https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 2 நவம்பர், 2022

மணிவிழா 13

 



ஶ்ரீ:



மணிவிழா - 13


02.11.2022





ஆன்மீகமும் அதன் அடுத்த படி நிலையான சம்பிரதாயமும்  தாய் தந்தை கைபிடித்து சொல்லி சொல்லி அழைத்து செல்வது . அது இனி எந்த குடும்பத்திலும் நிகழப் போவதில்லை. உலகியல் மற்றும் பொருளியல் நோக்கில் நோக்கி செய்து கொண்ட சமரசத்தால் அடைந்த விடுதலையால் இன்றைய வாழ்வியல் வெற்றிக்கு அவர்கள் தரும் விலைமரபு மற்றும் பண்பாட்டுடனான ஒரு தொடர்பை விடாது அதை செய்து இரண்டில் சமநிலையில் வைத்துக் கொள்ள போராடும் பல குடும்பத்தை பார்க்க முடிந்தாலும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கருவிகளான மதம் சார்ந்த புரிதல் குறைபாடு. இன்றை தென்னிந்திய குடும்பங்களில் இல்லை. மதம் ஒரு சடங்கு போல உருவகிக்கப்பட்டது அதை பிழை அதை கடந்து நவீன வாழ்கையில் எதிர் கொள்ளும் விடை அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கு ஏற்ற தத்துவ புரிதல் இல்லாமல் போனது துரதிஷ்டம். இந்தியாவில் தத்துவம் பேசாதவர் என ஒருவரும் இருக்க முடியாது. ஆனால் அதை வாழ்கையில் போட்டுப்பார்த்து அமைதி அடையும் பக்குவம் கொண்டவர்கள் எங்கோ அரிதினும் அரிதாக காணக் கிடைக்கலாம். வளம் மிக்க வாழ்க்கையிலும் அடந்த வெற்றிட வெறுமையால் உருவாகும் இடைவெளிகளை களைந்து கொள்ள  கார்ப்ரேட் சாமியார்களிடம் தஞ்சமடைகிறார்கள். அவர்கள் எந்த குருகுல மரபையும் சாராதவர்கள் என்பதாலும் தனிநபரை நம்பி இருப்பதாலும் எக்கணமும் அதன் தொடர்பு அறுந்து போகும் ஆபத்தும் கொண்டது.




















குடும்பத்து பெரியவர்கள் துவக்கத்தில் தங்கள் சொல்லுக்கு மரியாதையில்லை என ஆரம்பித்து தாங்கள் தனித்து விடப்பட்டதை உணரும் போது எல்லாம் முடிந்து போயிருக்கும். இன்று அவர்கள் எல்லா இடத்தை இழந்துள்ள நிலைக்கு காரணம் பொருளியல் வெற்றிக்காக அவர்கள் செய்து கொண்ட சமரசங்கள் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பிறர் மீது காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக மாறிக் கொண்டிருப்பார்கள்.

நவீன மருத்துவம் அளிக்கும் மேலதிக ஆயுள் நீட்டிப்பு காலத்தில் என்ன செய்வதென்று அறியாதவர்களாய் வாழ்கையை மேலும் வாழ்ந்து சிக்காலாக்கிக் கொண்டே செல்கிறார்கள். இந்த தலைமுறையினருக்கு தாய் தந்தையே ஒரு பொருட்டல்ல என்கிற இடத்திற்கு அவர்களின் பெற்றோர்களே பாதையமைத்துக் கொடுத்துவிட்டார்கள். பெற்றோரை கடந்தவர்களுக்கு பிறகு கடப்பதற்கு ஒன்றும் மிச்சமிருப்பதில்லை. ஒரு ஆரம்ப மன சமாதானம் பின் அங்கிருந்து பிறகு மீறல்களாக தோன்றுபவைகளை கடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்


ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழவால் துவக்கத்தில் மரபு சார்ந்து வகுப்புகள் நடத்த முடிந்தது ஆனால் அது மதம் சார்ந்து அதே ஆச்சார விசாரங்களை 

மையமாக கொண்டது. பிற சம்பிரதாயத்தை கடுமையாக மறுப்பது என ஐந்நூறு வருஷத்திற்கு முந்தைய புத்தகங்களை அடிப்படையாக கொண்டாத இருந்தது. இன்றைய உளச் சிக்கலுக்கு அது பதில் அளிப்பதில்லை என்பதுடன் நிகழ் காலத்தில் இல்லாத சச்சரவுகளை கேள்வி கேட்பதுடன். இருக்கும் சிக்கலை அறிந்து கொள்ளாது அதற்கு எந்த தீர்வையும் தராத சூழலில் அந்த வகுப்புகளில் மீது மெல்ல ஆர்வமிழந்து கொண்டிருந்தேன். பல சமயங்களில் வெறுப்படையும் மன நிலைக்கு சென்ற பிறகு எனது விலகல் அங்கிருந்து துவங்கியது. நான் வகுப்பை நிராகரிக்க ஆரம்பித்தேன். அந்தந்த அமைப்பும் தனி அதிகாரம் கொண்டதாக உருவாக்கி இருந்ததால் எனது விலகல் யாராலும் கவனிக்கப்படவில்லை என்பதுடன் அதை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க வகை செய்துவிட்டு ஒரு புள்ளியில் முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்