https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 13 நவம்பர், 2022

மணிவிழா. 24

 


ஶ்ரீ:


மணிவிழா - 24


13.11.2022



* வைணவங்கள் உரை *




ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு நோக்கம் துவக்கம் சந்தித்த இடற்பாடு விலகல் போன்றவைகளை தனிப் பதிவாக வெளியிட பல முறை முயற்சித்து சொற்கள் திரளாத சூழல். எழுதி வைக்கப்பட்டாலும் அதை பதிவிடும் அளவிற்கானது இல்லை என தோன்றி அவை அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன் . எனது மணிவிழா பற்றி பதிவும் அது போலவே நீண்ட நாள் எனதுடேபில்இருந்தது. மணிவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆவனப்படுத்த வேண்டும் எனத் தோன்றி சிறு குறிப்புகளாக எழுதி அதை வெளியிடத் துவங்கிய போது சட்டென ஆயிரமாவது ஆண்டு விழா குழு பற்றிய பதிவாக அது மாறிப்போனது. ஒரு வகையில் சரியானது என்றே நினைக்கிறேன்


எனது மொத்த வாழ்கையும் சற்று ஒய்வெடுத்த இடம் என் மணிவிழா. பின்னர் மீண்டுமொரு நீண்ட பயணம் இம்முறை பயணம் என் இறுதிவரையிலானது. எனது மெய்மை நோக்கிய பயணமாக இந்த பதிவுகளை எடுத்துக் கொண்டால் இரண்டு புள்ளிகளை இணைக்கும். அந்த இரண்டிற்குமான பயணம் அதனால் உருவான மாற்றங்களை அவதானிக்க முயல்கிறேன்





என் மணிவிழா இரண்டு எல்லைகளை தொடும் ஒன்றாக வெளிப்படுத்த நினைத்தேன். அது மரபையும் நவீன மனத்தையும் இணைப்பது. என்னளவில் அவை என்றும் ஒன்றை ஒன்று மறுப்பதல்ல. மாபெரும் வலைப்பின்னலின் இரண்டு கண்ணிகள் இரண்டும் சந்திக்கும் இடத்தில் நான் என்னை பார்க்கிறேன். அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்லவேண்டியவை அவற்றை மறுக்காமல் மாற்றத்துடன் கடத்துவது மட்டுமே நான் செய்யக் கூடுவது. எந்த காரணத்தைக் கொண்டும் அந்த இணைப்புக் கண்ணிகளை துண்டிப்பதில்லை என முடிவு செயதிருந்தேன்


எனது மணிவிழா மரபான துவக்கம் எனது ஆச்சாரிய பீடம் திருக்கோவிலூர் 26 வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகள் வந்துகோவில் திருவாய்மொழிமுற்றோதலை துவக்கி வைக்க அதன் நிறைவு கலை பண்பாட்டு இலக்கிய நிகழ்வாக எழுத்தாளர் ஜெயமோகனின்வைணவங்கள்என்கிற தலைப்பு தனிவுரையுடன் நிறைவடைந்தது. மொத்த மணிவாழ நிகழ்வும் கொண்டாட்டமும் இதன இடையில் நிகழ்ந்து முடிந்தது. இது அப்படையே எனது தந்தை அவரது மணிவாழாவை வடிவமைத்தது போலவே இருந்தது என்றாலும் அவரது விழாவில் இருந்து இது பெரிதும் வேறுபட்டிருந்தது

என் தந்தை மரபின் நவீன வடிவத்தை ஏற்றார் ஆனால் மரபின் சில கூறுகளை வெளிப்படையாக மறுக்கவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் ஒன்றை ஒன்று மறுத்த பிறகு நிகழ்ந்தது


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் துவக்கப் புதுவை ஆன்மீக உலகில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.பிற ஆன்மீக செயல்பாடுகள் கோவில் உற்சவங்களாக நடந்து முடிபவை. புதுவையை பொருத்த வரை திருப்பதி பெருமாள் கல்யாண உற்சவம பிரம்மாண்டமானது உச்சகட்ட செலவேறுயது அங்கிருந்து ஆன்மீக செயல்பாடு என்பது ஏதோ வரு வகையில் கோவிலுடம் தொடர்புடையதாக இருந்திருக்கிறது. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் செயல்பாடுகள் அறிவியக்கமாக எழுப்ப முயற்சிக்கப்பட்ட ஒன்று. வேளுக்குடி ஸ்வாமிகளின் உபண்யாசம் கூட விவேகானந்த பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் நிகழ்ந்தது


ஆன்மீக விவாதங்களை துவக்கி வைத்து புதிய கண்டடைதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவை எதுவும் நிகழாமல் சிலரின் நினைவில் கூட அது எஞ்சாது போனது துரதிஷ்டவசமானது. அதற்கு அடிப்படை காரணம் விழா குழுவின் இலக்கு பற்றிய பார்வை எங்கும் விவாதிக்கப்படவில்லை. அறிவார்ந்த தளத்தில திட்டமிட்ட நிகழ்வு நிகழும் போது அடுத்தடுத்த கட்டத்திற்கு அது நகர்ந்து செல்லும் வழியாக வடிவமைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அனைத்தின் உச்சம்திறந்த அரங்கம்”.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக