https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 7 நவம்பர், 2022

மணிவிழா. 18

 



ஶ்ரீ:



மணிவிழா - 18


07.11.2022



மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல. உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது”.


- நெல்சன் மண்டேலா-




தரிசன மதம் என்று இருக்குமானால் அது இன்றும் நாளையையும் கேட்கும் நவீன சமூகத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். காலம் சூழல் என அனைத்தையும் கடந்து அங்கிருந்து புதிய புரிதலை உருவாக்கிக் கொள்ள இடமளிக்க வேண்டும் . அதை செய்பவர்கள் யார் என்பது கேள்வி. நவீன மனம் கேட்பதை அதிலிருந்து எப்படி எடுத்துக் கொள்வது என்பது எனது கேள்வியாக இருந்தது . அதற்கான மாற்று வழிகள் பற்றி யோசிக்க துவங்கி அங்கிருந்துதிறந்த அரங்கம்என்கிற கருதுகோளை சென்றடைந்தேன். அது மதம் மற்றும் மதம் சாராத பல அறிஞர்களை கொண்ட சபையாக இருக்க வேண்டும் என விரும்பினேன் . அதன் மூலமாக சமூகத்தின் அத்தனை பிரிவை சேர்ந்தவர்களுக்கான ஒரு உரையாடல் நிகழ வேண்டும் என நினைத்தேன். அந்த உரையாடல்கள் எந்த தீர்வையும் முன் வைக்க தேவையில்லை. அது இயலாது . ஆனால் அங்கு விவாதிக்கப்படும் பேசுபொருள் நவீன உலகத்திற்கானது என்பதால் பலரால் கவனிக்கப்பட்டு கருத்தியல் முரணியக்கத்தை அதை உருவாக்கும் என நினைத்தேன்


விஜய் டீவியில் நீயா நானா ஆரம்பித்திருந்த புதிது. எனக்கிருந்த தொடர்பு மூலமாகதிறந்த அரங்கத்தில்நடக்கும் விவாதங்களை அதில் வெளியிடும் வாய்ப்பிற்கு முயன்றேன். அவர்கள் அதை ஒரு நாள் நிகழ்வு வரைவாக கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். மறுத்துவிட்டேன் அங்கு நடக்கும் விவாதம் நான் நினைக்கும் இடத்திற்கு செல்லும் என நினைக்கவில்லை. மைய கருத்தியல் சிதையவும் வாய்ப்பிருப்பதாக பட்டது . வேறு சில தொலைகாட்சி நிகழ்வுகளில் அரங்கில் நிகழ்வதை முழுவதுமாக வெளியிடும் வாய்பிருந்தது புதிய உற்சாகத்தை கொடுத்தது





திறந்த அரங்கம்கருதுகோள் குறித்த வரைவு உருவாக்க முயன்று கொண்டிருந்தேன். அது ஒரு தொடர் சிந்தனை நிகழ்வு. அரங்கில் அந்த சிந்தனை முழுவதுமாக திகழ வேண்டும். ஒவ்வொன்றும் குறிப்பெடுக்கப்பட்டு அடுத்த உரையாடலை வடிவமைக்க வேண்டும். ஒன்றை தொட்டு ஒன்று கிளைத்து எழ அதற்கான வழியை அது அடையும். ஆனால் அதன் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவருக்கு அதை வடிவமைக்க அது இட்டு செல்லும் இடம் பற்றிய புரிதலிருக்க வேண்டும். அந்த உரையாடல் முழுவதுமே ஒரு ஆவணம் போல தொகுக்க்கப்பட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். முதல் நிலை கேள்வி ஆழுளத்தில் விதையாக தோன்றியது ஆனால் சொற்களாக திரளவில்லை. எங்கோ யாரோ சொல்லும் ஒரு சொல் அதை முளைக்கச் செய்யும் உறுதியாக நினைத்தேன்.அந்த ஒரு சொட்டு நீருக்கான தேடலில் நிகழ்வில் பங்குகொள்ளும் அறிஞர்களை தொடர்பு கொண்ட போதுதான் அது அவ்வளவு எளிதல்ல எனப் புரிந்தது. பல துறைகளைச் சேர்ந்த 160 பேர்களுக்கு மேலாக தொடர்பு கொண்டு அதில் இரண்டு பேரைக் கூட என்னால் தெரிவு செய்ய இயலவில்லை என்பது கடும் விரக்தியை கொடுத்தது


மொழி,பண்பாடு,காலாச்சாரம் போன்றவற்றை பற்றி ஓரிரு வரிகளை தெரிந்து வைத்திருப்பதை போல ஆன்மீகம் பக்தி போன்ற ஒன்றாக அவர்களிடையே வெளிபடுகிறதுஅது மேலடுக்கில் காணப்படுகிற எதைம் பற்றிக் கொண்டு வளராத நீர் தாவரம் போல இருப்பதாக உணர்ந்தேன். யார் யாருக்கு சொல்லப் போகிறார்கள் என்கிற அதீத குழப்பபத்தை அடைந்திருந்தேன்.  


சதுர்வேதி ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு குழு சிறப்பு நிர்வாகிகளுள் ஒருவரான புதுவை முதலியார் பேட்டையை சேர்ந்த பெருமாள் ராமாநுஜம் மிகவும் அணுக்கர். என் திட்டம் குறித்து அவரிடம் மிக விரிவாக பேசி இருந்தேன். துவக்கத்தில் இருந்தே அவர் சதுர்வேதி ஸ்வாமிகளை அதில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தார். அவரை பற்றிய கருத்துக்களை எனக்கு சொன்னவர் அவர். ஓரளவிற்கு நவீன பார்வை கொண்டவராக திரிவேதி ஸ்வாமிகள் பற்றி அறிந்திருந்தேன் . ஆனால் அன்று அவர் பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பதால் அவரை தவிற்து பிற வழிகளை கண்டடைய முயன்றேன். நான் தொடர்ந்த பயணம் ஏறக்குறைய முட்டு சந்தில் வந்து நின்ற பிறகு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடியவர் அவர் என்கிற புரிதல் ஏற்பட்டு மிகுந்த தயக்கத்திற்கு பிறகு அவரை சந்திக்க ஒப்புக் கொண்டேன் . புதுவை முதலியார் பேட்டை பெருமாள் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது உரையை கேட்க சென்றிருந்தேன். அது நான் கேட்கும் அவரது முதல் உரை. முழுக்க வைணவ மரபு சார்ந்தது. ஆனால் உபண்யாசம் போல இல்லாமல் உரையாடலாக இருந்தது. அது ஆச்சர்யமான உரை அதுவரை நான் கேட்டவற்றில் சிறந்தது. தெரிந்தவர் தெரியாதவருக்கு சொல்லும் உரை போல இல்லாமல் அங்கு சிந்தனை இருபுறமும் நிகழ்வதாக தோன்றியது. அதில் அவர் எங்கோ சென்று ஒரு புள்ளியை தொடக்கூடும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு நிலவிய சூழலில் அரங்கில் சிறு இடையூறால் அவருக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு அந்த இடத்தை சென்று தொட முடியாமலானது பலத்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் அவர் எனக்கு நிச்சயம் உதவ முடியும் என நினைத்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்