https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 20 நவம்பர், 2022

மணிவிழா. 31

 



ஶ்ரீ:


மணிவிழா - 31


20.11.2022



* காலம் என்கிற காத்திருப்பு *







2012ல் துவங்கப்பட்ட இயக்கம் மெல்ல வளர்ந்து 2013ல் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பதினைந்தாயிரத்தை கடந்தது. நிதி வசூல் என புத்தகம் அடித்து எப்போதும் திரட்டப்படவில்லை என்பது அதன் பலங்களில் ஒன்று . செலவுகளை நிர்வாகப் பொறுப்பில் இருந்த தொழிலதிபர்கள் பகிர்ந்து கொண்டனர். விழா குழு துவக்கம் பற்றிய பேச்சு எழுந்த போதே வலுவான நிதி ஆதாரத்துடன் அது உருவாகியிருந்தது . முக்கிய காரணம் அதை வைணவ மரபு மட்டும் சார்ந்ததாக முன்னிறுத்தப் படவில்லை. சம்பிரதாயங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் பொதுவில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் நுண்மையான தத்துவ பின்புல முரண் குறித்து யாருக்கும் எந்த புரிதலும் இல்லை. சைவ, அத்வைத,மாத்வ, ருத்ர வைணவ,சாக்தம் என அனைத்திலிருந்தும் ஆளுமைகள் நிர்வாகத்தினுள் வந்திருந்தனர்


அதன் தத்துவ வேறுபாடுகளின் அடிப்படைகளை அவர்களில் சிலர் அறிந்திருந்தாலும் அதை பற்றி பெரிதாக எடுக்காதவர்கள் . மத மரபு பின்பற்றல் சமூகத்தின் பொதுவில் தீவிரமாக இருப்பதில்லை. அது எப்போதும் சிறிய குழுக்களாக இருப்பவர்கள் செய்வதுதங்கள் வைணவ நிலைபாட்டில் உறுதி வெளிப்பட அதை பேசியவர்கள். அவர்கள் தங்களுக்குள் திரண்டு மோதிக் கொண்டவர்கள் . அதை கவனத்தில் எடுக்காமல் அனைத்து சம்பிரதாயத்திற்கும் அமைப்பில் இடமிருந்தால் அது பற்றி பெரிதாக பொருட்படுத்தாதவர்களை திரட்ட முடிந்தது .


துரதிஷ்ட வசமாக எனக்கு ஆரம்பத்தில் இருந்து பிடி கிடைக்காத ஒன்று வைணவ சம்பிரதாயத்தை பேணுபவர்களிடம் காணப்படுகிற அதி தீவிர நிலைப்பாடு

அவர்களுக்குள் நிகழும் உரையாடல் கூட எப்போதும் சர்ச்சைகளின் வடிவில் இருக்கும். நெற்றியில் இடும் திருமண் துவக்கமாக சாப்பிடும் உணவில் சேரும் காய் கறிகளோடு அவை நீள்கின்றன பின் எங்கும் நிறைவடையாது சென்று கொண்டே இருக்கிறது. அடிப்படை குறித்து அவரவர் புரிதலுக்கு ஏற்றபடி முரண்பட்ட கருத்துகளை பேசினாலும் அவை சித்தாந்தம் குறித்ததாக இருந்ததில்லை. காலம் அவை அனைத்தையும் தர்க்கத்திற்குள் நிற்காது போனாலும் அவரவர் எடுத்த கொள்கை காலத்தால் வளர்சிதை மாற்றமடைவதை பார்த்திருக்கிறேன்


