https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 நவம்பர், 2022

மணிவிழா 28

 



ஶ்ரீ:


மணிவிழா - 28


17.11.2022



* பிரமாண்ட துவக்கம்  *











என்னுடைய ஏழு அல்லது எட்டு வயதில் தந்தை சொன்னசரணாகதிதத்துவம் புரிபடாத போதும் இன்றுவரையிலும் அதே என்றிருந்தாலும் அந்த வயதில் பற்றுவதற்கு அது மிக எளிதாக தோன்றி இருக்கலாம். பெரியதாக செய்ய ஏதுமில்லைதேமேன்னு இருக்கலாம். பத்து பன்னிரண்டு வயதில் எதிர்பாராமல் கிடைத்த ராமாநுஜரின் ஓவியம் என்னை அடுத்த இடத்திற்கு நகர்த்தி இருந்தது . தந்தையை மகிழ்விக்க புஜை அறையில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தை வணங்குவது அன்றி பிற தெய்வங்களை வணங்காதவனானேன். அது குறித்து தந்தைக்கு மிகுந்த மகிழ்சி . விளையாட்டாக துவங்கிய இந்த முறை பின்னர் என்னுள் உறுதிபட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு உறுதியாக என்னை பிடித்திருந்தது என்பதைஆயிரமாவது ஆண்டு விழாகுறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற விழைவு எழுந்த போதுதான் உணர்ந்தேன்


ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நிலையாக ஏதாவது செய்ய வேண்டும் என காட்டிச் சென்றவார் எனது முது தந்தை அந்த இயல்பு எனக்கு அவரிடமிருந்து வந்திருக்கலாம். ஒரு கால கட்டத்தில் பிறப்பே இந்த விழாவிற்கானது என நினைக்க துவங்கினேன். இது நாள் வரை அதற்கு எடுத்த முயற்சி குறித்து நிறைவையே அடைகிறேன். நினைத்த இலக்கை அடையாமளாகி இருக்கலாம் ஆனால் அது எனக்கு தனிப்பட்ட எதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருந்தது. “திறந்த அரங்கம்குறித்த முயற்சி மன அழுத்தத்தை கொடுத்து அனைத்து பாதைகளும் அடைபட்டு தனித்து விடப்பட்டதாக உணர்ந்த சில காலம் உண்டு. பின் அங்கிருந்து எழுத்தாளர் ஜெயமோகனை சென்றடைந்தேன். வாழ்வில் மிக முக்கியமான தருணம்என் வாழ்வில் கொண்டுவர இருக்கும் அதீத மாற்றத்தை அவரை சந்தித்த அந்த முதல் கணத்தில் உணரவில்லை. அடைபட்டுப் போனதிறந்த அரங்கம்மீண்டும் துவங்க அவரது உதவியை பெற சென்றதாக நினைத்திருந்தேன். ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவின் கருதுகோளை சொன்னதும் சிறு தயக்கமோ தடை கூட சொல்லாமல். நீங்கள் நின்று கொண்டிருக்கும் முதல் படியின் முடிந்த படியில் நான் நின்று கொண்டிருகிறேன்என்று திகைப்பை கொடுத்தார். எப்படி நானும் அவரும் ஒரே பயணத்தில் இருக்கிறோம் என புரியவில்லை. ஆனால் அவர் வெள்ளிமலையில் முயற்சிப்பதின் ஒரு துளி பற்றி நான் நினைத்திருக்கிறேன் என்கிற பிரமிப்பை இப்போது அடைகிறேன். நீண்ட உரையாடலுக்குப் பின்  “இணைந்து செய்யலாம் வேண்டிய உதவி செய்கிறேன்என்றார். வாழ்கை அர்த்தமுள்ளதாக தோன்றிய காலகட்டம் ஒன்று இருந்தது . பின்னர் வாழ்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்கிற பிறிதொரு இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இதுவும் உறுதியானதா என தெரியவில்லை. ஜெயமோகனை சந்தித்து வந்த பின்னர் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா பற்றிய கனவு மிகப் பெரியதாகியிருந்தது


2012ல் துவங்கிய விழா குழு அமைப்பை புதுவை தாண்டி பிற இடங்களுக்கு கொண்டு செல்வது குறித்த எண்ணிக் கொண்டிருந்தேன் . பிரமாண்டம் எப்போதும் ஒரு ஆளுமையை மையப்படுத்தி கட்டமைக்கப்படுவது. நான் நினைத்த அந்த ஆளுமைவேளுக்குடி ஸ்வாமி” . முதல் முறை அவரை சந்திக்க முயன்று அதன் உள்வட்ட அரசியலில் வெறுப்புற்று திட்டத்தையும் கைவிட்டேன். ஆனால் ஆழுள்ளம் அது அப்படி இல்லை  நிகழும் என சொன்னது நிகழ்ந்தது


திருகோவிலூர் ஜீயருடன் அயோத்தி யாத்திரை போனபோது அதற்கான விதை மீண்டும் விழுந்தது. அனைவரையும் ஒன்றிணைக்கும் விழாவாக ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டை பார்த்தேன். அதை உருவாக்கும் போதே அதன் பிரமாண்டம் இணைந்தே உருவானது. 2017 இலக்கு வைக்கப்பட்டு அதற்கு செயல்வடிவம் கொடுக்க ஐந்து வருடம் தேவை படலாம் என ஊகித்து 2012ல் ஜூன் மாதத்தில் விழாகுழு துவக்கப்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக