் ஆயிரக்கணக்காவர்கள் கலந்து கொண்டது கொடுத்த நம்பிக்கையின் காரணமாக வைணவமாநாடு பின்னர் ஜெயராம் கல்யாண மண்டபத்தில் நடத்த ஆரம்பித்த பிறகு கூடுகை எண்ணிக்கை எழுநூறைத் தாண்டியது


புதுவையில் அதுவரை மரபு சார்ந்து நிகழ்ந்த வைணவ மாநாடுகள் பல வருடங்களாக தனிப்பட்ட நிதி உதவிகளை சார்ந்து நடத்தப்பட்டது .வைணவ மாநாடு போன்றவைகளின் நிதி உதவி மிக குறுகிய வட்டத்தில் இருந்து பெறப்படுவதால் உருவாகும் போதாமையை களைய வேண்டும் என முதலில் திட்டமிட்டிருந்தேன். அது சம்பந்தமான அனைத்து முன் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நீண்ட நாட்கள் எடுத்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்திய பின்னர் விழா துவங்கு ஒரு வாரமே இருக்கும் சூழலில் மரபான வைணவ அறிஞர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன்


சம்பிரதாயத்தின் நவீன நோக்கு பற்றிய கருத்தியலுக்காக அந்த இயக்கத்தை பயன்படுத்த நினைத்தது அதன் தற்போதைய போக்கை என் ஆழ்மனம் நிராகரிப்பதை உணர முடிந்தது காரணமாக இருக்கலாம் . ஆனால் அவை வெறும் உணர்வு மட்டும் தானா அல்லது பொருட்படுத்தக்க பின்புலங்களை கொண்டதா என அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன். விழா குழுவில் புரட்சி செய்வதல்ல எனது நோக்கம் புரட்சியில் எனக்கு நம்பிக்கையில்லை. அவை குறிப்பிட்ட கால, பொருளை,நிராகரிப்பை சார்ந்தது பற்றி எரிந்து பிறரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஈர்ப்பது . ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது என புரிந்திருந்தேன். எனது எண்ணம் குறித்த உரையாடல் நிகழ வேண்டும் என நின்னத்தேன். விழாக் குழுவின் நோக்கமும் அதன் மைய பேசு பொருளும் மரபான தத்துவம் குறித்து ஆழமான வெளிப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். வைணவ அறிஞர்களை புறகணிப்பது எனது நோக்கமல்ல. குழு நிர்வாகத்திற்கு அடிப்படைகளை செய்து முடித்த பின்னர் முக்கிய வைணவ அறிஞர்களை உள்ளே கொண்டுவரும் இடம் வந்து சேர்ந்ததும் அவர்களில் முதன்மையான பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க முடிவு செய்திருந்தேன். அனைவருடனும் முரண்பட்டாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக சலிக்காத செயல்பாட்டாளராக அவர் இருந்ததிருக்கிறார். அதற்குறிய இடம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்


பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க செல்லும் முன்பு என்னை மிக கவனமாக தொகுத்துக் கொள்ள முயன்றேன். அவர் என்னென்ன முன்வைப்பார் என தெரியும். கடந்த பல ஆண்டுகளாக அதை தொடர்ந்து வலியுறித்தி வந்தவர் . இப்போது வயாதிகம், கறார் போக்கு காரணமாக பிறரால் கைவிடப்பட்ட அனுபவம் போன்றவை அவரை சிறிதளவாவது மாற்றி இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் அவருள் நிகழ வேண்டிய மாற்றம் எங்கு என்பதை பற்றியே எனது எண்ணம் இருந்தது. உருவாக இருக்கும் விழா குழு ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டமாக நிகழும் போது அதன் இரண்டு கூறு பற்றி அவருக்கு தெளிவு படுத்த வேண்டும்ஒன்று பொது தளத்திலும் பிறிதொன்று சம்பரதாய நெறியிலும் நிகழும் மாற்றம் . இரண்டையும் இணைத்து நிர்வகிக்கும்காரிய கமிட்டியில் திட்டங்கள் அந்தந்த தலைவர்களால் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறபடும். பின்னர் அதற்கு தேவையான நிதிகாரிய கமிட்டியால்அளிக்கப்படும். தனிப்பட்டு நிதி திரட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அமைப்பு எளிதில் பலவீனமடைவது ஊழல் குற்றச்சாட்டுகளால். முதலில் தவிர்க்கப்பட வேண்டியது. அதே சமயம் எதையும் அவருடன் தேவையற்று தர்க்கிக் விரும்பாமல் மிக மென்மையாக என் தரப்பை வைக்க விரும்பினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...