ஶ்ரீ:
மணிவிழா - 30
19.11.2022
2012ல் துவக்க விழா பல லட்சம் செலவில் எதிர் நோக்கியதை விட மிக பிரண்டமாக நிகழ்ந்தது. நான் விசேஷ அழைப்பாளர்களாக அழைத்திருந்த வைணவ மாநாட்டு செயல்பாட்டாளர்கள் பலரை அது திகைக்கச் செய்திருந்தது. சுமார் ஆறாயிரம் பேர்களுக்கு மேலாக மூன்று நாட்கள் தொடர்ந்து கலந்து கொண்டனர். திருப்பதி கல்யாண உற்சவத்திற்கு அடுத்ததாக புதுவையில் இதுவே மிகப் பெரிய கூடுகை. முக்கியமான பல மாற்றங்களை உள்ளடக்கி நிகழ்தப்பட்டது.
விழாவிற்கு நேரில் அழைக்கச் சென்ற போது “என்ன இதெல்லாம்,அது அந்த காலம்,நாங்கள் செய்து பார்க்காததா, அது முடிந்து போயிற்று என்பது போல பல பாவணை அனைத்திற்கும் அடியில் இருந்தது மெல்லிய இளிவரல் மனநிலை. அவர்கள் முன்வைத்த கேள்வி ஆன்மீக விழாக்கள் கோவிலை அன்றி பிற இடங்களில் இதுவரை நிகழ்த்தப்பட்டதில்லை. திருப்பதி கல்யாண உற்சவ வெற்றியின் முதல் கராணி திருப்பதி தெய்வத்தின் மீதிருக்கும் அளவு கடந்த பிரேமை. அந்த பெயரை சொல்லி எங்கு யார் நடத்தினாலும் பெருந்திரளை எதிர்பார்க்கலாம்.அது பக்தி பூர்வமானது. ஆனால் உபண்யாசம் என்பது புத்திபூர்வமானது. அமர்ந்து கேட்பது அதற்கு எத்தனை பேர் தயார் என தெரியவில்லை என்றார் என் தந்தையின் நண்பரான பல் மருத்துவர் ராதாகிருஷ்ணன் புதுவை வைணவ மாநாட்டை தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
அவர் அப்படி சொன்ன போது சிறு துணுக்குறல் இருந்தது. ஆனால் எனக்கு வேறு வழிகள் இல்லை. நான் நினைக்கும் செயல்பாடுகளுக்கு பெரும் திரளான கூடுகையும் பொருளும் தேவை. சமீபத்தில் புதுவை வந்திருந்த மாதா அமிர்தானந்தமயி பெரும் கூட்டத்தை ஈர்த்திருந்தார். அவர் புழங்கும் தளம் வேறு மாதிரியானது. அது போல மரபான ஆன்மீகத்தை கொண்டு வர முடியாது என்றாலும் அதன் சிறு கூறுகளை இதில் கொண்டு வர வேண்டும் என்கிற திட்டமிருந்தது. அதை மிக கவனமாக செய்ய வேண்டும். ஆகவே அவை அனைத்தும் பிரமாண்டத்தில் வைத்தே கணக்கிடப்பட்டிருந்தது. அதை இப்போது முயற்சிக்க முடியாமலானால் பின் ஒரு போதும் அது நிகழாது. மற்றைய ஆன்மீக நிகழ்வு போலதான் இதுவும் நிகழ வேண்டுமானால் அதற்கு நான் எதற்கு .
அவர் சொன்னது போல இதுவரை கோவிலை மையப்படுத்தியே உபண்யாசங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. இம்முறை திறந்த வெளி களம் பெரும் திரளான மக்களை கொண்டு வர வேண்டும் என்கிற திட்டமிடல் இருந்தது . அது ஒரு வகை அக்னிப் பரிட்சை. எதிர்பார்த்த வரவேற்பில்லாமலானால் நான் முதலில் இழப்பது நன்கொடையாளர்களை. திட்டமும் முழு தோல்வியடையலாம். ஆனால் ஆழுளம் தொடர்ந்து நம்பிக்கையை கொடுத்திருந்தது.
நன்கொடை மிகப் பெரிய அளவில் திரண்டாலும் கச்சிதமான திட்டமிடல் இல்லாமலானால் அதுவும் பின்னால் தோல்வியை அடையும். துவக்க விழா மூன்று நாட்கள் மிக சிறப்பாக நிகழ்ந்தது. துவக்க நிகழ்விலும் பின் நாட்கள் வேளுக்குடி ஸ்வாமி தொடர் உபண்யாசம் நிகழ்த்தினார். முதல் நிகழ்வு அப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது . தீவிர “தத்துவ விசாரங்களை” கொண்ட வைணவ நூலான “நவவித சம்பந்தம்” உபண்யாசமாக மிக செறிவாக அவரால் சொல்லப்பட்டது அதன் உச்சம். அதுரை காலக்ஷேபமாக சொல்லப்பட்ட பேசுபொருள் என்பது மேலும் வியப்பானது. கூடிய கூட்டம் இறுதிவரை கட்டுண்டு இருந்ததற்கு வேளுக்குடி ஸ்வாமியின் பேச்சு பிரதான காரணம். யாருக்கும் அதன் சுருக்கம் சொல்ல இயலாது ஆனால் பிரமாதமான பேச்சு என என்னை பார்ப்பவர்கள் எல்லாம் கொண்டாடி திகைக்க வைத்தார்கள். துவக்கத்தில் விந்தையாக இருந்தாலும் அதன் எதார்த்தம் புரிந்து கொள்ள கூடியது. இன்று என்னால் அதற்கான முழு காரணத்தை சொல்ல முடியும் ஆனால் அன்று வழக்கம் போல உள்ளத்தில் திரண்டதை வெளிக் கொண்டு வரும் கருவி இல்லாமலானேன். அது ஒரு அவஸ்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக