https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 8 நவம்பர், 2022

மணிவிழா 19

 


ஶ்ரீ:



மணிவிழா - 19


08.11.2022



முதலியார்பேட்டை பெருமாள் ராமாநுஜத்திடம் எனது திறந்த அரங்கம் மிக குறித்து விரிவாக விவாதிக்க விரும்புவதையும் அதை செயல்படுத்தும் முதல் கட்ட முயற்சி நடப்பதாக சொன்னேன் . தன்னால் அந்த நவீன பார்வையை வைக்க முடியும் என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி அளித்தார். எப்போதும் ஆச்சார அனுஷ்டானம் குறித்து தீவிரமாக தன் கருத்துக்களை வலியுறித்தி பேசுபவதால் அவரை பிறர் அணுகவே அஞ்சினர். அவரை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவில் கொண்டு வர விரும்பி அவரது பெயரை சொல்லியதுமே சிலர் அதிருப்தியுற்றனர். பெருமாள் ராமாநுஜத்தை விழா குழுவில் இணைக்க எதிர்ப்பு கிளம்பியது. அதில் அவர்கள் விழையும் அதிகார அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என அவர்கள் அறிவார்கள்


நான் அவர்களிடம் ஒருவர் தன்னை அடையாளப்படுத்தும்  நிலைப்பாட்டைத் தவிற பிற அனைத்துப் காலத்தால் கல்வியால் அனுபவத்தால் மாற்றமடைந்து கொண்டே இருப்பது. நிலையாக நிற்காத சிலவற்றை அவர்கள் உதறியேயாக வேண்டும். அவர்களை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றேன் . கருத்தால் செயல்பாடுகளால் பல ஆண்டு காலம் தீவிர நிலைப்பாட்டில் இருந்தவர்களுக்கு அதுவே சில சமரசங்களுக்குள் வர வேண்டிய புரிதலை கொடுத்திருக்கும். ஒரு இயக்கத்தை உருவாக்கும் போது அதன் அத்தனை தரப்பு ஆளுமைகளையும் உட்கொண்டு வருவது அதன் நம்பகத்தன்மைக்கும் செயல்பாட்டிற்கும் நல்லது. முரண் கருத்துக்கள் இருந்தாலும் அதை எதிர் கொள்வது ஆரோக்கியமான அமைப்பிற்கு நல்லது. இல்லையென்றால் அது குறுங்குழுவாக சிறுத்துவிடும்





பெருமாள் ராமாநுஜம் தீவிர தென்கலை பற்றாளர். விசிஷ்டாத்வைதம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியாவர். வைஷ்ணவ சம்பிரதாயத்தை பேணுபவர்கள் அனைவரிடமும் ஒன்றை கவனித்திருக்கிறேன். அவர்கள் கற்கும் மதம் சார்ந்த தத்துவக் கல்வியால் ஆரம்ப நிலைகளில் சரளமாக பழகுபவர்கள் ஆகவும் , கல்வி ஆழமாகும் போது மிக எளிமையான விஷயங்களில் கூட முரண்படுவதும் முரட்டுத் தனமாக பிறரை கண்டிப்பதும் மாற்றாக தான் சொல்லியது தான் சரியானது என நிருவ முயற்சிப்பதையும் பார்த்திருக்கிறேன். அதில் வேடிக்கை நான் சந்தித்த வைணவ அறிஞர்களில் யாரும் பிறிதொருவரை ஒருபோதும் ஏற்பதில்லை. யாரைப் குறிப்பிட்டு சொன்னாலும் அவர்கள் குறித்த வசைகளை மட்டுமே  முன்வைப்பார்கள். யாரும் யாரை குறித்தும் நல்லெண்ணம் கொள்வதில்லை. அது ஏன் பல முறை நினைத்ததுண்டு. அவர்கள் கற்கும் தத்துவ கோட்பாடு அவர்களை படுத்தும் பாடு அப்படி. பெருமாள் ராமாநுஜம் அதில் ஒரு சிம்மம் போல. அனைவரும் அவரை கண்டமாத்திரத்தில் வணங்கி விலகிவிடுவார்கள்.


நான் நினைத்ததைப் போல பெருமாள் ராமாநுஜம் முன்பிற்கு இப்போது கனிந்தவராக தெரிந்தார். வயோதிகம் பல முயற்சிகளில் ஏற்பட்ட இழப்பு துரோகம் என பல வித அனுபவங்களில் பக்குவமடைந்திருந்தார். பழைய தீவிர குணம் சற்று மட்டுப்பட்டிருந்தது. ஆனால் படைப்பூக்கம் சற்றும் குறைந்திருக்கவில்லை என்பது சாதகமான அம்சமாக உணர்ந்தேன். அவர் சதுர்வேதி ஸ்வாமிக்கு அனுக்கர். அவர் சதுர்வேதி ஸ்வாமியை குழுவில் கொண்டு வர விரும்பினார். வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிக்கு இணையாக அவரை வளர்த்தெடுக்கும் முயற்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. அது அவர்கள் அரசியல். அதை வலியுறுத்தி சதுர்வேதி ஸ்வாகள் பற்றி பல தகவல்களை சொன்னார். “திறந்த அரங்கம்பற்றிய கருதுகோள் குறித்து நான் நினைப்பதை மிச்சரியாக நிறைவேற்றுவார் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்