https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 நவம்பர், 2022

மணிவிழா. 27

 




ஶ்ரீ:


மணிவிழா - 27


16.11.2022



* வைணவ அறிஞர் பெருமாள் ராமாநுஜம் *








ராமாநுஜர் ஆயாரமாவது ஆண்டு விழாக்குழுவில பிற சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களையும் வைத்து நடத்துவது என்பது அவருக்கு அதிர்வளிப்பதாக இருந்தது. வைணவத்தின் இரு கலைகளுக்கு இடையேயான தத்துவ பூசலை ஐநூறு ஆண்டுகளாக எடுத்து வந்தவர்கள் இன்று பல சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து வைணவ ஆச்சாரியனுக்கு விழா எடுப்பதை அதிர்ந்து நோக்குவதை புரிந்து கொள்ளக் முடிகிறது . பெருமாள் ராமாநுஜத்தை சந்திக்க சென்றது அமைப்பின் திட்டங்களை முழுமையாக கட்டமைத்து விரிவான வரைவை உருவாக்கி தலைமை நிர்வாகிகளாக சமூகத்தின் பல பிரிவுகளின் முதன் ஆளுமைகளை கொண்டு வந்த பிறகு. நான் உத்தேசிக்கும் அமைப்பு பெருமாள் ராமாநுஜம் போன்றவர்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. வைணவ உலகில் யாரை பார்த்தாலும் அவர்களது பேச்சில் செயல்பாடுகளில் பெருமாள் ராமாநுஜத்தின் சாயலை கவனிக்க முடியும். இங்கு அனைவரும் பிறரை திருத்தும் பொருட்டு பேசிக் கொண்டே இருப்பவர்கள். ஒப்பு நோக்க பிறரைவிட பெருமாள் ராமாநுஜம் வைணவ தத்துவத்தில் நிபுனத்துவம் உள்ளவர். இந்த அமைப்பிற்கு அவரது அனுபவமும் கல்வியும் தேவை. ஆனால் அத்துடன் வரும் ஆச்சார அனுஷ்டானங்களைப் பற்றிய உரையாடலும் இடம் பற்றிய புரிதல் இல்லாமல் எல்லா நேரமும் அதை பேசி சொந்த குடும்பத்ரின் விரக்திக்கு ஆளாவதை அறியாதவர்கள்


சுமார் முப்பது ஆண்டுகள் கடந்து அவரை சந்திக்க சென்றது காலத்தின் மீது எனக்கிருந்த நம்பிக்கை. காலம் அனைத்தையும் மாற்றக் கூடியது. அவர் மாறியிருப்பார் என ஊகித்தேன். அது உண்மை நேரடியாக கூர் சொல்லால் பேசாது அதை தவிர்த்தது எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. துவக்க விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டு நிகழ சில நாட்கள் இருக்கும் போது அவரை சந்திக்க சென்றேன். வேளுக்குடி ஸ்வாமி புதுவை வருகிற போது மரபான அமைப்பில் இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்கிற காரணத்திற்காகவும் அமைப்பை முழுமையாக நிறைவு செய்யும் பொருட்டும் அவரை சந்திக்க சென்றேன்


அனைத்து அடிப்படைகளும் ஒருங்கி செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் அவர்களையும் உள்வைத்தை அது நிகழ வேண்டும் என்பது எனது முடிவு. இறுதி நேரத்தில் அவரை சந்திப்பதை தனக்கான அவமரியாதையாக அவர் நினைக்க முடியாது காரணம். இந்த இயக்கம் மரபிலிருந்து நவீன உலகை நோக்கி நகரும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இதில் அவர்களுக்கான இடம் மிக சிறியது அதில் பங்கெடுப்பதும் மறுப்பதும் அவரின் உரிமை நான் அவரை எந்த விதத்திலும் நிர்பந்திக்கப் போவதில்லை. விழா குழு துவக்கம் பற்றிய முன்வரைவை அவருக்கு கொடுத்த போது அவரை அதிச்சியடைய வைத்த அம்சம். வைணவ நட்சத்திர உபண்யாசகர் வேளுக்குடி ஸ்வாமி மூன்று நாள் தங்கியிருந்து உபண்யாசத்திற்கு நிகழ்த்த ஒப்புக் கொண்டிருப்பதுஅவரால் அதை ஏற்க இயலவில்லை. ஆனால் புறக்கணிப்பு சர்ச்சையை உருவாக்கும். மேலும் தனிமைப்பட்டுப் போவோம் என அவர் அறிந்திருக்க வேண்டும்


மரபான ஒரு துறையில் நிபுணத்துவம் உள்ளவர்களிடம் உள்ள சிக்கல் புதிய முயற்சிகளை காணும் போதெல்லாம் அவர்கள் சொல்லுவது இரண்டு. ஒன்று இந்த காரணத்தால் இது பிழை. இரண்டு இப்படி செய்ய இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பதாக இருக்கும். இன்றுவரை புரியாத ஒன்றுண்டு. இந்து மத அமைப்பிற்குள் அப்படிபட்ட முற்றதிகாரம் கொண்ட அமைப்பு என ஏதாவது ஒன்று இன்று இருக்கிறதா?. இருக்குமானால் அதற்கு அனைவரையும் கட்டுபடுத்தும் அதிகாரமிருக்கிறதா? இரண்டிற்கும் இல்லை என்பது பதில்.என் தந்தை காலத்தில் இது போன்ற சர்சைகள் எழுந்து ஒருவருக்கு ஒருவர்  கடிதம் எழுதிக் கொள்வதும். அதன் உச்சமாக வழக்கு தொடுப்பதும் இருந்த காலம் ஒன்று உண்டு.இன்று அதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்