திருக்கோவிலூர் ஜீயர் ஸ்வாமிகளை ஒரு முறை சந்திக்க சென்ற போது அவர் சொன்னார் பெருமாள் ராமாநுஜம் நுண்ணுயிரி பாதிப்பால் கண் பார்வை இழந்திருக்கிறார், “போய் பார்த்து வாருங்கள்என்றார். புதுவை வந்தவுடன் அவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றேன். அவரது மனைவி எதிர்பட்டார். “சமீப காலமாக அவர் யாரையும் சந்திப்பதில்லை, கேட்டு சொல்கிறேன்என கூறி சென்றார் . “நான் அவரது நலம் விசாரிக்க வந்தேன் நேரில் சந்திக்க சாத்தியமில்லை என்றால் பரவாயில்லைஎன்றேன். “இருங்கள் கேட்டு சொல்கிறேன்என்றார். சற்று நேரத்திற்கு பிறகு என்னை உள்ளே அழைப்பதாக சொன்னார் . வீட்டின் பின் கட்டில் அவரை சந்தித்தேன். வழக்கமான உபசரிப்புகள். ஆனால் அவர் நிலையழிந்திருப்பதையும் என்னை முகங் கொண்டு நேர் நோக்குவதை தவிர்ப்பதையும் ஊகிக்க முடிந்தது. அது நோயினால் அல்ல பிற ஏதோ ஒன்று. எனக்கு அது என்ன என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது


அவர் என்னிடம் கூச்சத்துடன் சொன்னார்கண்களில் நுண்ணுயிரி பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் குளிக்கக் கூடாது என சொல்லிவிட்டார்கள்”. “குளிக்காமல் எப்படி திருமண் இடமுடியும் வெற்று நெற்றியுடன் யாரையும் சந்திக்க சங்கோஜமாக இருக்கிறதுஎன்றார். அதர்ந்து போனேன். என்ன இது?.  வாழ்நளெல்லாம் நெற்றி நிறையும் திருமண்னை பரவசத்துடன் அணிந்திருந்தவர்வட , தென் கலை திருமண் பற்றிய நுட்பமாண விமர்சனத்தை வைத்தவர்.அது பற்றி பல நூல்களில் நிறைய எழுதியவர். பிறரை எந்த தயக்கமும் இல்லாமல் விமர்சித்தவர்வைணவ சம்பிரதாயத்திற்கு எதிர் என நினைத்தால் யாரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக தன் தரப்பை வைத்தவர். என் தந்தை நெற்றிக்கு ஶ்ரீசூரணம் மட்டும் இட்டு வந்ததை கடுமையான சுடு சொல் சொன்னவர். இப்போது தான் குளிக்க இயலாத காரணம் சொல்லி திருமண் இட முடியாவராகி இருக்கிறார். இங்கு காலம் என்ன சொல்ல வருகிறது என விளங்கவில்லை. பல வித மன நிலையில் குழப்பமும் திகைப்புமாக அவரது அறையை விட்டு வெளியே வந்தேன்


விடை பெற்று கிளம்பும் முன் அவரது மனைவியிடம் சொல்லிக் கொண்டேன். அவரது மனைவி வழமை போல எந்த உணர்வையும் வெளிக்காட்டாது நின்று கொண்டிருந்தார். அவரது உள நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.சாதாரன குடும்பத்தில் இருந்து இங்கு வந்து வாழ்கைப்பட்ட அவருக்கு எல்லா விஷயத்திலும் ஆச்சார அநுஷ்டானங்களை கொண்ட பெருமாள் ராமாநுஜத்துடன் வாழ்கையை பகிர்ந்து கொண்டது அவ்வளவு எளிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பல காரணங்களுக்காக அவரது கொள்கைகளை ஏற்றிருப்பவராக இருந்தாலும் அந்த பயணம் மிக நீண்டதாக மனத் தடைகள் கொண்டதாக பல விதமனச் சமாதனங்களின் அடிப்படையில் இருந்திருக்க வேண்டும். விடை பெறும் முன்பாக அவரிடம்என்ன சாப்பிடுகிறார்என்றேன்.“எல்லா விதமான காய் கறிகளைக் கொண்ட சூப்என்றார். அது ஒரு குறியீடு போல முகத்தை அறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...