https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 நவம்பர், 2022

மணிவிழா. 17

  


ஶ்ரீ:



மணிவிழா - 17


06.11.2022




வைதீகர்களின் வழியாக ஆயிரக்கணக்கான வருடங்கள் வேதம் தொடர்ந்து இன்று வரை நம்மை வந்து சேர்ந்ததற்கு அதன் கல்வி முறையும் அதை கொண்டு வந்து சேர்க அவர்கள் பேணிய முறைமையும் அடிப்படை காரணம் .நாம் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதில் தான் நமது மரபின் அத்தனை வேர்களும் இருக்கின்றன . வேதம் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கானதாக அவர்களால் சொல்லப்பட்டாலும் இன்று அந்த நிலை முழுமையாக இல்லை. இன்றும் வேத பாடசாலைகள் மூலம் அந்த மரபு பேணப்படுகிறது என்றாலும் அதை கற்பவர்கள் அருகி வருகிறார்கள். இன்று பாடசாலை மாணவர்களின் எதிர் காலம் கருதி அவர்களுக்கு நவீன கல்வியும் அங்கு அளிக்கப்படுகிறது. மரபுடன் நவீன கல்வியையும் பெற்று வெளிவருபவர்கள் விரிந்த மனமும் கொண்டவர்களாக இருக்கக் கூடும்


எப்போது அச்சில் வேதம் கிடைக்க துவங்கியதோ அப்போதே அது விருப்பம் உள்ள எல்லாருக்குமாக மாறிப்போனது. மேலும் வைதீகம் பேணும் குடும்ப வாரிசுகள் அவற்றை விட்டு விலகி வேறு உலகியல் துறைகளுக்குள் சென்று பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. நான் உருவகிக்கும் ஆன்மீகம் இன்று அங்கு நிலவும் இந்த இரண்டு நிலைகளின் சூழலில் இருந்து உருவாகும் முரணியக்கத்தில் இருக்கிறதுஅதன் வழியாக நவீன உலகத்திற்கான புதிய அணுகுமுறை வெளிவரலாம் . அதன் தாக்கத்தால் சமூகத்தில் முன்னமே மாற்றங்கள் நிகழத் துவங்கிவிட்டனஇனி மேலதிகமாக நிகழவிருப்பதை அவதானிக்க பல ஆண்டு காலமாகலாம்






ஆன்மீகத்தில் இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதை இலக்கிய உலகின் வெளிப்பாடுகளை கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன் . சமூக மாற்றங்களை இலக்கிய படைப்புகளே முதலில் உணர்ந்து கொள்கின்றன . அதற்கான வகைமைகளை இலக்கிய உலகம் உருவாக்கி பெயரையும் வைத்து அவற்றை அவதானிக்க முயல்கிறது. வேத, புராண, இதிகாசங்களை பழைய முற்போக்கு பார்வையில் இருந்து விலகி தர்க்க ரீதியாக அவற்றை அணுகும் போக்கை பார்க முடிகிறது. அத்தகைய வெளிப்பாடுகளை இப்போதைக்கு அதைநியோ கிளாஸிசம்என முன் வைக்கிறது . எதிர்காலத்தில் வேறு வரையறைகள் வரக்கூடும்


10 ஆம் நுற்றாண்டில் சங்கரிரடம் இருந்து அழகியலால் வேறுபட்டு ராமாநுஜர் முன்வைத்த சித்தாந்தம் விசிஷ்டாத்தவைதம் . சமூகத்தை கோவிலுக்கு மிக அணுக்கமாக கொண்டு வர முயன்றார். அதற்கு பல சமூகங்களை உள்ளடக்கியபத்து கொத்து பரிவாரம்என ஒரு செயல்முறையை உருவாக்கி அளித்தார். அது பின்னர் வழக் கொழிந்து போனது. அதற்கு பின்னால் அதிகார அரசியல் இருக்கலாம். சமூகம் எதிர்பார்க்க நவீன வாழ்வியல் நெறி குறித்த விளக்கத்தை எந்த மரபான மடங்கள் முடிவு செய்யாது


வேதம் ராஜ சம்ஹிதை அது உத்தரவிட மட்டுமே செய்யும் அவை சமூகத்திற்கானதாக இருந்தாலும் அதன் அன்றாடங்களுக்கு எந்த தீர்வையும் முன் வைக்காது . மடங்களுக்கிடையேயான சித்தாந்த முரண் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து இன்றளவும் கலையப்படவில்லை என்பது பொதுக் கருத்தாக பார்க்கப்பட்டாலும் , அவை ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்த தத்துவ நிலைப்பாடுகள். அந்த வேறுபாடுகளே இந்து ஞான மரபின் சிறப்பு. அவை என்றும் அங்கு இருந்து கொண்டிருக்கும். அதை புரிந்து கொள்ளலாம் ஆனால் அதே சமயம் எல்லாருக்குமாக அது தன்னை தகவமைத்துக் கொள்ளாது என்றால் ராமாநுஜர் முன்வைத்த விசிஷ்டாத்தவைத அழகியல் கோட்பாடுகளைக் கொண்ட சித்தாந்தற்கு இன்றைய இடம் என்ன என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...