https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 21 நவம்பர், 2022

மணிவிழா 32

 




ஶ்ரீ:


மணிவிழா - 32


21.11.2022



* இன்றையபொருள்படா சர்சை *






வைணவ சிந்தாந்த மரபின் அடிப்படை மோட்ச்திற்கு ஊடகமாக கை கொண்டிருக்கும் அனைத்தையும் முற்றாக விட்டசரணாகதியை வலியுறுத்துவது. ஒரு வேகத்தில் அதன் உள்ளே நுழைந்தவர்களின் ஆழ்மனம் அதை நம்ப மறுத்து ஓயாத கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அதை நம்ப வைக்க சிறந்த வழிசரணாகதிபற்றியும் அதில் தனது அன்றாட செயல்பாடுகளை சிறந்ததாக சொல்லி பரப்புவது. தன் நிலைப்பாட்டை பற்றி ஓயாது பேசி பிறரை கவரவும் நம்ப வைக்கவும் முயல்கிறார்கள்  . பிறர் அதை ஏற்கும் போது கிடைக்கும் நம்பிக்கையில் நிகழும் தாவலில் மனம் மேலும் ஆழாமாக சென்று அதை பற்றிக் கொள்கிறது. மனம் ஒன்றில் நிலைத்து நிற்காதது எனவே அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்க சொல்கிறது. அதை கடைபிடிப்பதில் அழகியலோ, வாழ்கையின் நுட்பங்களோ கால வெளியில் அது அடையும் வளர்சிதை மாற்றம் பற்றிய புரிதல்களோ தத்துவ சிந்தனைகள் போன்றவைகளுக்கான அளவுகோள்களோ இருப்பதில்லை . அது எப்போதும் தான்சரிபிறதவறுஎன்கிற இடத்தை அடைகிறது . பின்னாளில் வாழ்வியல் எதார்த்தங்களை சந்திக்கும் போது அவர்களின் தீவிரம் எங்கு மறைகிறது அல்லது அதிலிருந்து வெளிவர மறுக்கும் மனத்தடைகளை அறிந்து திகைத்திருக்கிறேன்.


என் தந்தையிடமும் அதே தீவிரம் பார்த்திருக்கிறேன்.  

ஆனால் பிறர் மீது அதை போட்டுப் பார்ப்பதில் அவருக்கிருந்து நெகிழ்வு தன்மைக்கு காரணம் அவர் வைணவ தத்துவ வாசிப்பின் வழியாக சென்று சேர்ந்தது இடம் அழகியலாக இருக்க வேண்டும் . தத்துவம் அழகியலில் வைத்து புரிந்து கொள்ளும் போது மட்டுமே அது உள்ளுணர்வு சார்ந்ததாக நிலை கொள்கிறது. மேலதிக புறவயத் தரவுகள் அதற்கு தேவை படுவதில்லை. உள்ளுணர்வே அதை செய்துவிடுகிறது. அங்கிருந்து மட்டுமே நவீன பார்வையை ஒருவர் அடையமுடியும் என நினைக்கிறேன்


அது தவிர்க்கப் படுகிற போது பிறரிடம் குறை காணுதல் ஒரு நோய்யைப் போல பிடித்துக் கொண்டு விலக மறுக்கிறது, பிறரை புறக்கணிக்க சொல்லுகிறது . தொற்றுப் போல பரவிக் கொண்டே இருக்கிறது . அதற்குள் சிக்கியவருக்கு அது காட்டும் ஜாலம் அபாரமானது முதலில் அருகில் இருப்பவருடன் முரண்பட வைக்கிறது அங்கிருந்து தனிமை, அதிலிருந்து காழ்ப்பு, பின் வாழ்நாளெல்லாம் கசப்புபை மட்டுமே உமிழச் செய்கிறது. காரணம் அதன் பாட திட்டங்களான நூல்கள். அவை சில நூற்றாண்டுகள் பழமையானவை . பத்தாம் நூற்றாண்டின்பரம் பொருள்சர்ச்சைகள் தீவிரமாக இருந்த சூழலிலும் சைவ வைணவம் துவங்கிய விவாதத்தின் நீட்சியாக இன்று வரை பல காலம் தொட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு உருவாகி நின்றது. அதை கற்ற அனைவரும் அதன் வீர வைணவ மரபை ஒருவகையில் பிற சம்பிரதாய நிந்தனை வழியாக அதை வளர்த்தெடுக்க முயற்சிக்கிறார்கள். அது அவர்களை வாழ்வியல் முரணுக்குள் கொண்டு சேர்க்கிறது போலும். நவீன உலகியலுக்கு வெளியே தங்களை வைத்துக கொள்ள முயல்கிறார்கள்.சரணாகதி ஒரு விடுதலை.  “விடுதலை என்பது ஒரு எண்ணம். அது நதி நீரை விரலால் தொடுவது போல் அதனுடனான நம் உறவு அது மட்டுமே. பற்றை விடுதல் பற்றி சொல்லும் போதெல்லாம் நிராகரிப்பை மனம் பற்றிக் கொள்கிறதுவிடுதல் என்பது அங்கே நிகழ்வதில்லை என்கிறார் கவிஞர் தேவதேவன்


பக்தியின் அடிப்படை அதன் மையத் தெய்வம் மீது காட்டப்படுகிற முழு உளக் குவிப்பு அதை பிற தெய்வ நிராகரிக்க சொல்வதை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை நிந்தனையாக வளர்த்தெடுக்கப் படுவது அனைத்து முரணுக்கும் வழி அமைக்கிறது . பின் பக்தியே ஒரு வகை ஆச்சாரத்தால் நிலை கொள்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது


இன்றும் அதன் பேசு பொருள்கள் புராணங்களை மையப்படுத்திய சர்சைகள். இந்திய முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் இரண்டு வகையான வரலாறுகள் சொல்லப்படுகின்றன . ஒன்று கல் வெட்டு ஆராய்ச்சி மூலம் சொல்லப்படுகிற புறவய ஆதாரங்களை வைத்து தொகுத்துக் கொண்டது. பிறதொன்று புராணத்தை மையமாக கொண்டது. இந்து மரபில் பல புராணங்கள் சொல்லப்பட்டதில் பதினெட்டு பிரதானமாக எடுக்கப்படுகிறது. அதில் திசை தேவர்கள் பெரிதும் பேசப் படுகிறார்கள். அங்கும் இதே மையத் தெய்வமாக வரும் திசை தேவர்கள் முன்பாக முதன்மை தெய்வங்கள் கூட பின்னுக்கு தள்ளப்படுவது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதை ஆதாரமாக வைத்து எந்த சர்ச்சைகளிலும் இறுதியாக எதைவும் நிறுவ இயலாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்