https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 24 நவம்பர், 2022

மணிவிழா - 35

  

ஶ்ரீ:


மணிவிழா - 35


24.11.2022



* அழகியல் *





எனது அடிப்படை தேடுதலை சொல்லுதல் அவரிடம் எந்த புரிதலையும் ஏற்படுத்தாது. அது தனி தளத்தில் நிகழ இருக்கிறது. விழாக்குழுவின் செயல்பாடுகளை இரண்டாக பிரித்திருந்தேன். ஒன்று பொது தளத்திலும் பிறிதொன்று சம்பரதாய நெறியிலும் நிகழும். இரண்டையும் இணைத்து நிர்வகிக்கும்காரிய கமிட்டியில் திட்டங்கள் அந்தந்த தலைவர்களால் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறபடும். பின்னர் அதற்கு தேவையான நிதிகாரிய கமிட்டியால்அளிக்கப்படும். தனிப்பட்டு நிதி திரட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். அமைப்பு எளிதில் பலவீனமடைவது ஊழல் குற்றச்சாட்டுகளால். அதுவே முதலில் தவிர்க்கப்பட வேண்டியது. பல சமூக நலன் மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் கோவில் திருவிழாக்கள் போன்றவை  தொழிலதிபர்களால் கோடிக்கணக்கில் செய்யும் நிதி உதவியை சார்ந்திருக்கிறது . இரண்டும் மிகச் சரியாக ஒரு புள்ளியில் இணைந்தால் மட்டுமே அந்த பயணம் நீண்ட தூரம் செல்ல முடியும். அந்த நிதி பல மனநிலைகளில்  இயக்கங்களுக்கு அளிக்கப்படுகிறது. எல்லாம் தர்ம சிந்தனையை மையப்படுத்தியது என்றாலும் கொடுப்பவருக்கு மரியாதையை அந்த நிகழ்வுகளின் வழியாக பெற்றுத்தந்து அவர்களின் உதவியை தக்க வைத்துக் கொள்வார்கள். அது ஒரு நுண்ணிய ஆடல் மிக கவனமாக செய்ய வேண்டியது


அதே சமயம் அவருக்கு விளக்கும் போது என் சார்பில் சில உறுதிமொழிகளை கொடுக்க எண்ணியிருந்தேன். சம்பிரதாய கமிட்டி அதன் விஷயங்கள் நம்பிக்கையுள்ளவர்களால் தலைமை ஏற்கப்பட்டு எந்த சமரசமும் இல்லாமல் நிகழும். பொதுத்தளத்தில் நிகழவேண்டியது குறித்து இன்னும் முழுமையான கருத்துரு உருவாக்கம் முழுமையடையவில்லை. அதன் மைய நிகழ்வுதிறந்த அரங்கம்”. இதுவரை யாரும் முயற்சிக்காதது. இன்று மையக் கருத்து வரைவாக ஏற்கப்பட்டிருக்கிறது. அதன் துவக்கம் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு நடைபெறும். இப்போதைக்கு வைணவ மரபான நிகழ்வுகள் முதல் நிலையில் துவங்கப்படும்


நிர்வாக ரீதியான மரபான வைணவர்களுடன் நான் எதிர் கொள்ளும் சிக்கலை கடக்க ஏற்படுத்திக் கொண்ட முயற்சிக்கவே அவரை சந்திக்க சென்றேன். அதே சமயம் வைணவ மரபை பற்றிய எந்த எதிர் கருத்தும் எனக்கு இல்லை. ராமாநுஜரும் நம்மாழ்வாரும் எனக்குள் இளமையாக நம்பிக்கையாக இருக்கின்றனர். அந்த நம்பிக்கை குறித்த எந்த விவாதமும் யாருடனும் இல்லை. அவரிடம் மட்டுமின்றி பிற எவருடனும் அது குறித்து தர்க்கிக்க வேண்டிய தேவை எனக்கில்லை . அதில் அவர்களை போன்றவர்களே ஆகச்சிறந்தவர். அந்த ஞானம் அமைப்பிற்கு தேவை. ஆனால் அவர்களின் பிரசாரம் நான் அறிந்து அவற்றை நடைமுறை படுத்த முயலும் செயல் கடந்து கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடில்லை.


ஆச்சார அனுஷ்டானங்கள் கடைபிடிக்கும் ஒருவர் தனிமனித உரிமை, சுதந்திரம்,ஜனநாயக பண்பை வெளியே தள்ளிவிடுகிறார். அந்த அதிகாரம் மரபிலிருந்து தனக்கு வருவதாக நினைக்கிறார். பிற மனிதர்களின் மரபை சித்தாந்தத்தை அனுஷ்டான ஆச்சார வாதம் கொண்டு காட்டி மறுப்பதை எந்த குற்றவுணர்வும் இன்றி செய்ய அவர்களால் முடிகிறது. அது மெல்ல அவர்கள் தங்களை முன்வைத்தபடி மனித நேயத்திற்கு எதிரானவராக திருப்பி விடுகிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. அவர்கள் முப்பது வருடங்களாக பிறரை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பல ஆச்சார அனுஷ்டானஙகளை வயோதிகம் குடும்ப சூழல் மற்றும் நோயின் கடுமை காரணமாக விலக்கி வைக்க நேர்ந்ததை பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அதை மன மாற்றம் என எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவை அந்த சூழல் உருவாக்கும் நெருக்கடியால் நிகழும் மாற்றம். ஆனால் எண்ண அளவில் அவர்களிடம் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை


முப்பது வருடத்திற்கு முன்னால் அந்த சூழலில் அவர்களிடம் பலர் பேசிய கருத்தை பார்க்க மறுக்கும் போக்கை கடந்து சென்றவர்கள். இன்று நிதர்சனமாக கண்களுக்கு காட்சியாவது இந்த கால் நூற்றாண்டில் உலகியலில் நடந்து வரும் வேகமான பொருளியல் சார்ந்த தன்னிறைவு. அதனால் உருவாகும் உறவு மேலான்மைச் சிக்கல். மனவழுத்தம் கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் உருவாகி வரும் மாற்றத்திற்கு முன்னால் எந்த தத்துவங்களுக்கும் பொருளில்லை என்கிற இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று அதனுடன் உரையாடக் கூடுமென்றால் அது அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றால் மட்டுமே இயலும் என நம்புகிறேன் . ஒரு வகையில் விழாக் குழுவின் செயல்பாடுகள் அதை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டன. மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை அவர்கள் சீரழிவாக பார்கிறார்கள் பதற்றமடைகிறார்கள் அதன் மீட்சி குறித்து சிந்திக்கிறார்கள். ஆனால் அவை முரணியக்கங்கள். புதியதாக ஒன்றை பிறப்பிக்க நிகழும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...