https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 5 நவம்பர், 2022

மணிவிழா. 16

 



ஶ்ரீ:



மணிவிழா - 16


05.11.2022





ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு துவக்குவது குறித்து என்னிடம் வந்து கேட்டபோது அதை உருவாக்கி நடத்தி செல்வதில் உள்ள சிடுக்குகளை அறிந்திருந்தேன். அவர்கள் என்னை தேர்ந்தெடுக்க அதுவும் ஒரு காரணம். நீண்ட யோசனைக்கு பின் அதை வடிவமைக்க எனது நிபந்தனைகாளாக சிலவற்றை முன்வைத்து அதற்கான இசைவு பெற்றே அனைத்தையும் துவங்கினேன் . நான் என்ன சொல்ல வருகிறேன் என அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. அந்த நிலையில்முதல் ஆலோசனை கூட்டமும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு எனது வீட்டில் நிகழ்ந்தது . நிறைவாக என்னை நோக்க உரை ஆற்றச் சொன்னார்கள். யாருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என புரியவில்லைஇறுதியில் நான் சொன்னேன்ஆயாரமாவது ஆண்டு விழாவிற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் இருக்கின்றன. அதன் நிறைவு விழாவில் நான் இல்லாமலும் போகலாம் அனைத்தையும் கருத்தில் வைத்தே இந்த பொறுப்பை ஏற்கிறேன்என்றேன். அந்த செய்தி மீள மீள என்னிடம்ஏன் அப்படி பேசினேன் என கேட்கப்பட்டது. “அனுபவத்தில் அடைந்த இடம் அத்தகையதுஎன்றேன்.


2017ல் 1 லக்ஷம் பேர் பங்கேற்க மிக பிரமாண்டமாக திட்டமிடப்பட்ட நிகழ்வு எளிய ராமாநுஜ மடத்தில் சில நூறு பேர்களுடன் நிறைவுற்றது. தமிழக மெங்கும் அதை கொண்டு செல்ல நான் எடுத்த முயற்சிகள் நிறைவேறவில்லை . தமிழக கோவில்களில் கூட பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் நிகழவில்லை. அதை எதிர்பாரத்தேன் என்பதால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை





ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை நினைத்த இடத்திற்கு கொண்டு செல்ல இயலவில்லை என்றாலும் என்வரையில் அது மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது என்பதை உறுதியாக சொல்வேன். அந்த சூழலில்தான் ஜெயமோகனை கோவையில் சந்தித்தேன். எனது முயற்சியின் தீவிரம் தெரிந்ததால் அவரை போன்ற ஒரு ஆளுமையிடம் அருகமர்ந்து எனது திட்டங்களை சொல்லவும் அதற்கு அவரது உதவியை கேட்கும் துணிவை கொடுத்தது. ஆச்சர்யம் மிக சரியாக நான் சொல்ல வருவதை புரிந்து கொண்டு எல்லா உதவியையும் செய்வதாக சொல்லி திகைக்க வைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் இரண்டு 

விஷயங்களை சொன்னார். ஒன்று ராமாநுஜரின் அழகியல் ஏன் மரபில் கடைபிடிக்கப்படவில்லை என்றும் எனது திட்டம் குறித்துஇப்போது நீங்கள் நின்று கொண்டிருப்பது முதல் படி. நான் அதன் முடிந்த படியில் இருக்கிறேன்என்றார் . இரண்டிற்கும் அன்று எனக்கு பொருள் விளங்கவில்லை. இன்று அதன் பொருளையும் அதன் அர்த்தத்தையும் மிக அருகில் என உணர்கிறேன்


துவக்கத்தில் என் ஆழுளம் நினைப்பதற்கு செயல்வடிவம் கொடுக்க திணறினாலும் களத்தில் அவற்றை துவங்கி ஒன்றை பற்றி பிறிதொன்றை அடைந்து முன்னகரும் போது அதற்கான செயல் வடிவம் பற்றிய புரிதிலை கொடுக்கும் என உறுதியாக நம்பினேன். அதுவே எனது எனது வழிமுறை. என் முயற்சிகளை எப்போதும் மிகச் சிறியதாக தொடங்கி செய்து பார்த்து பின் குறை கண்டு கலைந்து பின் மாற்றி அமைப்பது என்பதாக இருந்தது நான் தலைமை பொறுப்பில் இருந்த அத்தனை துறைகளிலும் இதை முயன்று பெற்ற வெற்றிகள் கொடுத்த ஊக்கத்தினால் அதையையே இங்கும் முயற்சித்து பார்க்க முடிவு செய்தேன்


பல வகை களங்களை உருவாக்கினேன்.பொது மக்கள் கூடும் நிகழ்வுகளில் வேளுக்குடி கிருஷ்ணன் தொடர்ந்து பத்து வருடம் உரையாடினார். அது தான் துவக்கம். விழா குழு துவங்கி ஒரு வருடத்தில் உறுப்பினர் எண்ணிக்கை ஏழாயித்தை தாண்டியது. பல உட்பிறவுகளின் வழியாக நிர்வாகிகள் நூறு பேருக்கு மேல் இணைந்தனர்மரபான கல்விக்கு காலஷேப முறை, கோவல்களில் திவ்விய பிரபந்த முற்றோதல் குழு. வீடுகளில் நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார், மற்றும் ராமாநுஜர் பிறந்த நாள் விழாக்கள் அந்தந்த நட்சத்திரத்தில் வருடம் முழுவதும் கொண்டா தனிக் குழு. மாதந்தோரும் ராமாநுஜரின் தேர் ஊர்வலம். அதில் உபண்யாசம்,சிறுவர்களுக்கான யுவவிகாஸ் இயக்கம். மாணவர்களுக்கான கலந்துறையாடல் இப்படி பல்கிப்பெருகிய அமைப்புகள். நிறைவாகதிரந்த அரங்கம்குறித்த ஆரம்பகட்ட வேலைகளை துவங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக